பத்தாம்வகுப்பு இயல் 3
காலம்: 1.30மணி. மதிப்பெண்கள்:30
குறுவினாக்கள். 5×2=10
1. விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக.
வாருங்கள்; தங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி .
வந்து அமருங்கள்; தண்ணீர் அருந்துங்கள்
நீங்கள் முன்னரே சொல்லி இருந்தால், உங்களை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்து வந்திருப்பேனே.
தேநீர் சாப்பிடுங்கள்; கொஞ்சம் ஓய்வெடுங்கள்; உணவு தயாரானதும் அழைக்கிறேன்.
2.'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கிய செய்தி விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாக உங்கள் கருத்தை குறிப்பிடுக.
விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத பொருள் அல்ல. மாறாக, விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்க வேண்டிய நல்ல மனநிலை வேண்டும். விருந்தினர்கள் எத்தனை முறை வந்தாலும் முதல் முறையாக உபசரிப்பதைப்போன்றே வரவேற்க வேண்டும். சங்ககாலத்தில் தேனும் திணை மாவும் கொடுத்து விருந்தினரை உபசரித்த செய்தியை இலக்கியத்தில் நாம் அறியலாம். விருந்தினர்களை உபசரிக்க பணம் தேவையில்லை. நம்மிடம் என்ன உள்ளதோ? அதைக் கொடுத்து முகமலர்ச்சியுடன் வரவேற்றாலே போதுமானது.
3. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத் தொடரானது. அப்படியானால் 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?
சிரித்துசிரித்துப் பேசினார்.
4. 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்'- இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
கூத்தனை ஆற்றுப்படுத்தும் கூத்தனொருவன் நன்னனின் புகழைக்கூறும் விதமாக இத்தொடர் அமைந்துள்ளது.
தொடரின் பொருள்
நெய்யில் வேகவைத்த பெரிய மாமிசத்துண்டுடன் திணைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் என்பதே இதன் பொருளாகும்
இறடிப்பொம்மல் - தினைச்சோறு.
5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
பாரதியார் கவிஞர் -பெயர்ப் பயனிலை .
நூலகம் சென்றார் - வினைப் பயனிலை .
அவர் யார்? - வினாப் பயனிலை.
பகுதி 2
சிறுவினாக்கள் 4×5=20
1. "கண்ணே கண்ணுறங்கு
காலையில் நீயெழும்பு
மாமழை பொய்கையிலே
மாம்பூவேகண்ணுறங்கு
பாடினேன்தாலாட்டு
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு"
தாலாட்டு பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
கண்ணே கண்ணுறங்கு -விளித்தொடர்
காலையில் நீயெழும்பு - ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்.
மாமழை - உரிச்சொற்றொடர்
மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்
பாடினேன் - வினைமுற்றுத் தொடர்
ஆடி ஆடி -அடுக்குத்தொடர்.
2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப்பொருள்கள் யாவை?
முல்லை நிலம்
காடும் காடுசார்ந்த பகுதியும் முல்லை நிலமாகும்.
காட்டில் விளையும் செந்நெல், சாமை, கேழ்வரகு,கம்பு, சோளம் ,பயிறு வகைகள் ,தினை போன்றவையும் கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பால், இறைச்சி முதலியனவும் முல்லை நிலத்தின் உணவுப் பொருள்கள் ஆகும்.
மருத நிலம்
வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருத நிலமாகும்
உழவுத்தொழில் மூலம் கிடைக்கக்கூடிய நன்செய் நில உணவுகளான நெல் ,காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுசிறு நீர் நிலைகளில் கிடைக்கும் மீன்கள், மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால் மற்றும் பாலில் இருந்து கிடைப்பவை மருதநிலத்தின் உணவுப் பொருள்களாகும்.
3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும அதில் தலை வைக்க திண்டும் அமைத்தனர்
திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாக காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுதுக.
இன்று வீட்டுக்குத்திண்ணை வைத்து கட்டுவதில்லை. அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதும் இல்லை.
காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன.
பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் உபசரித்து வழியனுப்பும் வரை விழா ஏற்பாட்டாளர்கள் செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதை காண முடிகிறது.
4.கூத்தனை கூத்தன் ஆற்றுப் படுத்தும் முறையை கூத்தராற்றுப்படை எப்படிக் காட்டுகிறது?
கூத்தன் தான் பெற்ற செல்வத்தை கூறி எதிர் வந்த கூத்தனிடம் நீயும் அவ்வள்ளலை நாடினால் என்னைப் போன்று செல்வம் பெற்று வளமோடு வாழலாம் என வழிப்படுத்துவதேகூத்தராற்றுப்படை ஆகும்.
நன்னனைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம், "நீங்கள்செல்லும் வழியில் மலைப்பக்கத்தில் புதுவருவாயுடைய கானவர்களின் சிற்றூர் அமைந்திருக்கும். இது மானமும் வலியமுயற்சியுடன் போர்புரியும் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டது. அவ்வூரில் சென்று'நன்னனின் கூத்தர்கள்' என்று கூறுங்கள். அவர்கள், உங்களை தங்கள் உறவினர்கள் போல் வரவேற்று இனியசொற்களைக் கூறி, உங்களின் களைப்பு நீங்கும் படி, நீங்கள் உண்பதற்குப் பெரிய மாமிசத்துண்டையும் தினைச்சோற்றையும் தந்து வரவேற்பார்கள். இப்பாடலில் நன்னனின் வீரத்தையும் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிகழும் விருந்தோம்பல் பற்றியும் விளக்கி கூத்தனை வழிப்படுத்தல் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
