குறுவினாக்கள்
1.கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எவற்றை வியந்து பாட தமிழின் துணைவேண்டும் என்கிறார்?
2. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும்இலக்கண நூல்கள் யாவை?
3. வேற்றுமையணி விளக்குக.
4. நடை அழகியல் பற்றி தொல்காப்பியத்தின் கருத்தைக் குறிப்பிடுக.
5.மொழியியல் வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
6. விடியல், வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க.
7. முடிந்தால் தரலாம் - முடித்தால் தரலாம் இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை?
8. பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக.
களம் - கலம்
9.புணர்ச்சி விதி தருக.
வெங்கதிர் , தனியாழி
10 உவமைத் தொடர்களை சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
1. உள்ளங்கை நெல்லிக்கனி போல
2. கிணற்றுத் தவளை போல
11.தமிழ்ச்சொல் கண்டறிக.
Fiction, Biography
12. மழையை கணிக்கும் அறிகுறிகளாக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிடுவன யாவை?
13. இயற்கைச் சமநிலை - விளக்குக.
14. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் கேடுகள் யாவை?
15.'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது'விளக்கம் தருக.
16.வாகைத்திணை விளக்குக.
17.குளிர் மிகுதியால் விலங்குகள் அடைந்த துன்பத்தை விளக்குக.
18.உயர்திணை பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
19. புணர்ச்சி விதி தருக.
இனநிரை, புதுப்பெயல்
20 . மயங்கொலிச்சொற்களை ஒரே தொடரில் எழுதுக.
தலை தளை தழை