திங்கள், 16 டிசம்பர், 2019

வலை தமிழ்: இலக்கியங்களில் மகன்றில் பறவை என்றொரு பறவை சுட்டப்ப...


இலக்கியங்களில் மகன்றில் பறவை என்றொரு பறவை சுட்டப்படுகிறது இது நீர்ப் பறவைகள் என்றும் இமைப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மை உடையன மருதத் திணைக்குரிய பறவைகள் இவை மலர்கள் நிரம்பிய இடங்களில் வாழும் இந்த மகன்றில் பறவைகளுக்கு ஒரு சிறப்பியல்பு உண்டு இவை எப்போதும் இணையாகவே நீர் நிலைகளில்செல்லும் அப்படி செல்லும் பொழுது ஒரு பூ இடைப்பட்டு அதை கடக்கும்போது பிரியும் மிகச்சிறிய தருணத்தையும் பல ஆண்டுகள் போல் எண்ணி பிரிவாற்றாமல் வருந்தும் இந்த மகன்றில் பறவைகளை வைத்து சிறைக்குடி ஆந்தையார் குறுந்தொகையில் அற்புதமான பாடல் ஒன்றை அளித்துள்ளார்

பாடல்57

"பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவேமாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே"

பொருள்

எத்தனையோ பிறவிகளில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த நாம் இந்தப் பிறவியில் காதலர்களாக பிறந்து பிரிந்திருக்கிறோம் பூ இடைப்பட்ட நேரத்தை கூட மகன்றில் பறவை ஆண்டுக்கணக்கில் பிரிந்ததாய் எண்ணி வருந்துமாம் ஆனால் தலைவனே உன்னை பிரிந்து வாழ்வதை காட்டிலும் உயிரை விடுவதே மேல் என்கிறாள் தலைவி

##₹₹₹₹################

இராம் முருகன் 25.07.2019

வியாழன், 12 டிசம்பர், 2019

இலக்கியச் செய்திகள்


இலக்கியங்களில் மகன்றில் பறவை என்றொரு பறவை சுட்டப்படுகிறது இது நீர்ப் பறவைகள் என்றும் இமைப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மை உடையன மருதத் திணைக்குரிய பறவைகள் இவை மலர்கள் நிரம்பிய இடங்களில் வாழும் இந்த மகன்றில் பறவைகளுக்கு ஒரு சிறப்பியல்பு உண்டு இவை எப்போதும் இணையாகவே நீர் நிலைகளில்செல்லும் அப்படி செல்லும் பொழுது ஒரு பூ இடைப்பட்டு அதை கடக்கும்போது பிரியும் மிகச்சிறிய தருணத்தையும் பல ஆண்டுகள் போல் எண்ணி பிரிவாற்றாமல் வருந்தும் இந்த மகன்றில் பறவைகளை வைத்து சிறைக்குடி ஆந்தையார் குறுந்தொகையில் அற்புதமான பாடல் ஒன்றை அளித்துள்ளார்

பாடல்57

"பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவேமாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே"

பொருள்

எத்தனையோ பிறவிகளில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த நாம் இந்தப் பிறவியில் காதலர்களாக பிறந்து பிரிந்திருக்கிறோம் பூ இடைப்பட்ட நேரத்தை கூட மகன்றில் பறவை ஆண்டுக்கணக்கில் பிரிந்ததாய் எண்ணி வருந்துமாம் ஆனால் தலைவனே உன்னை பிரிந்து வாழ்வதை காட்டிலும் உயிரை விடுவதே மேல் என்கிறாள் தலைவி

##₹₹₹₹################

இராம் முருகன் 25.07.2019
ஒவ்வொரு மனிதனுடைய இளமைப் பருவத்தில் நெஞ்சுக்கூட்டுக்குள் ஆயிரம்வண்ணத்துப் பூச்சிகளையும் கனவுகள் தோறும் தேவதைகளை வலம் வரச் செய்யும் உணர்வும் தான் காதல் காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் பெரிய வரம் இவ்வரம் வாய்க்கப் பெற்றோர் மிகச் சிலரே இந்த காதலர்களின் இலக்கணமாக குறுந்தொகை அற்புதமான ஒரு பாடலைத் தருகிறது காதல் வயப்பட்ட ஒருவன் அல்லது ஒருத்திக்கு காலைபகல் மாலை யாமம் விடியல் என்று பொழுதுகள் தெரியவரின் அந்தக் காதல் உண்மையானதன்று  காதல் வயப்பட்ட மனதிற்கு இது  இரவா பகலா என்று வேறுபாடின்றி தான் விரும்பியவரையே மனம் தேடும்
குறுந்தொகை பாடல்32
"காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலுமென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் மாவென மடலோடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவு தலை வரினே!
##அள்ளூர் நன்முல்லையார்
விளக்கம்
காதல் வயப்பட்ட தலைவன் தன் ஆற்றாமையை தோழியிடம்  கூறுகிறான் காலை பகல் மாலை ஊரேஉறங்கும் யாமம் விடியல் என பொழுதுகளுக்கு இடைப்பட்ட காலம் தெரியுமானால் அவர் கொண்ட காதல் பொய்யானது என் தலைவியிடம் நான் கொண்ட காதலை மடல் ஏறி நான் மெய்ப்பிக்கலாம்  என்றால் அதுவும் அவளுக்கு பழியைத் தரும்அப்படி வெளிக்காட்டாமல் வாழ்தலும் கொடுமை அதைவிட சாதல் உயர்ந்தது இந்த பிரிவை என்னால் பொறுக்க இயலவில்லை
###
இராம்
இன்றைய நிலையில் பல குடும்பங்களில் ஆண் பெண் கருத்து வேற்றுமையால் மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடும் அவல நிலையில் உள்ளோம் இந்த மணமுறிவு எதனால் ஏற்படுகிறது ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து போகாமை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் யார் பெரியவர் என்ற ஈகோ இவையெல்லாம் தான். ஒரு பெண் ஆணை முழுவதுமாகப் புரிந்துகொண்டு அனுசரித்து சென்றால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் உணர்வுகளை மதிக்க தொடங்கிவிட்டால் எந்த குடும்பங்களிலும் பிரிவினை என்பது வராது யார் மீது யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற போட்டியே இருவருக்கும் பெருத்தஏமாற்றத்தை பரிசாக தந்து விடுகிறது ஒவ்வொரு சூழ்நிலையில் இருந்து வரும் ஆணும் பெண்ணும் ஒரே வீட்டிற்குள் சகித்து வாழ்வது இன்றைய பரபரப்பான சூழலில் மிகவும் சிரமமான காரியமாகி விட்டது ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் காதலித்து கட்டுப்பாடற்ற அன்பு செலுத்தும்போது குடும்பமானது மகிழ்ச்சி பூக்கள் பூக்கும் நந்தவனமாக
மாறி விடுகிறது
ஐங்குறுநூறு இலக்கியத்தில் வசதியான வீட்டில் வாழ்ந்த ஒரு பெண் ஒரு இளைஞனை விரும்பி உடன்போக்குசெல்கிறாள் அவளை மணந்து கொண்ட இளைஞன்   வசதி யற்றவன் ஆனாலும் அவள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறாள் இல்லத்திற்கு ஒருமுறை திரும்பும்போது தோழி அவளிடம் கேட்கிறாள் நீ வசதியாக வாழ்ந்து அங்கே போய் உன்னால் எப்படி வாழ முடிகிறது என்று அப்போது அந்தப் பெண் சொல்கிறாள் தோழி நம் வீட்டு தோட்டத்தில் மரக்கிளைகளில் கிடைத்த புத்தம்புதிய தேனும் பாலும் கலந்த கலவையை உண்டதைவிட அவரின் வீட்டிற்கு பின்னால் கிணற்றடியில் சிறு பள்ளத்தில் இலை தழைகள் விழுந்த சேறு நிரம்பிய மான்கள் உண்டு எஞ்சிய அந்த கலங்கலான நீரின் சுவை அதிகம் என்கிறாள் காரணம் அவள் தன்கணவன் மீது கொண்ட காதல்   காதல் அதிகரிக்கும் போது நம்மைச் சுற்றியிருக்கும் வசதியின்மையோ வேறு பிரச்சனைகளோ எதுவுமே நமக்கு பெரியதாக தெரியாது எப்போது நாம் பிறர் மேல் செலுத்தும் அன்பு குறைகிறதோ அப்போது தான் கடுகளவு பிரச்சினைகூட மலையளவு தெரிகிறது
பாடல்
"அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலைக் கூவற்கீழ் மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே!
##கபிலர்
########################இராம் முருகன்
பொதுவாக பெண்கள் பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்தாலும் தன் மனதுக்குப் பிடித்த கணவனோடு வாழும் வாழ்க்கை அற்புதமானது குறுந்தொகையில் ஒரு காட்சி வருகிறது தலைவனும் தலைவியும் குடும்பம் நடத்தும் அழகை பார்த்து வருமாறு தாய் செவிலியை அனுப்புகிறாள் அதைப் பார்த்து வந்த செவிலி தாயிடம் அவர்கள் குடும்பம் நடத்தும் பாங்கை சொல்கிறாள் உனது மகளை அவள் வீட்டில் பார்த்தேன் முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலை தன் ஆடையில் துடைத்துக்கொண்டாள்  குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் சமையல் புகையால் கண்களில் நீர் கசிந்தது அவ்வளவு ஆர்வமுடன் தான் சமைத்த இனிப்பும் புளிப்பும் கொண்ட குழம்பை தன் கணவனுக்கு அருகிருந்து பரிமாறுகிறாள் அவன் கணவன் உண்டபின் அந்த உணவை அவன் புகழ்கிறான் இனிது உண்கிறான் தன் கணவனின் முகத்தை பார்த்து இவளின் முகமானது மகிழ்ச்சியால் மலர்ந்து விடுகிறது
தம் குடும்பத்தில் எந்த வேலையும் செய்யாமல் இளவரசியாக வாழும் பெண்கள் புகுந்த வீட்டில் அத்தனை வேலைகளையும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார்கள் என்பதாய் செல்கிறது இந்த பாடல்
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றெண்ணுதன் முக"
#கூடலூர் கிழார்
நாம் காதல் போன்ற மென் உணர்வுகளை கவிதையில் பதிவிடும் போது தாமரை, ரோஜா, அல்லி, மல்லிகை போன்ற மலர்களை உவமையாகக்கூறியே பழகி வந்துள்ளோம். ஆனால், நெருஞ்சி மலரை உவமையாக வைத்து, தன் காதலை தலைவி வெளிப்படுத்திய ஒரு பாடலும் குறுந்தொகையில் உள்ளது. தலைவி சொல்கிறாள் தோழியிடம்," தோழி! நானும் தலைவனும் கொண்ட காதலானது இனிமையானது; அவர், என்னுடன் பழகிய ஆரம்ப நாள்களில் அழகியநெருஞ்சி மலர்களைப்போல என்காதல் இனிமையாகவிருந்தது . ஆனால், நாள்கள் செல்லச்செல்ல நெருஞ்சி மலரிலிருந்து தோன்றிய முள்ளைப்போல் நம்மோடு காதல் கொண்ட தலைவன் நம்மை வெறுக்கத் தொடங்கி விட்டான் அதனால் என் மனம் மிகவும் வருந்துகிறது
அதாவது காதல் தோன்றும் போது நெருஞ்சி மலரைப்போல கண்ணுக்கு இனிமையாகவும் காதல் முற்றும்போது நெருஞ்சி முள்ளைப் போல உறுத்தலாகவும் மாறிவிடுகிறது.

பெரும்பான்மையான குடும்பங்களில் திருமணமான புதிதில் குடும்ப வாழ்வு நெருஞ்சி மலரைப்போல  இனிமையாமாகவும், நாள்கள் செல்லச் செல்ல நெருஞ்சி முள்ளைப்போல உறுத்தலாக இருப்பதனால்தான் நீதிமன்றங்களில் திருமணமுறிவு வழக்குகள் குவிந்துகொண்டுள்ளன. 

காதலைக்கொண்டாடுங்கள்! 

பாடல்

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந்தாஅங்  இனிய செய்த நம் காதலர் இன்னா செய்த நோமென்நெஞ்சே
#அள்ளூர் நன்முல்லை

புதன், 11 டிசம்பர், 2019

இலக்கிய வானம்

மனைவி என்பவள்
இரண்டாம் தாய். நம் சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் மகத்தான உயிர். மணமான புதிதில் மனைவியின் அருமை தெரிவதில்லை. படுக்கையில் விழும் போது மனைவி அன்புக்குரிய தோழியாகிறாள். என்னதான் மனைவியை திட்டினாலும் கண்கள் அவளைத் தான் தேடுகிறது. இல்லாள் இல்லாத இல்லமும் ஓர் இல்லமோ?

 ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு காமம் மட்டுமே கண்களில் தெரியும் போது, அவளின் கட்டுப்பாடற்ற அன்பு  தெரிவதில்லை. தனது சோக நிலையை யாரிடமும் பகிர முடியாமல் தனக்குள்ளேயே அழுது கொள்கிறாள். இப்படியான சூழலில் அவளின் உள்ளத்து உணர்வுகளை உணர்ந்த சுப்பிரதீபக் கவிராயர் அற்புதமான பாடல் ஒன்றை தருகிறார்

"கச்சிருக்கும் போது நான் கரும்பானேன்-கைப்பிள்ளை வச்சிருக்கும் போது நான் மருந்தானேன் நச்சிருக்கும் கண்ணார் கரும்பானார் காணவுநான் வேம்பானேன்  அண்ணாமலை அரசுக்கு!

பொருள்:

என் மார்பு குலையாமல் கச்சையணிந்த போது அவருக்கு நான் கரும்பானேன். ஒரு பிள்ளை பெற்றெடுத்ததும் அவருக்கு நான் மருந்தானேன்.  இப்போது விஷம் தோய்ந்த கண்களையுடைய பரத்தையர் அவர் கண்களுக்கு கரும்பானார்   நானோ அவர் கண்களுக்கு வேம்பானேன்.
---------++++------------+++++----------++
இராம் முருகன்
 அரசூர் 

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...