ஞாயிறு, 4 டிசம்பர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு (5/12/22-09/12/22)

 நாள்: (5.12.22 - 9.12.22)

வகுப்பு : பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 8 

    •மொழித்திறன் பயிற்சிகள் 

கற்றல் நோக்கங்கள்

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்துப் பொருளுணர்தல் . 

பத்தியை உரையாடலாக மாற்றுதல். 

ஏற்புடைய நயங்கள் அறிந்து பாராட்டல். 

கற்றல் விளைவுகள்

பத்தியைப்படித்து பொருளுணர்ந்து விடையளித்தல்.

உரையாடல் வடிவில் எழுத அறிதல்.

பாடலின் ஏற்புடைய நயங்கள் அறிந்து பாராட்டக்கற்கின்றனர். 

கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

விளக்க அட்டைகள்

கரும்பலகை 

ஆயத்தப்படுத்தல்

எளிய பத்தியைப் படித்து மையப்பொருள் கூறச்செய்தல்.

செய்தி-உரையாடல் வேறுபாடு என்ன? 

முன்னறிவு

முந்தைய வகுப்பில் கற்ற செய்யுள் நயங்களை நினைவூட்டல். 

எதுகை, மோனை ,இயைபு, முரண் போன்றவற்றை நினைவூட்டல். 

பாட அறிமுகம்

பத்தியைப் பொருளோடு வாசிக்கச்செய்தல். 

உரையாடல் பற்றிய எளிய அறிமுகம். 

இலக்கிய நயங்கள் எவையென்று அறிமுகம் செய்தல்.

பாட வளர்ச்சி

திரு.வி.க.பற்றிய பத்தியை நுட்பமாக வாசிக்கச்செய்தல். 

தொடர் மாற்றங்கள் குறித்து விளக்குதல்.

வினைமுற்று வகைகளை இனம்காணக் கற்பித்தல்.

உம்மைத்தொகை,எண்ணும்மை போன்ற இலக்கணக்குறிப்பு கண்டறிய கற்பித்தல்.

புணர்ச்சி விதிகள் கூறுதல்.

செய்யுளின் மையப் பொருள், சொல் நயம் ,பொருள் நயம் ,தொடை நயம், ஒலிநயம், போன்றவற்றை கண்டு பாடலின் நயங்களைப் பாராட்டக்கற்பித்தல். 

ஆசிரியர் செயல்பாடு

பத்தியைப் பொருளோடு வாசித்துக் காட்டுதல். 

தொடர் மாற்றங்கள், இலக்கணக்குறிப்புகள், புணர்ச்சி விதிகளை கரும்பலகையில் எழுதி விளக்குதல். 

ஹெச்.ஜி.ரசூலின் கவிதையை மடிக்கணினியில் காட்டி, ஏற்புடைய நயங்களை வண்ணச் சொற்களால் குறிப்பிட்டுக் காண்பித்தல்.

மடிக்கணினியில் படங்களைக்காட்டி அதற்கு ஏற்புடைய கவிதைகள் கூறச்செய்தல். 

மாணவர் செயல்பாடு

பத்தியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளித்தல். 

தொடர் மாற்றங்களைச் செய்தல்.

குறிப்பிட்ட சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு கூறுதல். 

ஏற்புடைய நயங்கள் சுட்டிக்காட்டுதல்.

படத்திற்குப் பொருத்தமான கவிதைகள் எழுதுதல்

வலுவூட்டல்

தொடர் மாற்றங்களை வெவ்வேறு தொடர்கள் மூலம் பயிற்சி தருதல். 

இலக்கணக்குறிப்புக்கான வெவ்வேறு சொற்கள் தந்து பாடத்தை வலுவூட்டல். 

மதிப்பீடு

'தமிழ்த் தென்றல்' என்று திரு.வி.க.அழைக்கப்படுகிறார்.- செய்வினைத்தொடராக்குக.

ஞாயிற்றொளி- புணர்ச்சி விதி கூறுக.

முன்னிலைப்பன்மை வினைமுற்றுச்சொற்களைப் பயன்படுத்தி தொடரமைக்க. 

குறைதீர்க்கற்றல்

கடினப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல். 

எளிய பயிற்சிகள் தருதல்.

பல்வேறு வினாக்கள் கேட்டல். 

தொடர் பணி

பாடப்புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து உரையாடல் வடிவில் மாற்றுக.

நன்றி 🙏



இராம்முருகன் தமிழாசிரியர் அரசூர்.




சனி, 3 டிசம்பர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு 5/12/2022 - 09/12/2022

நாள்: (5.12.22 - 9.12.22)
வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 
பாடம்: தமிழ்
தலைப்பு: இயல் 8 
    •மொழித்திறன் பயிற்சிகள் 
கற்றல் நோக்கங்கள்
விடைக்கேற்ற வினா அமைக்க கற்றல்.
செய்யுளின் நயங்களை அறிந்து பாராட்ட கற்றல். 
கற்றல் விளைவுகள்
கொடுக்கப்பட்ட விடைக்குப் பொருத்தமான வினா அமைக்க அறிகின்றனர். 
செய்யுளின் ஏற்புடைய நயங்களை அறிந்து, இன்புற்றுச்சுவைத்தல். 
கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்.
   மடிக்கணினி, விளக்க அட்டைகள், கரும்பலகை 
முன்னறிவு 
முந்தைய வகுப்பில் கற்ற பாடச் செய்திகளை நினைவூட்டல். 
எதுகைநயம் பற்றிக்கூறுக.
மோனை நயம் பற்றி நீ அறிந்ததைக்கூறு. 
பாட அறிமுகம்
கொடுக்கப்பட்ட விடைக்கேற்ற வினாக்கள் அமைத்தலை அறிமுகம் செய்தல்.                                              ஏற்புடைய நயங்களால் பாடல் சுவைக்கத்தக்கதாக மாறுவதைக்கூறல்.
ஆயத்தப்படுத்தல்
என் பெயர் கண்ணன். இத்தொடரை எவ்வாறு வினாவாக அமைக்கலாம்? 
பட்டம் -தட்டு இதில் இடம்பெற்றுள்ள நயம் எது? 
இது போன்ற எளிய கேள்விகளால் மாணவர்களை ஆயத்தப்படுத்தல். 
பாட வளர்ச்சி
விடையிலிருந்து வினாவை மூன்று வகைகளில் உருவாக்கலாம். 
    1.எழுவாய்
    2.செயப்படுபொருள் 
    3.பயனிலை 
மேற்கண்ட மூன்றில் ஒன்று விடையாக அமையும் படி நாம் வினாவை அமைக்கலாம். 
இலக்கிய நயம் பாராட்டலில் தொடை நயங்களான எதுகை, மோனை, இயைபு இந்த மூன்று நயங்களையும் விளக்குதல் சந்தநயம், அணிநயம், சொல் நயம், பொருள் நயம் இவற்றையும் மாணவர்களுக்கு விளங்கும்படியாக விளக்குதல். 

ஆசிரியர் செயல்பாடு
விளக்க அட்டைகளின் மூலம் ஒவ்வொரு வகை வினாவையும் உருவாக்குதலை கற்பித்தல்.
மடிக்கணினியில் ஒரு செய்யுளை காண்பித்து ஏற்புடைய நயங்களை வண்ணச் சொற்களால் குறிப்பிட்டு காண்பித்தல்.
மாணவர் செயல்பாடு
கொடுக்கப்பட்ட விடைக்கு மூன்று வகையான வினாக்களை உருவாக்குதல்.
கொடுக்கப்பட்ட பாடலில் எதுகை நயம், மோனை நயம், இயைபு நயம், சொல்நயம் பொருள்நயம் போன்றவற்றை குறியிட்டோ, அடிக்கோடிட்டோ காட்டுதல்.
வலுவூட்டல்
விடைக்கேற்ற வினா அமைத்தலை பல்வேறு பயிற்சிகளின் மூலம் வலுவூட்டல். 
எளிய பாடல்களை கொடுத்து ஏற்புடைய ஒன்று, இரண்டு நயங்களை சுட்டிக்காட்டி வலுப்படுத்துதல். 

மதிப்பீடு.
விடைக்கேற்ற வினா அமைக்க.
1.திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது? 
2.சாலைகளில் இடம்பெற்று இருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினை சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
3.நமது பாடப்பகுதியில் உள்ள பாடலில் ஏற்புடைய நயங்களை சுட்டிக்காட்டி இந்த இலக்கிய நயங்கள் பாடலை எவ்வாறு சுவையுள்ளதாக மாற்றுகிறது எனக் கூறுக.
குறைதீர்க்கற்றல் 
மீண்டும் எளிமையாக படப்பகுதியை கற்பித்தல். எளிய பயிற்சிகள் மூலம் பாடப் பகுதியை விளக்குதல். 
தொடர்பணி 
ஏற்புடைய நயங்கள் அமைந்த புதுக்கவிதை எழுதி வரவும். 
மாணவர்களுக்கான உரையாடலில் இடம்பெறும் விடைகளுக்கு ஏற்ற வினாக்களை அமைத்து தொகுத்து வருக.
நன்றி 🙏
இராம்முருகன், தமிழாசிரியர், அரசூர்.

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...