ஞாயிறு, 31 ஜூலை, 2022

ஆய்தஎழுத்து தனிநிலை எனப் பெயர் பெறக்காரணம்

 அசை பிரித்தலில் ஆய்தம் அலகு பெறுமா? 

எழுத்துகளின் ஒலிக்கும் காலஅளவை 'மாத்திரை' என்கிறோம். குறில் ஒரு மாத்திரையும், நெடில் இரண்டு மாத்திரையும், மெய் அரை மாத்திரையும் மெய்யைப் போன்றே ஆய்தமும் அரை மாத்திரை அளவைப்பெறுமென அறிவோம். அதனால் ஆய்தத்தை மெய் போல அலகுபெறாதெனக் கொள்ளலாமா? 

தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று 

இக்குறளை அசைபிரிப்போம். மூன்றாம் சீர் மற்றும் நான்காம் சீரைப் பிரித்தால், 

தோன்/றுக /- நேர் நிரை - கூவிளம்

அஃ/திலார்/ - நேர் நிரை- கூவிளம் 

'விளம் முன் நேர்' என்ற 'இயற்சீர் வெண்டளை' அமைப்பைப் பெறுகிறது இந்த அசை பிரிப்பில் ஆய்தம் மெய்யைப் போல் அலகு பெறவில்லை.

அலகு பெறாமல் வந்தால் மட்டுமே 'விளம் முன் நேர்' என்ற தளை அமைப்பைப் பெறும். ஓர்அலகு பெறுமாயின் அது நிரை என்ற வாய்ப்பாட்டைக் குறித்து தளை அமைப்பை மாற்றிவிடும்.

இந்த இடத்தில் ஆய்தமானது அலகு பெறாமல் (அஃ) மெய்யைப்போல்  செயல்பட்டு நேரசை பெறுகிறது.

அடுத்த குறளைப் பார்ப்போம்.

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு.

இக்குறளில் ஆய்தமானது எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்பதற்கு, மூன்றாம் சீர் மற்றும் நான்காம் சீரைப் பிரித்து தளையமைப்பைப் பார்க்கலாம்.

துண்/க - நேர் நேர் - தேமா 

அஃ/துடம்/பு - நிரை நிரை நேர் - கருவிளங்காய் 

மேற்கண்ட குறளில் 'மாமுன் நிரை' என்ற 'இயற்சீர்வெண்டளை' அமைப்பைப் பெறுகிறது.(அஃ) என்பது இருகுறில் அமைப்புடன் நிரையசை பெறுகிறது.

முதற்குறளில் மெய் போல அசை பெறாமலும் இரண்டாம் குறளில் உயிர்க் குறில் போல் அசை பெற்றும் இரண்டு தன்மைகளை ஆய்த எழுத்து பெறுகிறது. 

இதனால்தான் ஆய்தத்தை மெய்யும் அன்று; உயிருமன்று 'தனிநிலை' என்று கூறினர். 

இக்கருத்தை உணர்ந்து அலகிட்டு வாய்பாட்டில் தளையமைப்பைப் பார்த்தே சீரைப் பிரிக்க கற்றுத்தர வேண்டும். 

எல்லா இடங்களிலும் ஆய்த எழுத்தானது மெய்யைப் போல் அரை மாத்திரை பெற்று அலகு பெறாது எனக் கற்பித்தால்,

துண்/க நேர் நேர் - தேமா 

அஃ/துடம்/பு நேர் நிரை நேர் - கூவிளங்காய் 

இதில் மா முன் நேர் என்று நேரொன்றாசிரியத்தளை பெற்று வெண்பா இலக்கணத்துக்கு முரணாக அமையும்.

ஓரிடத்தில் மெய் போன்றும்,மற்றோரிடத்தில் உயிர்க்குறில் போன்றும் செயல்படுவதால் ஆய்த எழுத்தை 'அலித்தன்மை கொண்ட எழுத்து'என்கிறார் சங்கரநமச்சிவாயர்.இதை நாகரிகமாக 'தனிநிலை' என்று குறிப்பிடலாம்.


நன்றி

இரா.முருகன்

தமிழாசிரியர்

அரசூர் 


பன்னிரண்டாம் வகுப்பு இயல் 1 2 சிறுவினாக்கள்

 சிறுவினாக்கள் 

1. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக. 

2.'செம்பரிதி மலைமேட்டில் தலையை சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' தொடர் வெளிப்படுத்தும் ஆட்சிநயத்தை விளக்குக. 

3. ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்- இடஞ்சுட்டி பொருள் விளக்குக. 

4. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்கள் யாவை? 

5. கலை முழுமை என்பதனை விளக்குக. 

6. கவிதை மறுதலைத் தொடரைச் சான்றுடன் விளக்குக. 

7. பொருள் வேற்றுமை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

8. 'சொல்லோவியங்கள்' என்னும் கவிதையின் நூல் உங்கள் பள்ளியாசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. வெளியிட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி நன்றியுரை எழுதுக.

9. புவி வெப்பமயமாதலுக்கும் தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு யாது? 

10. பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக. 

12. மழை வெள்ள பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

13. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்? 

14. புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன?


வியாழன், 21 ஜூலை, 2022

 பகுபத உறுப்பிலக்கணத்தில் இடைநிலைகள் மட்டும்தான் காலம் காட்டுமா? 

உறுப்பிலக்கணம் கற்பிக்கும் போது ஒரு சொல்லைப் பகுத்து பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு உறுப்புகளைக் கற்பிக்கிறோம். இதில் பகுதி காலம் காட்டாத ஏவல் வினையாகவும், இடைநிலை காலம் காட்டக்கூடிய உறுப்பாகவும், விகுதி திணை மற்றும் பால் காட்டக்கூடிய உறுப்பாகவும் கற்பிக்கிறோம்.

 அதாவது, காலத்தை காட்டக்கூடிய பணியை இடைநிலை மட்டுமே செய்வதாய் எண்ணுகிறோம்.

காலத்தை பகுதியும் விகுதியும் கூட காட்டும். இந்தப் பதிவில் காலம் காட்டக்கூடிய பகுதிகள் பற்றி காண்போம். 

கு,டு,று என்னும் எழுத்துக்களை ஈற்றில் கொண்ட குறிலிணைப்பகுதிகள் ஒற்று இரட்டித்து இறந்த காலத்தைக்காட்டும்.

காலம் காட்டும் இடைநிலைகள் இல்லையென்றாலும் காலம் காட்டக்கூடிய பணியை பகுதிகளே சில சொற்களில் செய்யும்.

சான்று

தொடு+ஆன் 

இதில் காலத்தைக் காட்டக்கூடிய எந்த இடைநிலைகளும் இடம் பெறவில்லை. ஆனால் பகுதி குறிலிணையாக உள்ளது. இறுதியில் 'டு' என்ற எழுத்தை பெற்றிருக்கிறது. தொடு என்ற பகுதியில் ஒற்று இரட்டித்து 'தொட்டு' என்று மாறுகிறது.

தொட்டு+ஆன்(உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்னும் விதிப்படி)

தொட்ட்+ஆன் எனவும் (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி)

'தொட்டான்' எனப் புணர்ந்து இறந்த காலத்தை காட்டுகிறது. இதில் காலத்தைக் காட்டக்கூடிய பணியைப் பகுதியே செய்கிறது.

இதனைப் போன்றே 

புகு+ ஆன் 

பெறு+ ஆன்

என்னும் சொற்களும் பகுதியில் ஒற்று இரட்டித்து இறந்த காலத்தைக் காட்டும்.

எனவே காலத்தைக் காட்டும் பணியை இடைநிலைகள் மட்டும் செய்வதில்லை. மாறாக, சில சொற்களில் பகுதியும் செய்கிறது என உணரலாம்

புதன், 20 ஜூலை, 2022

பதினொன்றாம் வகுப்பு சிறு தேர்வு-1

                     சிறுதேர்வு-1 (25 மதிப்பெண்கள்)

அ)குறுவினா                      5×2=10

1. இனம், மொழி குறித்த இரசூல் பார்வையைக் குறிப்பிடுக.

2. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்? 

3. பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது? 

4. என் அம்மை ஒற்றியெடுத்த 

நெற்றி மண் அழகே!

 வழி வழி நினதடி தொழுதவர்

 உழுதவர், விதைத்தவர்

 வியர்த்தவர்கெல்லாம் 

நிறை மணி தந்தவளே!

இக்கவிதையில் இடம் பெற்றுள்ள வினையாலணையும் பெயர்களை எடுத்து எழுதுக.

5. 'நேரடி மொழி' என கருதுவது எதனை?

ஆ)சிறுவினா                        3×3=9

6. கவிஞர் சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

7. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

8. கவிஞர் சு வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்தி வருகிறது? 

இ) அடிபிறழாமல் எழுதுக.     2×3=6

9.ஏடு தொடக்கி வைத்து... பாடல் 

10. ஆக்கியோன் பெயரே... நன்னூல் பாடல் 

 

செவ்வாய், 19 ஜூலை, 2022

பன்னிரண்டாம் வகுப்பு சிறு தேர்வு 2

                      சிறுதேர்வு  (25 மதிப்பெண்)

அ) குறுவினா     5×2=10

1. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தின் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

2. சினத்தை ஏன் காக்க வேண்டும்? 

3. புக்கில் தன்மனை - சிறு குறிப்பு வரைக. 

4. 'மணந்தகம்' என்றால் என்ன?

5. சங்க இலக்கியம் வாழ்விடங்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது?

ஆ ) சிறுவினா      3×4=12

6. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து"- இடஞ்சுட்டி பொருள் விளக்குக.

7. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம்+ எவ்வாறு? 

8. சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் செய்த சடங்குகளை விவரிக்க. 

இ ) அடிபிறழாமல் எழுதுக.  1×3=3

"துன்பு உளது எனின்" எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல் 




செவ்வாய், 12 ஜூலை, 2022

 படைப்பாளர்களுக்கு உதவியாயிருக்கும்.. சேமித்துக் கொள்ளுங்கள்.


*அச்சு இதழ்கள்* 


காக்கைச் சிறகினிலே


kaakkaicirakinile@gmail.com


நிலவெளி 


editor.nilaveli@gmail.com


கணையாழி 

kanaiyazhi2011@gmail.com


ஆனந்த விகடன் 

solvanam@vikatan.com


காலச்சுவடு 

editor@kalachuvadu.com


உயிர்மை 

uyirmmai@gmail.com


கல்கி 

kalki@kalkiweekly.com


இந்து தமிழ் - காமதேனு 

kavithai@kamadenu.in


 *இணைய இதழ்கள்* 


பதாகை 

editor@padhaakai.com


கீற்று 

editor@keetru.com


சொல்வனம் 

solvanam.editor@gmail.com


வாசகசாலை 

vasagasalaiweb@gmail.com


கனலி 

kanalieditor@gmail.com


காற்று வெளி - லண்டன் 

mullaiamuthan16@gmail.com


கொலுசு 

kolusu.in@gmail.com 


நடு - பிரான்ஸ் 

editornadu@gmail.com

பன்னிரண்டாம் வகுப்பு சிறு தேர்வு

                சிறுதேர்வு - 1

குறுவினா                              3x2 = 6                            1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?

3. விடியல் வனப்பு இருசொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க 

ஆ) சிறுவினா  2 x 4 = 8

1.சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒருபண்பாகும் விளக்குக

2. ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்- இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.

இ) நெடுவினா 1x6=6

தமிழின் சீரிளமைத் திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக. 

மனப்பாடப் பாடல் lx5=5

தன்னேர் இலாத தமிழ்


மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...