பத்தாம் வகுப்பு
தமிழ்-சிறுதேர்வு
அ. ஐந்து வினாக்களுக்கு விடையளி
1. வேங்கை என்பதனைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!-இத்தொடரில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சிய காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறுவாழைப் பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன.
மேற்கண்டதொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
4. " உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் " இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகை யைச்சுட்டி அதன் இலக்கணம் தருக.
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
ஆ. நான்கு வினாக்களுக்கு விடையளி.
6. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
7. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'-இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க.
8. அறிந்தது, அறியாதது, புரிந்தது ,புரியாதது,தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.
9. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக