வியாழன், 7 நவம்பர், 2024

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: 11.11.24 - 15.11.24

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: இயல் 7 

                    பதிற்றுப்பத்து, சிந்தனைப் பட்டிமன்றம் 

கற்றல் நோக்கங்கள் 

            சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுச் சிறப்பினை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக் கற்றல். 

          முரண்படான பல கருத்துக்களை விளக்கவும் நிலை நாட்டவும், பண்பட்ட முறையில் கருத்துக்களை முன்வைத்து பேசவும் கற்றல்.

கற்றல் விளைவுகள் 

       பதிற்றுப்பத்து தொகை நூல் கூறும் சேரநாட்டுச் சிறப்பினை அறிந்து கொள்கிறான்.

     சிந்தனைகளை பண்பட்ட முறையில் வெளிப்படுத்த கற்றுக் கொள்கிறான்.

துணைக் கருவிகள் 

 மடிக்கணினி, விளக்கப்படம் ,கரும்பலகை

பாட அறிமுகம் 

      சிறந்த நாட்டிற்கான இலக்கணம் யாது? என வினவி பதிற்றுப்பத்துப் பாடலை அறிமுகம் செய்தல்.

    தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற விவாதங்களைக் கண்டதுண்டா? என மாணவர்களிடம் கலந்துரையாடல் 

கற்பித்தல் செயல்பாடு 

ஆசிரியர் செயல்பாடு 

 எட்டுத்தொகை நூல்களை அறிமுகம் செய்தல்

 பத்துப்பாட்டு நூலமைப்பு கூறுதல்.     

 'நிரைய வெள்ளம்'என்னும் தொடருக்குப் பொருள் கூறுதல் 

பாடாண் திணை, செந்துறைப் பாடாண் பாட்டு, ஒழுகு வண்ணம் போன்றவற்றை விளக்குதல்.

 பாடலை சீர் பிரித்துப் பொருளோடு படித்துக் காட்டுதல் 

புதிய சொற்களுக்குப் பொருள் கூறுதல்.

 இலக்கணக்குறிப்பு ,பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதிகள் முதலிய மொழிப்பயிற்சிகளை விளக்குதல்.

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிம் உதவுவது வீடா ?நாடா? என்னும் தலைப்பில் மாணவர்களையே பங்கேற்கச் செய்து  பட்டிமன்றம் நடத்துதல்.

துணைக் கருவிகள் பயன்பாடு 

பதிற்றுப்பத்து பாடலில் பாடப்பட்ட மன்னர்களையும் புலவர்களையும் பட்டியலையும் மடிக்கணினியில் காட்டுதல். 

விழாக்கோலம் கொண்ட நகரின் படத்தை விளக்கப்படம் மூலம் காட்டுதல். 

இலக்கணக்குறிப்பு, புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் போன்றவற்றை கரும்பலகையில் எழுதி விளக்குதல்.

மாணவர் செயல்பாடு 

பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பத்துக்குமுரிய  பாடப்பட்ட சேர மன்னன் பாடிய புலவர் பட்டியலைத்தொகுத்தல்.

பாடாண் திணை செந்துறைப் பாடான் பட்டு ஒழுகு வண்ணம் போன்றவற்றை அறிந்து வகுப்பறையில் கூறுதல்.

 பாடலின் பொருளைத் தொகுத்துக் கூறுதல் 

பட்டிமன்றத்தில் பங்கேற்று சிந்தனைகளை சரியான வடிவில் வெளிப்படுத்துதல். 

மதிப்பீடு 

1.பாடாண் திணை விளக்குக 

2.செந்துறைப் பாடாண் பாட்டு விளக்குக

3.துய்த்தல், நன்னாடு இலக்கணக்குறிப்பு தருக.

4. பட்டிமன்றம் பாங்கரிந்து ஏறுமின் இத்தொடர் இடம் பெற்றுள்ள காப்பியம் எது?

வலுவூட்டல் 

பாடக் கருத்துகளை மீண்டும் மீண்டும் கூறி வலுவூட்டுதல். எளிய வினாக்கள் கேட்டு கற்றவை உறுதி செய்தல். 

தொடர்பணி 

நாட்டிற்கு அழகு சேர்ப்பன இன்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை தயாரிக்க 

மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை பணமே! கல்வியே! என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.


இரா.முருகன்

தமிழாசிரியர், ஆனையூர்

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...