ஞாயிறு, 31 ஜனவரி, 2021
கோபல்லபுரத்து மக்கள்
முன்னுரை
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பலும், அவர்களின் எளிமையான உணவும், இயல்பான வரவேற்பும், பசித்த வேளையில் வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற நேயத்தை பற்றியும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
அன்னமய்யாவும் விருந்தாளியும்
சுப்பையாவின் புஞ்சையில் அருகுஎடுத்துக் கொண்டிருந்தபோது, அன்னமய்யா யாரோ ஒரு சந்நியாசியை கூட்டிக்கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தார்.
விருந்தாளியின் நிலை
அழுக்கு உடையும், தாடியுமாக நடக்க முடியாமல் தள்ளாடி வந்தவர் அப்படியே ஒரு புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்தார் பசியால் வாடியஉடலும், சோர்வடைந்தகண்களும், களைப்புடனும் காணப்பட்டார்.
அன்னமய்யாவின் உபசரிப்பு
அன்னமய்யா அருகில் சென்று பார்த்ததும், சோர்வாக காணப்பட்ட மனிதர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். உடனே, அன்னமையா அருகு எடுத்துக்கொண்டிருக்கும் கொத்தாளிகள் கொண்டுவந்த மண் கலயத்தில் இருந்து நீச்ச தண்ணியை சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தார்.
சம்சாரி மக்களின் எளிய விருந்தோம்பல்
விருந்தாளி களைப்பாறியதும், அவரை அழைத்துக்கொண்டு சுப்பையா புஞ்சைக்கு வந்தார் அன்னமய்யா.அங்கிருந்த சம்சாரிகள் இருவரையும் வரவேற்று தங்களுடன் சாப்பிடும்படி கூறினார் அவர்கள் சாப்பிடுவதற்காக கம்மஞ்சோற்றையும்,காணத்துவையலையும் தந்தார்கள்.
இடது கையில் கம்மஞ்சோற்று உருண்டைகளை வாங்கி, வலது கையால் துவையலைத்தொட்டுக் கொண்டு இரண்டு உருண்டைகள் சாப்பிட்டனர்.
விருந்தாளியின் நன்றியுணர்வு விருந்தாளி தன்னை 'மணி' என்று அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடையபசியையும், களைப்பையும் நீக்கிய எளிய மக்களின் உணவையும் உபசரிப்பையும் கண்டு மனம் மகிழ்ந்தார் எளிய மனிதர்களிடம் உள்ள பாசமும், பகிர்ந்து உண்ணும் நேயமும் அவரை வியக்க வைத்தது.
முடிவுரை
"பசித்த வயிற்றுக்கு சோறிடல்" வேண்டும் என்ற பண்பாடு ஏழை எளிய மனிதர்களிடம் காணப்படுவது நமது பண்பாட்டின் சிறப்பம்சமே.
சனி, 30 ஜனவரி, 2021
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக
அரசுப் பொருட்காட்சிககு சென்று வந்த நிகழ்வு
முன்னுரை
எங்கள் ஊர் மதுரை மாநகரம் ஆகும்.
மதுரை சித்திரைத்திருவிழாவின் போது அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெறும்.
பொருட்காட்சி அமைவிடம்
சித்திரைப் பொருட்காட்சி மதுரையில் தமுக்கம் மைதானத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நாள் குடும்பத்துடன் பொருட்காட்சிக்கு சென்று கண்டுகளித்து வந்தோம்.
பல்துறை அரங்குகள்
அரசு சார்பாக நடத்தப்படுகின்ற பொருட்காட்சியாக இருப்பதால் காவல்துறை, சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, விளம்பரத்துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை சார்பாக தனித்தனி அரங்குகள் எங்கள் கண்களை கவர்ந்தன. வண்ண விளக்குகளுடன் ஏராளமாக புகைப்படங்களும் செய்முறை காட்சிகளும் அந்த அரங்கில் பார்ப்பவர்கள் மனத்துக்கு விருந்தாக அமைந்தன.
விளையாட்டு அரங்குகள்
சிறுவர்கள் பெரியவர்கள் பொழுதுபோக்க ஏராளமான விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இராட்டினங்கள், ஊஞ்சல், மின்சார தொடர்வண்டிகள், இராட்சத ராட்டினங்கள் போன்றவற்றில் நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.
உணவு அரங்குகள்
பொருட்காட்சிக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் அங்கே தென்னிந்திய உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள், பலகாரங்கள், குளிர்பானங்கள் என்று நிறைய உணவு அரங்குகள் இருந்தன.
நாங்கள் வயிறார உண்டு மகிழ்ந்தோம்.
விளையாட்டுப் பொருட்கள் பொருட்காட்சியில் குழந்தைகள் விளையாடி மகிழ, எண்ணற்ற விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நடைபெற்றது. மேலும் பலவகையான வீட்டு உபயோகப் பொருட்கள்
விற்பனையும் நடந்தது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம்
முடிவுரை
குடும்பத்துடன் சென்று பொருட்காட்சியை கண்டுகளித்து, மனம் மகிழ விளையாடி, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு
மகிழ்ச்சியாக நாளை கழித்தது என்னால் என்றும் மறக்க இயலாது.
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை
' வானை அளப்போம். கடல் மீனை அளப்போம்' என்றான் பாரதி 'ஆணுக்குப் பெண் சரிசமம்' என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் விண்வெளியில் கால் பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி கல்பனா சாவ்லா பற்றி இக்கட்டுரையில் காண்போம்
பிறப்பு
அரியானா மாநிலத்தில் 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பனாராஸ்லால் சாவ்லா-சன்யோகிதாதேவி இணையருக்கு மகளாகக் கல்பனா சாவ்லா பிறந்தார்.
கல்வி
கர்னலில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986இல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் 1988இல் விண்வெளிபொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விண்வெளிப்பயணம்
கல்பனா சாவ்லா 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். கொலம்பிய விண்வெளி ஊர்தியில் பயணம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.
எதிர்பாராத விபத்து
2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் விண்வெளி ஆராய்ச்சிக்காக கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்று ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு பிப்ரவரி 1ஆம் நாள் பூமிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வானவெளியில் விண்கலம் வெடித்துச் சிதறியது இதில் கல்பனா உட்பட ஏழு வீரர்களும் பலியாகினர்.
விருதுகளும் சிறப்புகளும்
1. அமெரிக்காவின் நியூயார்க் சாலைக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்
2.நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
3. நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம்
4.இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கல்பனா சாவ்லா பெயரில் விருது.
முடிவுரை
பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் கல்பனா சாவ்லா விடா முயற்சியுடனும் முழு மனதோடும் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உலகிற்கு உணர்த்திய வீரப் பெண்மணி கல்பனா சாவ்லாவைப் போற்றுவோம்
திங்கள், 25 ஜனவரி, 2021
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மனோன்மணியம்
4.1 மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில் Act என்று குறிப்பிடலாம். களம் என்ப...
-
நாள்: (12.6-23-16-6.23) வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு பாடம்: தமிழ் தலைப்பு: இயல் 1 கவிதைப்பேழை- இளந்தமிழே ...
-
நாள்: 11.11.24 - 15.11.24 வகுப்பு: பதினோராம் வகுப்பு பாடம்: தமிழ் தலைப்பு: இயல் 7 பதிற்றுப்பத்து, சிந்தனைப் பட்டிமன்...
-
நாள்:12.6.23-16.6.23 பாடம்: தமிழ் தலைப்பு:இயல்1 கவிதைப்பேழை- யுகத்தின் பாடல் நன்னூல் பாயிரம் உரைநடை- ...