புதன், 1 செப்டம்பர், 2021

புத்தாக்க பயிற்சி எண் 3

 மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.

பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. கோவில் தூண்கள் சிற்பங்களால் அழகு பெறுகின்றன. தூண்களில் யாளி, சிங்கம், தாமரைமலர், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த வட்டங்கள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள், நுழைவுவாயில்கள் என அனைத்து இடங்களிலும் சிற்பங்கள் மிளிர்வதைக் காணமுடியும். பல்லவர் காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச்சிறந்த சான்றுகளாகும். கடற்கரையில் காணப்பட்ட பெரும் பாறைகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு அட்டவணையை நிரப்புக

 (எட்டுத்தொகை, மரவேர், கற்சிலை, மட்குடம், அகநானூறு, பத்துப்பாட்டு, பற்பொடி, பூங்கொடி, நிலமங்கை).

தோன்றல்     திரிதல்      கெடுதல்

எட்டுத்தொகை கற்சிலை  மரவேர்

புத்தாக்க பயிற்சி எண் 2

 மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. கொடுக்கப்பட்ட விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(எ.கா.) ஆய்வு என்பது அறிவின்வெளிப்பாடு 

வினா: அறிவின்வெளிப்பாடு எது?

1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா : _________________________________________________________?

2. உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று

இல்லை.

வினா : _____________________________________________________?

3. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக

மாற்றப்பட்டுள்ளன.

வினா : __________________________________________________________?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா : _____________________________________?

2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக.

 பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில்

அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத

கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக்

கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக்

கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ

அரும்பாடுபட்டார்; அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச்

சந்தித்தார். இறுதி மூச்சுவரை மூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து

மறைந்தார்.

வினாக்கள்

1. _____________________________?

2. _____________________________?

3. _____________________________?

4. _____________________________?

5. _____________________________ ?

புத்தாக்க பயிற்சி எண் 1

 உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

ஏறுதழுவுதல் என்பது தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு
பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல் ,மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருதுகட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு
எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று,
ஜல்லிக்கட்டு என்றாகியது. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக்
குறிக்கும். புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும்
வழக்கம் தற்போதும் உள்ளது. அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி
நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது.மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

வினாக்கள்

1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக.

 1. வளையம் 

2. சல்லி நாணயம்

 3.மஞ்சுவிரட்டு

4. பணமுடிப்பு 5.புழங்கிக்கொண்டிருந்த

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

2. சரியா? தவறா? என எழுதுக.

1. புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் பழக்கம் தற்போதும் உள்ளது.

2. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை.

3. ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகளில் எழுதுக.

______________________________________________________________

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு ______________.

5. ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக.

______________________________________________________________

______________________________________________________________

_____________________________________________________

புதன், 21 ஜூலை, 2021

பத்தாம் வகுப்பு இயல் மூன்று சிறு தேர்வு

         பத்தாம்வகுப்பு இயல் 3 

காலம்: 1.30மணி.         மதிப்பெண்கள்:30 

குறுவினாக்கள்.  5×2=10

1. விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக. 

வாருங்கள்; தங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி .

வந்து அமருங்கள்; தண்ணீர் அருந்துங்கள் 

நீங்கள் முன்னரே சொல்லி இருந்தால், உங்களை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்து வந்திருப்பேனே. 

தேநீர் சாப்பிடுங்கள்; கொஞ்சம் ஓய்வெடுங்கள்; உணவு தயாரானதும் அழைக்கிறேன்.

2.'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கிய செய்தி விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாக உங்கள் கருத்தை குறிப்பிடுக. 

விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத பொருள் அல்ல. மாறாக, விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்க வேண்டிய நல்ல மனநிலை வேண்டும். விருந்தினர்கள் எத்தனை முறை வந்தாலும் முதல் முறையாக உபசரிப்பதைப்போன்றே வரவேற்க வேண்டும். சங்ககாலத்தில் தேனும் திணை மாவும் கொடுத்து விருந்தினரை உபசரித்த செய்தியை இலக்கியத்தில் நாம் அறியலாம். விருந்தினர்களை உபசரிக்க பணம் தேவையில்லை. நம்மிடம் என்ன உள்ளதோ? அதைக் கொடுத்து முகமலர்ச்சியுடன் வரவேற்றாலே போதுமானது. 

3. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத் தொடரானது. அப்படியானால் 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்? 

சிரித்துசிரித்துப் பேசினார்

4. 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்'- இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக 

கூத்தனை ஆற்றுப்படுத்தும் கூத்தனொருவன் நன்னனின் புகழைக்கூறும் விதமாக இத்தொடர் அமைந்துள்ளது

தொடரின் பொருள் 

நெய்யில் வேகவைத்த பெரிய மாமிசத்துண்டுடன் திணைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் என்பதே இதன் பொருளாகும் 

இறடிப்பொம்மல் - தினைச்சோறு

5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை? 

பாரதியார் கவிஞர் -பெயர்ப் பயனிலை .

நூலகம் சென்றார் - வினைப் பயனிலை .

அவர் யார்? - வினாப் பயனிலை. 

                     பகுதி 2 

சிறுவினாக்கள்  4×5=20

1. "கண்ணே கண்ணுறங்கு 
காலையில் நீயெழும்பு   
மாமழை பொய்கையிலே
 மாம்பூவேகண்ணுறங்கு
 பாடினேன்தாலாட்டு 
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு"
 தாலாட்டு பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக

கண்ணே கண்ணுறங்கு -விளித்தொடர் 

காலையில் நீயெழும்பு - ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்.

மாமழை - உரிச்சொற்றொடர் 

மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் 

பாடினேன் - வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி -அடுக்குத்தொடர். 

2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப்பொருள்கள் யாவை? 

முல்லை நிலம் 

காடும் காடுசார்ந்த பகுதியும் முல்லை நிலமாகும்.

காட்டில் விளையும் செந்நெல், சாமை, கேழ்வரகு,கம்பு, சோளம் ,பயிறு வகைகள் ,தினை போன்றவையும் கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பால், இறைச்சி முதலியனவும் முல்லை நிலத்தின் உணவுப் பொருள்கள் ஆகும். 

மருத நிலம் 

வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருத நிலமாகும் 

உழவுத்தொழில் மூலம் கிடைக்கக்கூடிய நன்செய் நில உணவுகளான நெல் ,காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுசிறு நீர் நிலைகளில் கிடைக்கும் மீன்கள், மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால் மற்றும் பாலில் இருந்து கிடைப்பவை மருதநிலத்தின் உணவுப் பொருள்களாகும்.   

3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும அதில் தலை வைக்க திண்டும் அமைத்தனர் 

திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. 

இப்படியாக காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுதுக. 

இன்று வீட்டுக்குத்திண்ணை வைத்து கட்டுவதில்லை. அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதும் இல்லை.

காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. 

பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் உபசரித்து வழியனுப்பும் வரை விழா ஏற்பாட்டாளர்கள் செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதை காண முடிகிறது.

4.கூத்தனை கூத்தன் ஆற்றுப் படுத்தும் முறையை கூத்தராற்றுப்படை எப்படிக் காட்டுகிறது? 

கூத்தன் தான் பெற்ற செல்வத்தை கூறி எதிர் வந்த கூத்தனிடம் நீயும் அவ்வள்ளலை நாடினால்  என்னைப் போன்று செல்வம் பெற்று வளமோடு வாழலாம் என வழிப்படுத்துவதேகூத்தராற்றுப்படை ஆகும். 

நன்னனைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம், "நீங்கள்செல்லும் வழியில் மலைப்பக்கத்தில் புதுவருவாயுடைய கானவர்களின் சிற்றூர் அமைந்திருக்கும். இது மானமும் வலியமுயற்சியுடன் போர்புரியும் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டது. அவ்வூரில் சென்று'நன்னனின் கூத்தர்கள்' என்று கூறுங்கள். அவர்கள், உங்களை தங்கள் உறவினர்கள் போல் வரவேற்று இனியசொற்களைக் கூறி, உங்களின் களைப்பு நீங்கும் படி, நீங்கள் உண்பதற்குப் பெரிய மாமிசத்துண்டையும் தினைச்சோற்றையும் தந்து வரவேற்பார்கள். இப்பாடலில் நன்னனின் வீரத்தையும் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிகழும் விருந்தோம்பல் பற்றியும் விளக்கி கூத்தனை வழிப்படுத்தல் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 





திங்கள், 12 ஜூலை, 2021

பத்தாம் வகுப்பு சிறு தேர்வு வினாத்தாள்

                       பத்தாம் வகுப்பு 

                        தமிழ்-சிறுதேர்வு 

அ. ஐந்து வினாக்களுக்கு விடையளி 

1. வேங்கை என்பதனைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!-இத்தொடரில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சிய காப்பியங்களின் பெயர்களை எழுதுக.   

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல தாறுவாழைப் பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன. 

மேற்கண்டதொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. " உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் "   இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகை யைச்சுட்டி அதன் இலக்கணம் தருக.

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. 

ஆ. நான்கு வினாக்களுக்கு விடையளி. 

6. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? 

7. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'-இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க. 

8. அறிந்தது, அறியாதது, புரிந்தது ,புரியாதது,தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும்.

    இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக. 

9. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக

சனி, 10 ஜூலை, 2021

பத்தாம் வகுப்பு இயல் 1 சிறு தேர்வு

1.வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக. 
வேங்கை என்பது தனி மொழியாகி புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும். 
வேம்+ கை எனத்தொடர்மொழியாகப் பிரிந்து வேகின்ற கை என பொருள் தரும். 
------------------------+++----------------------------- 
2. மன்னும் சிலம்பே மணிமேகலை வடிவே! 
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! 
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக. 
இப்பாடலில் இடம்பெற்ற ஐம்பெருங் காப்பியங்கள் 'சிலப்பதிகாரம் மணிமேகலை'. 
எஞ்சிய காப்பியங்கள்:
சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. 
-----------------------------+--------------------------
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 
-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக. 
சரியான தொடர்கள்:
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 
பிழையான தொடர்: 
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 
பிழைக்கான காரணம்: 
தாறு - வாழைக்குலை சீப்பு - வாழைத்தாற்றின் பகுதி. எனவே, வாழைத்தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும். 
---------------------------------------------------------- 
4.உடுப்பதூஉம் உண்பதூஉம் கானின் பிறர்மேல் வடுக்காண்வற்றாகும் கீழ்''-
-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக. 
அளபெடையின் வகை: இன்னிசை அளபடை.
இலக்கணம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசை காக குறில் நெடிலாக மாறி, அளவெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். 
-------------------------------------------------------------
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. 
இசை விமரிசகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். 
ஒரு முறை ஒரு பெரிய வித்வான் உடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது 'அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்" என்று சிலேடையாகக் குறிப்பிட்டார். 
------------------------------------------------------------
சிறுவினாக்கள்
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? 
தமிழன்னையை வாழ்த்துதல்
தமிழன்னைஅன்னை மொழி யானவள். 
அழகாய் அமைந்த செழுந்தமிழானவள் . 
பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி. 
கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள். 
பாண்டிய மன்னனின் மகள். 
திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள். 
பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும், நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள். 
அதனால் பொங்கி எழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார். 
--------------------------------------------------------------

2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. 
1. வயலில் நெல்நாற்று நட்டனர். 
2. சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது. 
3. வாழைக்குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன். 
4. வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன். 
5. குளக்கரையில் பனைவடலியைக் கண்டேன். 
------------------------------------------------------------ 
3. அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம் அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும் - இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்று களை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக. 
அறிந்தது -அறிதல், புரிந்தது -புரிதல், தெரிந்தது-தெரிதல், பிறந்தது -பிறத்தல், 
அழியாதது- அறியாமை , புரிந்தது-புரியாமை, தெரியாதது -தெரியாமை, பிறவாதது- பிறவாமை. 
-------------------------------------------------------------- 
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.


திங்கள், 5 ஜூலை, 2021

பத்தாம் வகுப்புஇயல் 2 சிறுவினாக்கள்

1. சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக் காற்று :  வணக்கம் செயற்கை காற்றே!

மின்விசிறிக்காற்று : வணக்கம் .

சோலைக் காற்று : நான் இல்லாவிட்டால் நீ இல்லை தானே?

மின்விசிறிக்காற்று : நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சாரம் இல்லாவிட்டால் நான் இல்லை

சோலைக் காற்று : நீ ஏன் வெப்பத்தையே கொடுக்கிறாய்

மின்விசிறிக்காற்று : அது என்னால் இல்லை. நான் மனிதனால் படைக்கப்பட்டவன் என் நிகழ்வுகள் அனைத்திற்கும் மனிதனே காரணம்

சோலைக் காற்று : நீ மனிதர்களுக்கு உடல் கேடுகளை உண்டாக்குகிறாய் 

மின்விசிறி காற்று : உன்னைப்போல் இயற்கையாக நானில்லையே! 

2. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக

மழை நின்றவுடன் மெல்லிய காற்றின் குளிர்ச்சியை உணர்கிறேன் ஜன்னல் வழியே தெரியும் மரக்கிளைகளின் இலைகளில் இருந்து சொட்டும் நீர்;மேகம் நிறைந்த நீல வானம்; மழை நீர் தேங்கிய குட்டையில் சிறுவர்கள் குதித்து விளையாடும் சப்தங்கள்; மழையில் நனைந்தபறவைகளின்கிசுகிசுப்பு ;கிராமியச்சூழல் தெருவில் ஓடும் நீரில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்தல் மழைச்சாரலோடு மண்வாசனை இத்தனையும் இயற்கை வண்ணமே.






பத்தாம் வகுப்பு இயல் இரண்டு வினா விடைகள்

 குறுவினா 

1. 'நமக்கு உயிர் காற்று 
   காற்றுக்கு வரம் மரம்- மரங்களை 
  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்
'

-இதுபோன்று உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்க தொடர்களை எழுதுக. 

மரம் வளர்ப்போம்! தூய காற்றைப் பெறுவோம்! 

உயிர்வளிபெற மரங்களுக்கு உயிர் கொடுப்போம். 

2. வசன கவிதை- குறிப்பு வரைக. 

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

3. தண்ணீர் குடி தயிர் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர் களை விரித்து எழுதுக தொடரில் அமைக்க

தண்ணீர் குடி -தண்ணீரைக் குடி 

தயிர்க்குடம்- தயிரை உடைய குடம் 

காலை எழுந்தவுடன் தண்ணீரைக் குடி.

தெருவில் பெண்ணொருத்தி தயிரைஉடையகுடத்தைச் சுமந்து சென்றாள். 

4.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக. 

தம்பி அழாதே! பெற்றோர் விரைவில் வந்து விடுவர்.

பெற்றோர் வரும்வரை நாம் இருவரும் இணைந்து விளையாடலாம். 

உனக்கு தேவையான இனிப்புகளை அண்ணன் வாங்கித் தருகிறேன். 

5.மாஅல் பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக. 

மாஅல் - திருமால் 

இலக்கணக்குறிப்பு-செய்யுளிசை அளபெடை . 

ஆ)சிறுவினாக்கள் 

1.உயிராக நான், பல பெயர்களில் நான் நான்கு திசைகளிலும் நான் இலக்கியத்தில் நான் முந்நீர் நாவாய் ஓட்டி யாக நான் முதலிய தலைப்புகளில் காற்று தன்னை பற்றி பேசுகிறது இவ்வாறு நீர் தன்னை பற்றி பேசினால் உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக. 

அமிழ்தமாக நான் , ஆற்றலாக நான், உலக உயிர்களுக்கு ஆதாரமாய் நான், பல நிறங்களில் நான், முந்நீராய் நான், உணவாய் உற்பத்திப் பொருளாய் நான்... என நீர் தன்னைப் பற்றிப்பேசும். 

-------------------------------------------------------------

2.சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக் காற்று :  வணக்கம் செயற்கை காற்றே!

மின்விசிறிக்காற்று : வணக்கம் .

சோலைக் காற்று : நான் இல்லாவிட்டால் நீ இல்லை தானே?

மின்விசிறிக்காற்று : நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சாரம் இல்லாவிட்டால் நான் இல்லை

சோலைக் காற்று : நீ ஏன் வெப்பத்தையே கொடுக்கிறாய்

மின்விசிறிக்காற்று : அது என்னால் இல்லை. நான் மனிதனால் படைக்கப்பட்டவன் என் நிகழ்வுகள் அனைத்திற்கும் மனிதனே காரணம்

சோலைக் காற்று : நீ மனிதர்களுக்கு உடல் கேடுகளை உண்டாக்குகிறாய் 

மின்விசிறி காற்று : உன்னைப்போல் இயற்கையாக நானில்லையே!  

-------------------+++++---------------------------------

3. தோட்டத்தில் மல்லிகை பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் தொட்டியில் குடி நீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள். 

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக. 

பூங்கொடி - அன்மொழித்தொகை (பூங்கொடியாகிய பெண் )

ஆடு மாடுகள் - உம்மைத்தொகை (ஆடும் மாடுகளும் )

குடிநீர் - வினைத்தொகை 

சுவர்க்கடிகாரம் -இருபெயரொட்டுப் பண்புத்தொகை 

மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத்தொகை. 

------------------------------------------------------------

4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக

மழை நின்றவுடன் மெல்லிய காற்றின் குளிர்ச்சியை உணர்கிறேன் ஜன்னல் வழியே தெரியும் மரக்கிளைகளின் இலைகளில் இருந்து சொட்டும் நீர்;மேகம் நிறைந்த நீல வானம்; மழை நீர் தேங்கிய குட்டையில் சிறுவர்கள் குதித்து விளையாடும் சப்தங்கள்; மழையில் நனைந்தபறவைகளின்கிசுகிசுப்பு ;கிராமியச்சூழல் தெருவில் ஓடும் நீரில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்தல் மழைச்சாரலோடு மண்வாசனை இத்தனையும் இயற்கை வண்ணமே






வியாழன், 17 ஜூன், 2021

பத்தாம் வகுப்பு இயல் 1 சிறுவினாக்கள்

 சிறுவினாக்கள் 

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை? 

  • தமிழன்னை அன்னை மொழி யானவள் 
  • அழகாய் அமைந்த செழுந்தமிழானவள் 
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி 
  • கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள் 
  • திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள் 
  • பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும் நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள் அதனால் பொங்கியெழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார்.
  • 2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க.
  • வயலில் நெல் நாற்று நட்டனர் 
  • சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது.
  • வாழைக் குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன்.
  • வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன்.
  • குளக்கரையில் பனைவடலியைக் ககண்டேன்3. 3.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக



இயல்1 குறுவினாக்கள்

 குறுவினாக்கள் 

1. ''மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே'' 

இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை.

எஞ்சிய காப்பியங்கள்

 சீவக சிந்தாமணி

 வளையாபதி 

குண்டலகேசி 

2. வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

வேங்கை என்பது தனி மொழியாகி புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும்.

வேம் + கை என தொடர் மொழியாகிப் பிரிந்து 'வேகின்ற கை' எனப் பொருள் தரும்.

இது தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால் இது பொதுமொழி எனப்படும். 

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன .

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களை சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக

சரியான தொடர்கள்

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

பிழையான தொடர்

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 

பிழைக்கான காரணம் 

தாறு-வாழைக்குலை, சீப்பு- வாழைத்தன் பகுதி எனவே வாழைத்தாற்றில் தான் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும்.

4.''உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்''- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக. 

அளபெடையின் வகை: இன்னிசை அளபடை 

இலக்கணம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசை காக அளவெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக இசைவிமரிசகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்

ஒருமுறை ஒரு பெரிய வித்துவான் உடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது ''அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்'' என்று சிலேடையாகக் குறிப்பிட்டார்.

சனி, 5 ஜூன், 2021

எழுத்து சொல் -வினா விடைகள்

 1.செய்யுளிசை அளபெடை- சான்றுடன் விளக்குக.

செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்யும் பொருட்டு உயிர் நெடில் எழுத்துக்கள் தனக்குரிய அளவிலிருந்து நீண்டு ஒலிக்கும். இதனையே "செய்யுளிசை அளபெடை" என்கிறோம்.

எ.கா

உழாஅர்-இச்சொல்லில் 'ழா' என்ற நெடில் தனக்குரிய அளவில் இருந்து நீண்டு ஒலிக்கிறது எனவே இதனை  செய்யுளிசை அளபெடை எனலாம்.

2. இன்னிசை அளபடை- சான்றுடன் விளக்குக.

செய்யுளில் இனிய இசைக்காக உயிர்க்குறில் எழுத்துக்கள் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும்.

எ.கா

கெடுப்பதூஉம்-இச்சொல்லில் 'து' என்னும் குறில் 'தூ' என்னும் நெடிலாக மாறி(தூஉ)  அளபெடுத்து இருக்கிறது. எனவே இதனை இன்னிசை அளபடை எனக் கூறலாம்.

3. சொல்லிசை அளபெடை சான்றுடன் விளக்குக

செய்யுளில் ஓசை இசை நிறைவாக இருக்கும் போது ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி அளவெடுப்பதை சொல்லிசை அளபெடை எனப்படும்.

எ.கா

தழீஇ-இச்சொல் அளபெடுக்கும் போது பெயர்ச் சொல்லில் இருந்து வினைச்சொல்லாக மாறுகிறது. இதுபோல செய்யுளில் ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி அளவெடுப்பதை சொல்லிசை அளபெடை என்கிறோம்.


செவ்வாய், 25 மே, 2021

முதியோர்க்கல்வி, முதியோர்கல்வி எது சரி?

                                 

 பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய் வலி வரின் இயல்பாம்் ஆவி ய ர முன் வன்மைமிகா சில விகாரமுமாம் உயர்திணை(நன்னூல்:159) 

ய,ர, உயிரெழுத்துகளை ஈறாகக் கொண்ட உயர்திணைப்பெயர்கள் முன் வல்லினம் மிகாது.

முதியோர்+கல்வி 

இதில் நிலைமொழியின் ஈற்றில் ரகரமெய் வந்து,வருமொழி முதலில் வல்லினம் (க) வந்துள்ளது. மேற்சொன்ன சூத்திரப்படி, முதியோர் உயர்திணைப்பெயராக இருப்பதால் வல்லினம் மிகாமல் இயல்பாகவே புணரும்.

குழந்தை காப்பகம்,குழந்தை கை,

என்பதும் வல்லினம் மிகாமல் இயல்பாகவே வரும்.

 

குமரக்கோட்டமா?குமரகோட்டமா?

 பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்று மெய் வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன் வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை(நன்னூல்:159)

என்ற சூத்திரத்தின் படி, உயர்திணைப் பெயர்கள் இறுதியில் மெய்யெழுத்தை கொண்டிருந்தால், அதன் முன் வல்லினம் வரினும் இயல்பாகவே புணரும். சான்று:குமரன்+கோட்டம்-

உயிர், ய,ர நிலைமொழியின் ஈறானால் வலிமிகுந்தும்,மிகாமலும் இருவழியில் புணரும். சான்று:குமரன்+கோட்டம்-குமரக்கோட்டம் என ஈற்று மெய் நீங்கி வலிமிகுந்து புணரும். குமரகோட்டம் என ஈற்று மெய் மட்டும் நீங்கி வலி மிகாமல் குமரகோட்டம் என இயல்பாகவும் புணரும். 

இன்னொரு விதி: 

புணர்ச்சி என்பது தமிழ்ச்சொற்களுக்குரியது. புணரக்கூடிய சொற்களில் நிலைமொழியோ வருமொழியோ வடசொல்லாகவிருப்பின் புணர்ச்சியிலக்கணம் பொருந்தாது. 

சான்று: 

சூரியன்+ உதயம் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே விதிப்படி 'சூரியனுதயம்' ஆகாது.

சூரிய+உதயம்(விதியீறாக உயிர் நிற்கிறது. இடையில் உடம்படுமெய்  தோன்றி சூரியவுதயம்' ஆகாது. 

இடையில் ஓகாரம் தோன்றி 'சூரியோதயம்' என்றாகும். 

இதைப்போன்றே, 

சிவன் என்பது தமிழ்ச்சொல்லன்று .ஷிவா என்னும் வடசொல்லின் திரிபு. பெருமான் தமிழ்ச்சொல். இரண்டும் புணரும்போது தமிழுக்குரிய புணர்ச்சி செயல்படாது. 

சிவன்+பெருமான் -சிவபெருமான் என்றும்

சிவன்+ குமார் இதில் இரண்டுமே வடசொல். இவை புணரும் போது சிவகுமார் என்றும் புணரும். 

இதில் திட்டமான விதிகள் கிடையாது.நன்னூலில் இதுகுறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



சனி, 22 மே, 2021

மூன்றாம் வேற்றுமையில் வல்லினம் மிகுதல்

 மூன்றாம் வேற்றுமையும் வல்லினம் மிகுதலும் 

மூன்றாம் வேற்றுமையானது மூன்று பொருள்களில் வரும்.

               *கருவிப்பொருள் 

               *கருத்தாப்பொருள் 

               *உடனிகழ்ச்சிப்பொருள்


ஆல்,ஆன்,ஒடு,ஓடு என்பன மூன்றாம் வேற்றுமையுருபுகள்.இதில் ஆல்,ஆன் உருபுகள் கருவிப்பொருளுக்கும்,கருத்தாப்பொருளுக்கும் வருவன. ஒடு,ஓடு உடனிகழ்ச்சிப்பொருளுக்கு வருவன.

சான்று

எழுதுகோலால் எழுதினேன்(கருவிப்பொருள்- ஆல் உருபு)

வாளான் வெட்டினான்(கருவிப்பொருள்-ஆன் உருபு) ஆன் உருபுப்பயன்பாடு தற்காலப் பயன்பாட்டில் இல்லை.இது செய்யுள் நடையில் வரும்.

சான்று:புறந்தூய்மை நீரான் அமையும்

கருத்தாப்பொருள்

             *இயற்றுதல் கருத்தா 

             *ஏவுதல் கருத்தா 

என இருவகைப்படும்.

சிற்பியால் சிலை செதுக்கப்பட்டது.(இயற்றுதல் கருத்தா) இதில் செயலைச்செய்பவன் சிற்பி.

கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது(ஏவுதல் கருத்தா) இதில் கரிகாலன் செயலைச்செய்யவில்லை. செயலைச்செய்ய  ஏவுகிறான்.

இத்தகைய கருத்தாப்பொருளுக்கு ஆல்,ஆன் உருபுகளே வரும். 

மன்னனான் கோவில் கட்டப்பட்டது.(ஆன் உருபு)

ஆன்-உருபு தற்காலப்பயன்பாட்டில் இல்லை.

இராமனோடு சீதையும் வந்தாள்(உடனிகழ்ச்சிப்பொருள்)

'வந்தாள்' என்ற பயனிலை சீதைக்கு மட்டும் உரியது. இந்த நிகழ்வில் இராமனும் உடன் இணைந்ததால்,உடனிகழ்ச்சிப்பொருள் பெற்றது.

உடனிகழ்ச்சிப்பொருள் ஒடு,ஓடு உருபுகளைப்பெறும்.

குதிரையொடு குட்டியும் வந்தது(ஒடு உருபு) 

தற்காலத்தில் ஓடு உருபு பயன்படுத்துமளவு ஒடு உருபைப்பயன்படுத்துவதில்லை.

ஆல்,ஆன்,ஒடு,ஓடு  உருபுகளைத்தவிர சில சொற்களும் உருபுகளின் தன்மைபெறும்.இவற்றை 'சொல்லுருபுகள்' என்பர்.

கொண்டு,உடன் என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.

தற்காலத்தில் கூட, வைத்து உருபுகளும் பயன்படுத்தப்படுகிறது.

வாள்கொண்டு வெட்டினான்.

ஆசிரியருடன் மாணவர்கள் வந்தனர்.

கத்திவைத்து அறுத்தான்.

கண்ணன்கூட நானும் வந்தேன்.

மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

கைதொழுதான்-இது கையால் தொழுதான் என்று இருக்க வேண்டும். இங்கே 'ஆல்' உருபு மறைந்து வந்துள்ளது. எனவே ,இது மூன்றாம் வேற்றுமைத்தொகை. இது போன்ற, மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

கையால் தொழுதான். 

மரத்தால் செய்தான்.

இதில் மூன்றாம் வேற்றுமை உருவானது வெளிப்பட்டு நிற்கிறது. மறையாமல் வெளிப்பட்டு நிற்பதால், இதனை வேற்றுமை விரி என்கிறோம். இது போன்ற மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

மரச்சிலை - மரத்தால் ஆன சிலை

இதில் 'ஆல்' என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், 'ஆன' என்ற பயனும் மறைந்திருக்கிின்றன. எனவே, இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை எனப்படும்.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

சான்றுகள்:

வெள்ளிக்கிண்ணம், மரப்பெட்டி 

வேற்றுமைத்தொடர்-2 

இராம்முருகன்




வியாழன், 20 மே, 2021

உடம்படுமெய்ப்புணர்ச்சி

 உடம்படுமெய்ப்புணர்ச்சி

------------------------------------------++

இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியின் இறுதி யெழுத்தாக உயிரெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தாக உயிரெழுத்தும், இருந்தால் இந்த இரண்டு சொற்களும் இணையாது. இணையாத  இரண்டு உயிரெழுத்துக்களை இணைத்து வைக்கும் பொருட்டு, உடன்படுத்தும் பொருட்டு ய்,வ் என்ற இரண்டு மெய்யெழுத்துகள் தோன்றும். இவ்வாறு இணையாத எழுத்துக்களை உடன்படுத்துவதற்காக தோன்றக்கூடிய இந்த இரண்டு மெய்யெழுத்துகளையும் 'உடம்படுமெய்யெழுத்துகள்' என்று வழங்குவர்.

"இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும்;ஏ முன் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்."

அதாவது நிலை மொழி இறுதியில் இ,ஈ,ஐ எழுத்துகள் வந்து, வருமொழியின் முதல் எழுத்தாக உயிரெழுத்துகளில் பன்னிரண்டு எழுத்துகளில் ஏதேனும் ஒன்று வந்தால், இந்த இரண்டு சொற்களும் இணையும்போது இடையில் 'யகர' மெய் தோன்றும்.சான்று: மணி+அடித்தது-(மணி+ய்+அடித்தது)-மணியடித்தது.(மணி-மண்+இ)

தீ+எரிந்தது-(தீ+ய்+எரிந்தது)-தீயெரிந்தது(தீ-த்+ஈ) 

வேலை+எறிந்தான்-(வேலை+ய்+எறிந்தான்)-வேலையெறிந்தான்(லை-ல்+ஐ)

இ, ஈ ,ஐ இந்த மூன்று உயிர்களைத்தவிர்த்துப்பிற  உயிரெழுத்துகள் வந்தால் 'வகரமெய்' தோன்றும்.

சான்று:கோ+இல்-(கோ+வ்+இல்)-கோவில்

நிலைமொழியின் இறுதியில் 'ஏ' வரின் யகரமெய்யும், வகரமெய்யும் தோன்றும். 

சான்று: சே+அடி-சேயடி,சேவடி.

-புணர்ச்சித்தொடர் 1

இரண்டாம் வேற்றுமை

 "வேற்றுமையில்  வல்லினம் மிகுதலும், மிகாமையும்"


பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் 'பொருளை' வேறுபடுத்துவது 'வேற்றுமை' எனப்படும். வேற்றுமையில் 'உருபு' முதன்மையானதன்று; பொருளே முதன்மையானது. 


இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்திருப்பது 'தொடர்' எனப்படும். தொடரென்பது ஒருசொல் தன்மையது. தொடரை அவசியமான காரணமின்றி அதாவது பொருள்தெளிவுக்கன்றிப்-பிரித்தல் கூடாது.

இரண்டாம் வேற்றுமைத்தொகை

இரண்டாம் வேற்றுமைத்தொகையானது ஆறு பொருள்களில் வரும்.

              *ஆக்கல் 
              *அழித்தல்
              *அடைதல்
              *நீங்கல் 
              *ஒத்தல் 
              *அடைதல்

சிலையைச்செய்தான்.(ஆக்கல்)

எதிரியைக்கொன்றான்.(அழித்தல்)

சென்னையை அடைந்தான். (அடைதல்

ஊரைக்கடந்தான்.(நீங்கல்

குமரனைப்போன்றவன் முகமது. (ஒத்தல்

செல்வத்தைப்பெற்றான். (உடைமை)

ஒருதொடரில் வேற்றுமையுருபு வெளிப்பட்டுவந்தால், அது 'வேற்றுமை விரிநிலைத்தொடர்' எனப்படும்

சான்று:புத்தகத்தைப்படித்தான்

ஒருதொடரில் வேற்றுமையுருபு மறைந்து(தொக்கி) வந்தால், அது 'வேற்றுமைத்தொகைநிலைத்-தொடர்' எனப்படும். (சான்று; சிலைதிறப்பு. )தொகையை எக்காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது. ஒருதொடரில் வேற்றுமையுருபும் பயனும் மறைந்துவந்தால் அது, 'வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை' எனப்படும். (சான்று:தயிர்க்குடம்-தயிரை உடைய குடம்)

இருசொற்கள் புணருவதாலே வல்லினம் மிகுகிறது. புணர்ச்சியினால் தோன்றிய ஒற்றினை  நிலைமொழியின் ஈற்றில் நிறுத்திவிட்டு, புணர்ந்த வருமொழியை பிரித்து தனிச்சொல்லாக எழுதுவது, பொது இலக்கணத்திற்கும், புணர்ச்சியிலக்கணத்திற்கும் முரணானது என்பதை நினைவில் நிறுத்துக.(தயிர்க் குடம் - எனப்பிரித்து எழுதுவது தவறு. தயிர்க்குடம் என இணைத்தே எழுதவேண்டும்)

இரண்டாம் வேற்றுமையின் பொருள் 'செயப்படுபொருள்' இது  எழுவாயை, செயப்படுபொருளாக மாற்றுகிறது.இதன் வேற்றுமையுருபு "ஐ" என்றவொன்றே.  "ஐ" என்னும் எழுத்துரு வெளிப்பட்டு வராது. ஐகாரத்தின் உயிர்மெய்யானது, சொல்லின் ஈற்றில்வரும். இரண்டாம் வேற்றுமை வினைச்சொல்லைமட்டுமே ஏற்கும். அதாவது, வினைச்சொல்லுடன்மட்டுமே புணரும்; அப்புணர்ச்சி காரணமாக வல்லினம் மிகும். இரண்டாம்வேற்றுமையருபை அடுத்து, பெயர்ச்சொல் வரலாம்; ஆனால், புணராது.

(சான்று: ஓவியத்தை கண்ணன் வரைந்தார்)


* "குமரா, தண்ணீர்குடி". 'தண்ணீர்குடி' என்னுந்தொடர் 'இரண்டாம்வேற்றுமைத்தொகை' ஆகும். ஏனெனில், இடையில் ஐ-உருபுமறைந்துள்ளது.வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க. எனவே,இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.


* "குமரன் தண்ணீரைக்குடித்தான்". இதில் இரண்டாம்வேற்றுமையுருபு "ஐ" வெளிப்பட்டு வந்துள்ளதைக்காண்க. அதனால் ககரவொற்று (க்) மிகுந்தது. எனவே, இரண்டாம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகும்.

"தயிர்க்குடம்". இதன்பொருள் 'தயிரை உடைய குடம்' என்பதாம். இதில் "ஐ" உருபும், உடைய என்ற பயனும் மறைந்துவந்துள்ளன. ஆகவே, இது 'இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை' ஆகும். இதில் ககரவொற்று (க்) மிகுந்துள்ளதைக்காண்க. எனவே, இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.




நான்காம் வேற்றுமை

 வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.


33. நான்காம் வேற்றுமையின் பொருள், "இதற்கு இது" என்று வருவது. அதாவது கோடற்(கொடை)பொருள்; கோடல் = கொடுப்பதை ஏற்றுக்கொள்வது.

இதன் உருபு "கு" ஆகும். ஆக, பொருட்டு என்பன சொல்லுருபுகள். 

4-ஆம் வேற்றுமை முதன்மையாகக்கீழ்க்கண்ட ஏழுபொருளில்வரும்.

∆ கொடை : முல்லைக்குத்தேரினை ஈந்தான் பாரிவள்ளல்.

∆ பகை: தமிழுக்குப்பகை ஆரியம்.

∆ நட்பு: குமரனுக்கு நண்பன் வளவன்.

∆ தகுதி: கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்.

∆ அதுவாதல் = தயிருக்குப்பால் வாங்கினான். (பாலே தயிராக மாறுகிறது. இதுவே அதுவாதல்.)

∆ பொருட்டு = "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" .

∆ முறை: சேரன் செங்குட்டுவனுக்குத்தம்பி இளங்கோவடிகள்.  


4-ஆம் வேற்றுமை பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டையும் ஏற்கும்.

* "கூழுக்குப்பாடினாள் ஔவை பாட்டி". இதில் 4-ஆம் வேற்றுமையுருபு "கு" வெளிப்பட்டு வந்துள்ளதால், இது 4-ஆம் வேற்றுமை விரிநிலைத்தொடர் எனப்படும். இதில் ஒற்று மிகுந்துள்ளதையும் காண்க. எனவே,  4-ஆம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகும். "அறியாமல் செய்தாலும் தவறுக்குத்தண்டனை உண்டு", என்பது மற்றொரு எடுத்துக்காட்டாகும். முன்னதில் வினைையையும், பின்னதில் பெயரையும் ஏற்று, வல்லினம் மிகுந்ததைக்காண்க.


* "வள்ளிக்குத்திருமணம்" என்னும் 4-ஆம் வேற்றுமைவிரியின், தொகைநிலைத்தொடர்  "வள்ளித்திருமணம்" என்பதாம். 4-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகுந்திருப்பதைக்காண்க. எனவே,   4-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.


* " நான் கோழித்தீவனம் வாங்கி வருகிறேன்". இதில் "கோழித்தீவனம்' என்னுந்தொடர், 'கோழிக்கு உரிய தீவனம்' என, 4-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையாக விரியும். இதில் வல்லினம் மிகுந்திருப்பதைக்காண்க. எனவே, 4-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.


ஆக, 4-ஆம் வேற்றுமை விரி, தொகை, உருபும் பயனும் உடன்றொக்கத்தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகும்.


* சொல்லுருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

∆ ஆக - எதற்காகப்பொய் சொல்லவேண்டும்?

∆ பொருட்டு - அன்பின்பொருட்டு மன்னிக்கிறோம்.


34. ஐந்தாம் வேற்றுமையின் பொருள்கள் நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது  என்பனவாம். "இல்", "இன்"‌ என்பன இதனுருபுகள். இருந்து, காட்டிலும், நின்று, பார்க்கிலும், விட முதலானவை சொல்லுருபுகள்.

∆ நீங்கல்:

* தலையின் இழிந்த முடி.

* மலையின்வீழ் அருவி.

∆ ஒப்பு:

* மலையினும் மாணப்பெரிது.

* கரும்பின் உயர்ந்தசுவை தேன்.

∆ எல்லை:

* இந்தியாவின் வடக்கு இமயம்.

* இந்தியாவின் தெற்கு கன்னியாக்குமரி.

∆ ஏது (காரணம்): 

* கல்வியில் பெரியன் கம்பன்.

* அருளில் மிக்கவர் வள்ளல்பெருமான்.


சொல்லுருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

∆ இருந்து - வீட்டிலிருந்து போனான்.

∆ காட்டிலும் - தாயைக்காட்டிலும் அன்பில் மிக்கார் யாவர்?

∆ நின்று - அருவி மலையினின்று வீழ்கிறது.  .

∆ பார்க்கிலும் - வடவரைப்பார்க்கிலும தென்னவர் முன்னேறியவர்.

∆ விட - உயிரைவிட‌ மானம் பெரிது.

 

5-ஆம் வேற்றுமையுருபுகள் எல்லைப்பொருளில் பெயர்ச்சொற்களைமட்டுமே ஏற்கும் என்பதை நினைவில்கொள்க. ஏனைய நீங்கல், ஒப்பு, ஏது பொருள்களில் வினைச்சொற்களை ஏற்கும்.


* "தாய்மொழியில் பேசு", என்பது 5-ஆம் வேற்றுமை  விரிநிலைத்தொடராகும். இது தொகையாகும்போது "தாய்மொழிபேசு" என்றாகும். ஈரிடத்தும் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க. எனவே, 5-ஆம் வேற்றுமைத்தொகையிலும், வேற்றுமைவிரியிலும் வல்லினம் மிகாது.


5-ஆம் வேற்றுமைவிரியில் "விட" என்னும் சொல்லுருபு வெளிப்பட்டு வரும்போது வல்லினம் மிகும்.

* விட - மாணவர்களே, கல்வியைவிடப்பெரியது எது?


* "தாய்மொழிக்கல்வி அறிவை வளர்க்கும்". இது "தாய்மொழியில் கற்பிக்கப்படும் கல்வி" என்பதாக, 5-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையாக விரியும். இதில் ககரமெய் (க்) மிகுந்திருப்பதைக்காண்க. எனவே, 5-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும். 'பழச்சாறு'  என்பது பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாறு' எனவிரியும். கனிச்சாறு, வாய்ப்பாட்டு முதலானவை இதரசில எடுத்துக்காட்டுகள்.



ஆறாம் வேற்றுமை

 வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.


35. ஆறாம் வேற்றுமையின் பொருள் "கிழமை" என்பதாம். கிழமை = உரிமை, உடைமை.


இதன் உருபுகள் "அது", "ஆது", "அ" என்பன. இதில் "அது", "ஆது" ஆகியன ஒருமைக்கும், "அ" என்பது பன்மைக்கும் வரும். இம்மூன்றும் அஃறிணைக்கு உரியன. இதில் "ஆது", "அ" என்பன தற்போது பயன்பாட்டில் இல்லை. "உடைய" என்பது சொல்லுருபு.


மனித உறுப்புகளை தனித்தனியாகச்சுட்டும்போது, அவ்வுருப்புகள் அஃறிணையாகவே கருதப்படும். எடுத்துக்காட்டுகள்:

* எனது கை. ✓ சரி.

* எனாது கை. ✓ சரி.(தற்கால பயன்பாட்டில் இல்லை)

* என கைகள். ✓ சரி. என்+அ= என.

* 'பாம்பறியும் பாம்பின கால்'. பாம்பின என்பதில் "அ" விகுதி பன்மைக்கான,  6-ஆம் வேற்றுமையுருபு . கால்கள்  எனப்பொருள்தரும்.  (தற்கால பயன்பாட்டில் இல்லை).


"உடைய" என்னுஞ்சொல்லுருபு இருதிணைக்கும் (உயர்திணை, அஃறிணை), இருமைக்கும் (ஒருமை, பன்மை) வரும்.

* என்கை. ✓சரி.

* என்கைகள். ✓சரி.

* என்மக்கள். ✓ சரி. இவைகள் "உடைய" என்னுஞ்சொல்லுருபு மறைந்துவரும்  6-ஆம் வேற்றுமைத்தொகைகள்.

* என்னுடைய புத்தகம். ✓சரி.

* என்னுடைய புத்தகங்கள். ✓சரி.

* என்னுடைய பெற்றோர். ✓சரி.

* என்னுடைய மக்கள். ✓ சரி. இவைகள் "உடைய" என்னுஞ்சொல்லுருபு வெளிப்பட்டுவரும்  6-ஆம் வேற்றுமைவிரிகள். 


"உடைய" என்ற சொல்லுருபு அஃறிணை இருமைக்குமட்டுமே உரியது என்றும்; உயர்திணைக்கானது அல்ல என்பதும் ஒருகொள்கை. இக்கருத்துக்கான தொல்காப்பியநூற்பா வருமாறு:-

"அது வென் வேற்றுமை

உயர்திணைத் தொகைவயின்

அதுவென் உருபுகெடக் குகரம் வேண்டும்". இதன்படி "அது" என்னும் உருபு வரக்கூடிய உயர்திணைத்தொகைநிலைத்- 

தொடர்களுக்கெல்லாம் "கு" என்னும் உருபுதான் வரவேண்டும்.

* எனக்கு மனைவி. ✓ சரி.

* எனக்குக்கணவன். ✓ சரி.

* எனக்கு மக்கள். ✓ சரி.

இந்த கொள்கைக்கானக்காரணம் என்ன? " தமிழ்ப்பண்பாட்டில் மக்களுக்கு அஃறிணைப்பொருள்கள்தாம் உரிமையுடைய சொத்துக்களாக இருக்கமுடியுமே தவிர, உயர்திணை தேவர், மக்கள், நரகர் சொத்துகளாக இருக்கமுடியாது. சான்றாக பெற்றோர் மக்களிடையே இருப்பது உறவுதானேதவிர, சொத்துடைமை அன்று.


"கு" உருபைப்பயன்படுத்த விரும்பாவிட்டால், எந்த உருபையும் பயன்படுத்தாமல் 6-ஆம் வேற்றுமைத்தொகையாகவே குறிப்பிட்டுவிடலாம்.

* என்மனைவி. ✓ சரி.

* என்கணவன். ✓ சரி.

* என்மக்கள். ✓ சரி.


" தசரதரின் மகன் இராமன்", என்றெழுதுவதைக்காண்கிறோம். இலக்கணப்புலவோர் "இன்" என்பதை "சாரியை" என்பர். அப்படிச்சொல்ல வேண்டுவதில்லை. "இன்" என்பதை 6-ஆம் வேற்றுமையுருபாகவே கொள்ளலாம்", என்கிறார் அ.கி. பரந்தாமனார். இவர் கூறுவதையேற்றுக்கொண்டால் ஆறாம் வேற்றுமையுருபு என்னவென வரையறுக்கவேண்டும்.  ஒரு வேற்றுமைக்கானயுருபை இன்னோரு வேற்றுமைக்குரிய பொருளில் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கோடல்பொருளுக்கான 4-ஆம் வேற்றுமையுருபு 'கு'வை, 6-ஆம் வேற்றுமை உயர்திணைகளில் கிழமைப்பொருளில் பயன்படுத்துவதை தொல்காப்பியம் சுட்டுகிறது. எனவே, அ.கி. பரந்தாமனார் பரிந்துரையை உடனடியாக கடைப்பிடிப்பதற்கில்லை. "தசரதனுக்கு மகன் இராமன்" என்பதே சரி. அல்லது "தசரதன்மகன் இராமன்" என்பதும் சரி.


"கிழமை", தற்கிழமை, பிறிதின்கிழமையென இருவகைப்படும். ஒன்றின் பிரிக்கமுடியாத பாகமாக இருப்பது தற்கிழமை. சான்று: என்கை.

ஒன்றிலிருந்து பிரிந்து தனித்தும், உடைமையாகவும் இருப்பது பிறிதின்கிழமை. சான்று: என்புத்தகம்.


'புலியினதுகுட்டி அல்லது புலியினுடைய குட்டி' என்னும் தொடர், 6-ஆம் வேற்றுமை விரிநிலைத்தொடர். இதில் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க.  இந்த விரிநிலைத்தொடரின், தொகைநிலைத்தொடர்  'புலிக்குட்டி' என்பதாம். இதில் ககரவொற்று(க்) மிக்கு வந்துள்ளது. எனவே, 6-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும். இங்கு நிலைமொழி அஃறிணையாக இருந்தால்மட்டுமே வல்லினம் மிகும் என்பதையும் கருத்தில்கொள்க. 'தேர்ச்சக்கரம்', 'வாழைத்தண்டு', 'நரிப்பல்' என்பன சில எடுத்துக்காட்டுகள்.


'ஐயனார்கோவில்', 'கண்ணகிசிலம்பு',

'எண்குணத்தான்தாள்', 'சமணர்பள்ளி'  என்பன, "உடைய" என்ற சொல்லுருபு அல்லது  "கு"  என்னும் உடைமைப்பொருள்கொண்ட 6-ஆம் வேற்றுமை  மறைந்துவந்த தொகைநிலைத்தொடர்களாகும். இவற்றின் நிலைமொழிகள் உயர்திணையாக இருப்பதைக்காண்க. எனவே, உயர்திணையை நிலைமொழியாகக்கொண்ட 6-ஆம் வேற்றுமைத்தொகைகளில் வல்லினம் மிகாது.


6-ஆம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை இல்லை.


6-ஆம் வேற்றுமை பெயர்ச்சொற்களைமட்டுமே ஏற்கும். வினைச்சொற்களை ஏற்காது.



ஏழாம் வேற்றுமை

 வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.


36. ஏழாம் வேற்றுமையின் பொருள் "இடப்பொருள்". பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறும் இடமாகும். இதில் தற்கிழமை, பிறிதின்கிழமை என்ற பிரிவுகள் உண்டு.

1. பொருள் தற்கிழமை: மணியின்கண் ஓசை.

பொருள் பிறிதின்கிழமை: மரத்தின்கண் கிளி.

2. இடத்தற்கிழமை: வீட்டின்கண் அறை.

இடப்பிறிதின்கிழமை: வீட்டின்கண் காளை.

3. காலத்தற்கிழமை: நாளின்கண் நாழிகை.

காலப்பிறிதின்கிழமை: காரின்கண் நெல். (கார் = கார்காலம்).

4. சினைத்தற்கிழமை: கையின்கண் விரல்.

சினைப்பிறிதின்கிழமை: விரலின்கண் மோதிரம்.

5. பண்புத்தற்கிழமை: நிறத்தின்கண் அழகு.

பண்புப்பிறிதின்கிழமை: முதுமைகண் வறுமை.

6.தொழிற்தற்கிழமை: ஆட்டத்தின்கண் சிமிட்டல்.

தொழிற்பிறிதின்கிழமை: ஆட்டத்தின்கண் பாட்டு.


பொதுவாக, இடத்தில், இல், கண், கீழ், மேல் முதலான 7-ஆம் வேற்றுமை உருபுகள்  எனச்சொல்லப்பட்டாலும், இடத்தைச்சுட்டும் பலவும் 7-ஆம் வேற்றுமை உருபுகள் ஆகும். அகம், புறம், உள்; இடை, கடை; தலை, முகம், வாய்; முன், பின்; கீழ், மேல்; திசை, வழி; பால், உழி ( இடம், பக்கம், அளவு), முதலானவும் 7-ஆம் வேற்றுமை உருபுகள்.


"இல்" என்ற வேற்றுமையுருபு ஐந்திலும் ஏழில் வந்தாலும் வேறுவேறு பொருளில் வருவதை நாம் நினைவில் பதித்தல்வேண்டும்.


7-ஆம் வேற்றுமை, பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் இரண்டினையும் ஏற்குமென்பதை நினைவிற்கொள்க.


'பாண்டியர்குடிப்பிறந்தார்'   என்னுந்தொடர், 'பாண்டியர்குடியின்கண் பிறந்தார்' எனவிரியும்.  இந்த விரிநிலைத்தொடரில் "இன்" என்பது சாரியை; "கண்" என்பது 7-ஆம் வேற்றுமையுருபு. இதில் பகரவொற்று(ப்) மிகுந்ததைக்காண்க. எனவே, 7-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும். வேற்றுமைவிரியில் ஓற்று தோன்றவில்லை என்பதையும் காண்க. எனவே, 7-அம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகாது. 


"கூண்டுக்கிளி" என்னுந்தொடர், "கூண்டின்கண் வாழும் கிளி" எனவிரியும். இதில் "இன்" என்பது சாரியை; "கண்" ஏழன் உருபு; வாழும் என்பது பயன்சொல். ஆக இத்தொடர்,  7-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை எனப்படும். "பூந்தேன்", *மலைப்பாம்பு", "நீர்ப்பாம்பு" என்பன மேலுஞ்சில எடுத்துக்காட்டுகள். எனவே, 7- ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.


7-ஆம் வேற்றுமையுருபுகள் வாக்கியங்களில் அமையும்வகைக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:-

* கண் - "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற".

* முன் - "கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து ".  

* மேல் - " மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்".

* கீழ் - "பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்".

* முகம் - "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதல் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி  ".

* இல் -"சாப்பிடுகையில் விக்கல் வந்தது. தலையில் தட்டி  அருந்த நீர்தந்தாள் அன்னை".

* உள் - "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"

* வழி - கோன் எவ்வழி, குடி அவ்வழி.

* பால் - ஏதிலிபால் இரக்கங்கொள்.

* பின் - "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்".

* புறம் - ஊரின்புறம் உள்ளது புறம்போக்குநிலம் எனப்பட்டது.

* தலை- "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை".

* வாய் - "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்".

* கடை - "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையர் இல்".

* உழி - "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி".

* கால் - "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்".

* இடை - "உடம்பொடு  உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு"..

* இடத்தில், பால் - "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு".

* அகம் - "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்".

* திசை - " தென்திசை நோக்கியிருப்பன் எங்கள் தென்முகநம்பி".



ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தமிழ் பாடி/தமிழ்ப்பாடி எது சரி? தெரிந்து கொள்ளுங்கள்

 தமிழ்பாடியா?தமிழ்ப்பாடியா?

இரண்டு சொற்கள் புணரும்போது நிலைமொழி, வருமொழி இரண்டும் பெயர்ச் சொற்களாக இருந்தால் இடையில் வல்லினம் மிகும். 

தமிழ்ப்பாடி என்ற சொல்லில் நிலைமொழியான 'தமிழ்' என்பது சிறப்புப் பெயராகவும் வருமொழியான 'பாடி' என்பது பொதுப் பெயராகவும்அமைந்த இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

பாடி என்பது முல்லை நிலத்து சிற்றூராதலால் இது பெயர்ச்சொல்லாயிற்று. இதுவே பாடி என்பதை இகர ஈற்று வினையெச்சமாகக் கொண்டால் இடையில் வல்லினம் மிகாது.

"தமிழ் பாடி மகிழ்ந்தான்"

இதில் பாடி என்பது இகரவீற்று வினையெச்சம். மேலும் தமிழ் பாடி வேற்றுமைத்தொகையுமாம்.

இது தமிழைப்பாடி என விரியும்.

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

ஊர்ப்பெயராக நாம் எழுதும் போது வல்லினத்தை மிகுத்து "தமிழ்ப்பாடி" என்றே எழுத வேண்டும்



செவ்வாய், 30 மார்ச், 2021

ல,ள,ழ வேறுபாட்டுச்சொற்கள்

 

ல, ழ, ள பொருள் வேறுபாடுதொகு

  • அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
  • அழகு - வனப்பு
  • அளகு - சேவல், பெண்கூகை
  • அலகம் - திப்பிலி
  • அளகம் - வெள்ளெருக்கு, நீர்
  • அலகை - கற்றாழை, பேய்
  • அளகை - அளகாபுரி, பெண்
  • அழம் - பிணம்
  • அலம் - கலப்பை
  • அளம் - உப்பு
  • அலத்தல் - அலட்டல், அலைதல்
  • அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
  • அலவன் - ஆண்நண்டு
  • அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
  • அழி - அழித்துவிடு
  • அலி - பேடி, காகம், விருச்சிகராசி
  • அளி - கருணை, கள், வண்டு
  • அல்லல் - துன்பம்
  • அள்ளல் - வாரி எடுத்தல்
  • அழை - கூப்பிடு
  • அலை - கடல், நீரலை, அலைதல்
  • அளை - தயிர், நண்டு, புற்று
  • அவல் - பள்ளம், உணவுப் பொருள்
  • அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
  • அல் - இரவு
  • அள் - அள்ளி எடு, நெருக்கம்
  • உலவு - நட
  • உளவு - ஒற்று
  • உழவு - கலப்பையால் உழுதல்
  • உழி - இடம், பொழுது
  • உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
  • உலு - தானியப் பதர்
  • உழு - நிலத்தை உழு
  • உளு - உளுத்துப் போதல்
  • உலை - கொல்லன் உலை, நீருலை
  • உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
  • உளை - பிடரி மயிர், சேறு, தலை
  • உழுவை - புலி
  • உளுவை - மீன்வகை
  • எல் - கல், மாலை, சூரியன்
  • எள் - எண்ணெய்வித்து, நிந்தை
  • எலு - கரடி
  • எழு - எழுந்திரு, தூண்
  • ஒலி - சப்தம், நாதம், காற்று
  • ஒழி - அழி, தவிர், கொல், துற
  • ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
  • ஒல் - ஒலிக்குறிப்பு
  • ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
  • கலகம் - போர், அமளி, இரைச்சல்
  • கழகம் - சங்கம், கூட்டமைப்பு
  • கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
  • களங்கம் - குற்றம், அழுக்கு
  • கலி - கலியுகம், பாவகை, சனி
  • கழி - கோல், மிகுதி, உப்பளம்
  • களி - மகிழ்வு, இன்பம்
  • கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
  • கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
  • களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
  • கல் - மலை, பாறை, சிறுகல்
  • கள் - மது, தேன்
  • கலம் - கப்பல், பாத்திரம்
  • களம் - இடம், போர்க்களம், இருள்
  • காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
  • காளி - துர்க்கை, மாயை
  • காழி - சீர்காழி (ஊர்)
  • காலை - பொழுது, விடியற்பொழுது
  • காளை - காளைமாடு, இளைஞன்
  • காலம் - பொழுது, நேரம்
  • காளம் - எட்டிமரம், சூலம்
  • கிலி - அச்சம், பயம்
  • கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
  • கிளி - பறவை, வெட்டுக்கிளி
  • கிழவி - முதியவள், மூதாட்டி
  • கிளவி - சொல், மொழி
  • குலி - மனைவி
  • குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
  • குளி -நீராடு
  • குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
  • குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
  • குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
  • குழை - குண்டலம், குழைந்துபோதல்
  • குலவி - மகிழ்ந்திருத்தல்
  • குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
  • குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
  • குலிகம் -சிவப்பு, இலுப்பை
  • குளிகம் -மருந்து, மாத்திரை
  • குவலை -துளசி, கஞ்சா
  • குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்
  • கூலம் - தானியம், கடைத்தெரு
  • கூளம் - குப்பை
  • கூலி - ஊதியம்
  • கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
  • கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
  • கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
  • கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
  • கொலை - கொல்லுதல்
  • கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
  • கொல்லாமை - கொலை செய்யாமை
  • கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
  • கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
  • கொள்ளி - கொள்ளிக்கட்டை
  • கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
  • கொள்ளை - திருடுதல், மிகுதி
  • கோலம் - அழகு, அலங்காரம்
  • கோளம் - உருண்டை, வட்டம்
  • கோலை - மிளகு
  • கோழை - வீரமற்றவன், கபம்
  • கோளை - குவளை, எலி
  • கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
  • கோள் - கிரகம்
  • கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
  • கோழி - உறையூர், விட்டில், பறவை
  • கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
  • சலம் - நீர், சிறுநீர், குளிர்
  • சளம் - பொய், துன்பம், வஞ்சனை
  • சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
  • சாளை - கடல்மீன்
  • சாழை - குடிசை, குச்சு
  • சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
  • சுளித்தல் - முறித்தல், சினத்தல்
  • சூலை - வயிற்று நோய்
  • சூளை - செங்கல் சூளை
  • சூல் - கர்ப்பம்
  • சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
  • சூள் - சபதம்
  • சேல் - மீன்
  • சேள் - மேலிடம்
  • சோலி - ரவிக்கை, காரியம்
  • சோழி - பலகரை
  • சோளி - கூடைவகை
  • தவளை - ஓர் உயிரி
  • தவலை - பாத்திரம்
  • தலம் - இடம், பூமி
  • தழம் - தைலம்
  • தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு
  • தழை - தாவர உறுப்பு
  • தலை - மண்டை
  • தளை - விலங்கு
  • தாலம் - உலகம், தேன்
  • தாளம் - இசைக்கருவி, ஜதி
  • தாலி - மங்கலநாண்
  • தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
  • தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு
  • தாழ் - தாழ்தல், குனிதல்
  • தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.
  • துலக்கம் - ஒளி, தெளிவு
  • துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
  • துலம் - கோரை, கனம்
  • துளம் - மாதுளை, மயிலிறகு
  • துலி - பெண் ஆமை
  • துழி - பள்ளம்
  • துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு
  • துலை - ஒப்பு, கனம்
  • துளை - துவாரம், வாயில்
  • தூலி - எழுதுகோல், எழுத்தாணி
  • தூளி - புழுதி, குதிரை
  • தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
  • தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்
  • தெல் - அஞ்சுதல்
  • தெள் - தெளிவான
  • தோலன் - அற்பன்
  • தோழன் - நண்பன்
  • தோலி - பிசின், ஒருவகை மீன்
  • தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
  • தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
  • தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
  • தோள் - புயம், வீரம்
  • நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
  • நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
  • நலி - நோய்
  • நளி - குளிர்ச்சி, பெருமை
  • நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
  • நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
  • நல் - நல்ல
  • நள் - இரவு, நடு, நள்ளிரவு
  • நாலம் - பூவின் காம்பு
  • நாழம் - இழிவுரை, வசவு
  • நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
  • நாலி - முத்து, கந்தை ஆடை
  • நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
  • நாளி - கல், நாய்
  • நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
  • நாழிகை - வட்டம், கடிகாரம்
  • நால் - நான்கு
  • நாழ் - குற்றம், செருக்கு
  • நாள் - காலம், திதி
  • நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
  • நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
  • நீல் - நீலம், காற்று
  • நீள் - நீளம், ஒளி
  • பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
  • பழம் - கனி, முதுமை
  • பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
  • பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
  • பலி - பலியிடுதல், பலியுயிர்
  • பழி - குற்றம்
  • பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
  • பாழ் - வீண், வெறுமை
  • பிழை
  • பீழை - துன்பம்
  • பீளை - கண் அழுக்கு
  • புலி - காட்டு விலங்கு
  • புளி - புளியமரம், புளியங்காய்
  • புலை - புலால், ஊன், கீழ்மை
  • புழை - துளை, வாயில், நரகம்
  • புகல் - அடைக்கலம்
  • புகழ் - பெருமை
  • புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
  • புள் - பறவை
  • பூலம் - புற்கட்டு
  • பூளம் - பூவரசு
  • பூழை - துவாரம், கோபுரவாயில்
  • பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
  • பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
  • பாழி - கொடுத்தல், ஈதல்
  • பாளி - வரப்பு, எல்லை
  • பாலிவு - அழகு, நிறைவு
  • பாழிவு - பொழிதல், மேன்மை
  • போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
  • போளி - இனிப்புப் பண்டம்
  • பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
  • பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்
  • மலம் - அழுக்கு, பாவம்
  • மழம் - இளமை, குழந்தை
  • மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம்
  • மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
  • மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
  • மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
  • மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
  • மாளிகை - அரண்மனை, கோயில்
  • மாலை - அந்திப்பொழுது, பூமாலை
  • மாழை - மயக்கம், இளமை, அழகு
  • மாளை - புளியம்பட்டை
  • மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
  • மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
  • முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
  • முழை - குகை
  • முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
  • முழி - விழி (விழித்தல்)
  • முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
  • மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
  • மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
  • மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
  • மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
  • மெல்ல - மென்று தின்பது
  • மெள்ள - மெதுவாக
  • மாலி - மொளலி கிரீடம்
  • மாழி - மேழி, கலப்பை
  • மாளி - துணிமூட்டை
  • வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
  • வளம் - வளமை, அழகு
  • வலவன் - திருமால்
  • வளவன் - சோழன், வேளாளன்
  • வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
  • வளன் - செழுமை, வளப்பன்
  • வழப்பம் - வழக்கம், இயல்பு
  • வளப்பம் - வளமை, செழிப்பு
  • வலி - நோய், வலிமை, துன்பம்
  • வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
  • வளி - காற்று
  • வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
  • வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
  • வளை - கை வளையல், எலி வளை
  • வல் - வலிமை, விரைவு, திறமை
  • வள் - ஒலிக்குறிப்புச் சொல்
  • வல்லம் - வாழை, ஓர் ஊர்
  • வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை
  • வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
  • வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்
  • வலு - வலிமை, பலம், பற்று
  • வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
  • வளு - இளமை, இளைய
  • வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
  • வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
  • வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
  • வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
  • வாழை - வாழைமரம்
  • வாளை - வாளை மீன்
  • வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
  • வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
  • வாள் - போர்வாள், நீண்டகத்தி
  • விலா - விலா எலும்பு
  • விழா - திருவிழா, கொண்டாட்டம்
  • விளா - இளமை, வெண்மை, நிணம்
  • விழி - கண், கருவிழி
  • விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று
  • விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
  • விழை - விரும்பு, ஆசைப்படு
  • விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
  • விலக்கு - விலக்கி விடு, தவிர்
  • விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
  • விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
  • விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
  • வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
  • வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
  • வேலம் - வேலமரம், தோட்டம்
  • வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
  • வேல் - வேலாயுதம்
  • வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
  • வேலை - பணி, கடல்
  • வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...