புதன், 22 நவம்பர், 2023

பதினோராம் வகுப்பு தமிழ் -முக்கிய வினாக்கள்

                                     பதினோராம் வகுப்பு முக்கிய வினாக்கள்

குறுவினாக்கள்

1. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?

2. பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது

3. உயிரெழுத்து ,பன்னிரண்டு, திருக்குறள் , நாலடியார்- இச்சொற்களில் எவ்வகை ஈற்று எழுத்துக்கள் அமைந்துள்ளன?

4. இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

5. உயிரீறு மெய்யீறு விளக்குக

6. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை அவை யாவை?

7. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக.

8. தமிழ்நாட்டின் மாநில மரம் சிறு குறிப்பு வரைக

9. ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின- தொடரின் பொருள் யாது?

10. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?

11. ய் வ் ஞ் ட் ற் ந் மெய்களுக்கான வேற்றுநிலை உடல்நிலை மெய் மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

12. மதிப்புக்கூட்டு பொருள் விளக்குக.

13. தொழு உரம் விளக்குக.

14. குற்றியலுகரப்புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

15. விதி வேறுபாடு அறிந்து விளக்குக

தன்னொற்றிரட்டல்-தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் இனமிகல்- வன்மைக்கு இனமா திரிபவும் ஆகும்.

16. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

17. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

18. கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

19. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?

20. பொதுவியல் திணை விளக்குக

21. தீயினார் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?

22. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

23. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

24. சங்ககாலத்தில் தமிழ் மொழியின் நிலை பற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?

25. உவமை, உருவகம் வேறுபடுத்துக

26. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?

27. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

28. ஆனந்தரங்கனின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

29. ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

30. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

31. மருத்துவத்தின் பிரிவுகளாக குறள் கூறுவன யாவை?

32. படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை

33. கலைச்சொல்லாக்கம் பொருள் தருக.

34. கலைச் சொல்லாக்கப்பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?

35. இந்தியக் கட்டடக்கலையின் மூன்று வகைகள் யாவை

36. அயர்ந்து எழுந்த- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

37. ஆக்கப் பெயர் விகுதிகள் யாவை?

38. நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

39. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?

40. செந்துறைப் பாடாண் பாட்டு விளக்கம் தருக

41. ஒழுக்கமும் பொறையும் உனைப் போல் யார்க்குள- இவ்வடி எதனை குறிப்பிடுகிறது?

42. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றை கூறுகிறார்?

சிறுவினாக்கள்

43. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றை குறிப்பிடுகிறார்?

44. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?

45. மொழி முதல் இறுதி எழுத்துகள் யாவை ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக?

46. வேதி கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்கு சாத்தியமா நம் கருத்தை எழுதுக

47. சலச வாதியில் செங்கயல் பாயும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக

48. மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

49. தமிழ் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக

50. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக

51. சொற்பொருள் பின்வருநிலையணி விளக்குக

52. புகழுக்குரிய பண்புகளாக நீவீர் கருதுவன யாவை புகழின் பெருமையை பொதுமறை வழி நின்று கூறுக

53. சமணப் பள்ளிகளும் பெண் கல்வியும் குறிப்பு வரைக

54. உள்ளுறை உவமை இறைச்சி எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

55. கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது யாது?

56. மருவில்லாத அரசென இருந்த மாநகர் உவமையை பொருளுடன் விளக்குக

57. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை கூறுக

58. உருவாக அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

59. மருந்து மருத்துவர் மருத்துவம் ஆகியன பற்றி திருக்குறள் கூறுவன யாவை?

60. ஃபிரஸ்கோ ஓவியங்கள் கற்றளி கோவில்கள் குறித்து நீர் அறிவன யாவை?

61. கலைச்சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

62. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாக குற்றால குறவஞ்சி ஒருவன யாவை?

63. உணவும் உறக்கமும் அணில் கனவாம் உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.

64. பாடாண் திணை விளக்குக.

65. ஜீவாவின் பேச்சு நடை குறித்து சுந்தரராமசாமி கூறுவன யாவை?

66. உயர் தமிழை உயிர் என்று போற்றுமின்கள் இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.

67. சேர நாடு செல்வ வளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய காரணங்களை குறிப்பிடுக.

68. வாய்க்காலின் சிறப்புகளாக குறிப்பிடப்படுவன யாவை?

69. தாமஸிகம் என்றால் என்ன?


பன்னிரண்டாம் வகுப்பு முக்கிய வினாக்கள்

 

முக்கிய குறுவினாக்கள்

1.      நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.

2.      கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

3.      விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர் அமைக்க.

4.      இனநிரை பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.

5.      நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.

6.      புக்கில் தன்மனை சிறுகுறிப்பு வரைக.

7.      நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

8.      எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

9.      சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

10.   வசனம் கவிதை வேறுபாடு தருக

11.   எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும் யாருக்கு?

12.   அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

13.   சினத்தை ஏன் காக்க வேண்டும்?

14.   மறக்கக்கூடாதது மறக்கக் கூடியது எவற்றை?

15.   வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

16.   கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக

17.   கீழ்த்திசை சுவடிகள் நூலகம் குறிப்பு வரைக

18.   காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?

19.   பாவிகம்- விளக்குக.

20.   காப்பியத்தின் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக

21.   எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

22.   பின்னணி இசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் சான்று தருக

23.   நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை  இடித்துரைக்கிறார்?

24.   அஞ்சத்தகுந்தன அஞ்சத்தகாதன பற்றி வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

25.   பெருந்தேர் புணர்ச்சி விதி கூறுக

26.   தொன்மம் விளக்கம் தருக

27.   பருவத்தே பயிர் செய் நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக

28.   அறிவுடைவேந்தனின் நெறி குறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை?

29.   செவியறிவுறூஉ துறையை விளக்குக

30.   தமிழர் வளர்த்த அழகு கலைகள் நூல் குறிப்பு வரைக

31.   இறை மகனாரின் இன்னலை கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

சிறுவினாக்கள்

1.      ‘ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

2.      வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக

3.      யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே உவமையையும் பொருளையும் பொருத்தி எழுதுக.

4.       அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்?

5.      அகலாது அணுகாது தீக்காய்வர் போல இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

6.      எடுத்துக்காட்டு உவமையணி விளக்குக

7.      நாட்டிய அரங்கின அமைப்பை இளங்கோவடிகள் எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்?

8.      திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

9.      பங்குனி உத்திர திருவிழா நடைபெற்ற முறையை திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

10.   நெல்லின் நேரே வெண்கல் உப்பு இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக

11.   நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

12.   மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்துரைக்க.

13.   சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

14.   சினத்தால் வரும் கேட்டினை கூறுக

15.   சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக

16.   ‘வருபவர் எவராயினும் நன்றி செலுத்து’- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

17.    பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் தருக.

18.    வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

19.    பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக

20.    மழை வெள்ளப்பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

21.    சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் -  விளக்குக

22.   ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

23.   செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்து பூக்காடாம் வானமெல்லாம்- தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

செவ்வாய், 7 நவம்பர், 2023

முக்கிய குறுவினாக்கள்

இயல் 6,7

1. இந்திய கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

2. அயர்ந்து, எழுந்த பகுபத உறுப்பிலக்கணம் தருக.

3. கலைச் சொல்லாக்கம் பொருள் தருக.

4. கலைச் சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?

5.SHIP என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.

6.திருவடி- புணர்ச்சி விதி தருக.

7.நல்லாடை இலக்கணக்குறிப்பு தருக.

8. சாழல் பற்றி எழுதுக.

9. நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

10. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?

11.சிற்றூர் புணர்ச்சி விதி தருக

12. பெருங்குன்று ,வாழிய இரண்டு சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தருக

13. பாடாண் திணை விளக்குக.

14. செந்துறை பாடாண்பாட்டு விளக்குக

15. தமிழில் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகள் சிலவற்றைக்கூறுக.

16.ஆக்கப்பெயர்விகுதிகளைக்கொண்டு நிறைவு செய்க.

      1. அறிவைத் தேடி போகும் இடம் உலகம் அறிய உதவும் இடம் (அகம்)  ---------

      2.  வந்தால் மகிழ்ச்சி இது உழைத்தால் கிடைக்கும் இது(மானம்)-------------------

17. முதலைக்கண்ணீர் - மரபுச்சொல்லைத்தொடரில் எழுதுக.

18. அலைகடல், புதுக்கியவர் இலக்கணக்குறிப்பு தருக 

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...