சனி, 20 பிப்ரவரி, 2021

பத்தாம் வகுப்பு சிறுதேர்வு

                                             பத்தாம் வகுப்பு 

                                               சிறுதேர்வு              மொத்தமதிப்பெண்கள்50

அ) பலவுள் தெரிக.                                                                                          5×1=5

1.எந்தமிழ்நா - என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும்? 

  • அ)எந்+தமிழ்+நா 
  • ஆ) எம்+தமிழ்+நா 
  • இ) எந்த+தமிழ்+நா 
  • ஈ) எந்தம் +தமிழ்+நா 

2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் - இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது 

  • அ) இலையும் சருகும்் 
  • ஆ)தோகையும் சுண்டும் 
  • இ) தாளும் ஓலையும் 
  • ஈ)சருகும் சண்டும் 
3. பெரிய மீசை சிரித்தார்- வண்ணச்சொல்லுக்கான தொகை  எது? 
  • அ) பண்புத்தொகை 
  • ஆ) உவமைத்தொகை 
  • இ) அன்மொழித்தொகை 
  • ஈ) உம்மைத்தொகை 
4. உனக்கு பாட்டுகள் பாடுகிறோம்
 உனக்கு புகழ்ச்சிகள்கூறுகிறோம்
பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை? 
  • அ) உருவகம், எதுகை 
  • ஆ) மோனை, எதுகை 
  • இ) முரண், இயைபு 
  • ஈ) உவமை, எதுகை 
5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது 
  • அ) வேற்றுமை உருபு 
  • ஆ) எழுவாய் 
  • இ) உவமை உருபு 
  •   ஈ) உரிச்சொல் 
ஆ)எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி.                5x2=10

1.வேங்கை என்பதைக் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடை வகையைச் சுட்டி அதன் இலக்கணம் கூறு.
3."நமக்கு உயிர் காற்று 
காற்றுக்கு வரம் மரம்- மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்"- இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக
4. வசன கவிதை- குறிப்பு வரைக.
5.தண்ணீர் குடி, தயிர் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
6. மாஅல் பொருளும் இலக்கணக்குறிப்பு தருக.
இ) எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி.           
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை ?
2.சோலை காற்றும், மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
3. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக. 
4. வேலொடு நின்றான் இடுவென் றது போலும் 
கோலொடு நின்றான் இரவு.-குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக. 
5.வள்ளுவம் சிறந்த அமைச்சருக்கு உரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி  விளக்குக. 
ஈ) எவையேனும் ஒன்று மட்டும்
1. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும்,பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை தயாரிக்கவும்.
2.சிலப்பதிகார மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
உ) எவையேனும் ஒன்று மட்டும்                                                      1x8=8
1. அன்னமய்யாாவின் பெயருக்கும் குணத்துக்கும் உள்ள பொருத்தப்பாட்டை'கோபல்லபுரத்து மக்கள்' கதை வழியாக விளக்குக.
2. கு. அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' என்னும் சிறுகதையில் நல்ல மனத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
ஊ) ஒரு பக்கத்துக்கு மிகாமல் எழுதுக.                                         1x8=8
1.அரசு பொருட்காட்சிக்கு சென்றுவந்த நிகழ்வை கட்டுரையாக்குக.
                     (அல்லது)
2. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.






 







புதன், 17 பிப்ரவரி, 2021

உங்கள் பள்ளி நூலகத்திற்கு தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக

                                                     

அனுப்புநர்,
                ம . அமுதன்,
               ஒன்பதாம் வகுப்பு 'அ' பிரிவு ,
              அரசு மேல்நிலைப்பள்ளி ,
              ம. ரெட்டியபட்டி.(626118) .
பெறுநர்,
               மேலாளர் ,
              நெய்தல் பதிப்பகம் ,
              சென்னை-600001.

ஐயா,

           வணக்கம். தமிழ் மொழியிலுள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய தங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ் - தமிழ் - ஆங்கிலம் கையடக்க அகராதியின் பத்துப் படிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அகராதிகளுக்கு உரிய பணத்தை காசோலையாகத் தங்கள் பதிப்பகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்.

                              நன்றி .

                                                                                                  தங்கள் உண்மையுள்ள,

                          ம. அமுதன்.

                                                                                                                      

                                                                                                                                  

உறைமேல் முகவரி,

             மேலாளர்,

          நெய்தல் பதிப்பகம் ,

          சென்னை 600001..

.


           


செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தொகுப்புரை எழுதுதல்

 பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

ம. ரெட்டியபட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 18.02.2021 அன்று இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்தினைப்பாட விழா இனிதே துவங்கியது. 

பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சு.ஜெயராஜ் அவர்கள் சிறப்பான வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு. சண்முகநாதன் தாய் மொழியின் பெருமையையும், தாய் மொழியில் கற்பதால் ஏற்படும் நன்மையையும் விளக்கினார். தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். மாணவர்கள் இலக்கியங்களைக் கற்று அதன் இன்பத்தை நுகர வேண்டும் என வேண்டினார். ஒழுக்கமும், விடாமுயற்சியும், நாட்டுப்பற்றும் மாணவப் பருவத்தில் இருக்க வேண்டிய அருங்குணங்கள் என்று எடுத்துரைத்தார்.  இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற  மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இலக்கிய மன்றச் செயலர் அமுதன் நன்றியுரை கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் இசைக்க, விழா இனிதே நிறைவுற்றது.


திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஒன்பதாம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினா விடைகள்

 1) திராவிட மொழிகளுக்கும் மூத்த மொழியாக விளங்குவது தமிழ் மொழி ஆகும்

2)திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்

3)தமிழ் என்னும் சொல்லில் இருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

4) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் கால்டுவெல்

5)  தெலுங்கு நடுத்திராவிட மொழி ஆகும்

6) 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்

7) உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

8) இலங்கை மற்றும் சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக இருப்பது தமிழ்.

9)தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்வகை கண்ணி ஆகும்.

10) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒன்று

11) சந்து இலக்கியம் என்று பெயர்பெற்றது தூது இலக்கியம் ஆகும்.

12) தமிழ்விடு தூது 268 கண்ணிகள் கொண்டது

13)தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பதை ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது.

14) வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும்

15) பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்

16)செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டுவினை ஆகும்.

17) சிந்தாமணி என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்

18) மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு ஊருணி என்று பெயர்.

19) அடியவர் பெருமையைக் கூறும் திருத்தொண்டத் தொகையை எழுதியவர் சுந்தரர் ஆவார்.

20)திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

21)அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணமே பெரிய புராணம் ஆகும்.

22) பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்.

23) சேக்கிழார் சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்.

24) புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.

25) ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு காளைச் சண்டை ஆகும்.

26) தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மை உடையது

27)இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

28) மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

29) மணிமேகலைக் காப்பியத்திற்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.

30) வேதிகை என்பதன் பொருள் திண்ணை ஆகும்

31) வசி என்பதன் பொருள் மழை ஆகும்

32) கலாம் என்பதன் பொருள் போர் ஆகும்.

33) மணிமேகலைக் காப்பியம் பௌத்த சமயச் சார்பு உடையது

34) 'பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்' என்று கூறும் நூல் மணிமேகலை.

35) ரோமானியர்களின் பழங்காசுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் கோயம்புத்தூர்.

36) முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர்

37) நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்

38) இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்

39) ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும்

40) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

41) உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

42) உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

43)திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்

44) திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகளில் பரிமேலழகர் உரையே சிறந்தது ஆகும்

45) கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்

46)தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.

47)இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் விக்ரம் சாராபாய் ஆவார்

48) இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் அப்துல் கலாம் ஆவார்

49)செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலி சித்தாரா

50) இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்

51) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

52) பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது

53) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

54) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

55) அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது

56)சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

57)தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

58)அடையாற்றில் அவ்வை இல்லம் அமைத்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

59)தமிழக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

60) இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே ஆவார்

61)தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் மறைமலை அடிகளின் மகளாவார்

62) பாரதிதாசனின் இயற்பெயர் கனக. சுப்புரத்தினம் ஆகும்

63) வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறியவர் பேரறிஞர் அண்ணா துரை

64) தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா

65)ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதிமகால் நூலகம் ஆகும்.

66) உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் சென்னை கன்னிமாரா நூலகம் ஆகும்

67)இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரியது திருவனந்தபுரம் நடுவண் நூலகம் ஆகும்

68)இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகமே ஆகும்

69)உலகின் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் ஆகும்

70) இராவண காவியத்தை எழுதியவர் புலவர் குழந்தை ஆவார்

71) இராவண காவியம் 3100 பாடல்களைக் கொண்டது

72) தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் புலவர் குழந்தை ஆவார்

73)ராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்ட காவியம் ராவண காவியம் ஆகும்

74) ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்

75) பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்

76) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர் ஆண்டாள்

77)ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகும்

78) நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது

79) புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது ஆகும்

80)நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகத் தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் நேதாஜி

81) இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு ஜப்பானுக்குப் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 'டோக்கியோ கேடட்ஸ்' எனப்பட்டனர்.

82) முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் மோகன் சிங் என்பவரின் தலைமையில் ஜப்பானியரால் உருவாக்கப்பட்டது.

83)தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.

84)இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் தில்லான்.

85) டோக்கியோ கேடட்ஸ் பயிற்சி பெற ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இடம் இம்பீரியல் மிலிட்டரி அகடமி.

86) இந்திய தேசிய ராணுவம்(18-03-1944) ஆங்கிலேயரை வென்று மணிப்பூர்ப் பகுதியில் மூவண்ணக் கொடியை ஏற்றிய இடம் மொய்ராங்

87) சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ஆகும்

88) மணநூல் என்று அழைக்கப்படும் நூல் சீவக சிந்தாமணி ஆகும்

89) சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர் ஆவார்.

90) திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்

91)நாட்டு விடுதலையை விட பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர் பெரியார்

92) ஈ வே ரா வுக்குப் 'பெரியார் 'எனும் பட்டம் வழங்கப்பட்ட இடம் ( 1938 நவம்பர் 13 இல்) சென்னையில் நடந்த பெண்கள் மாநாடு.

93) தந்தை 

பெரியாரைத் தெற்குஆசியாவின் சாக்கரடீஸ் 

எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்த அமைப்பு யுனெஸ்கோ மன்றம்(27-06-1970)

94) தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரைப் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

95) யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில் நெடில் ஒற்று என மூவகைப்படும்

96) ஈரசைச்சீர் களுக்கு இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்னும் வேறு பெயர்களும் உண்டு

97) யாப்பின் உறுப்புகள் எழுத்து, அசை ,சீர், தளை, அடி ,தொடை எனும் ஆறு ஆகும்

98) வேரில் பழுத்த பலா என்னும் புதினத்தின் ஆசிரியர் சு சமுத்திரம் ஆவார்

99) தளை ஏழு வகைப்படும்

💯) அடி ஐந்து வகைப்படும்

101) தொடை எட்டு வகைப்படும்.

சனி, 13 பிப்ரவரி, 2021

வரவேற்பு மடல்

 சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக்கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

               வரவேற்பு மடல் 

        அரசு மேல்நிலைப்பள்ளி

                ம. ரெட்டியப்பட்டி .

18.02.2021 அன்று பள்ளியில் நடைபெறும் சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்கும் பள்ளிகளின் வரிசையில் முதலிடம் பெற்ற பள்ளிக்குப் பரிசளிக்க வருகைதரும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கும் வரவேற்பு மடல்.

தூய்மையின் நாயகரே

பள்ளிகளில் படிப்புடன் தூய்மையும் அவசியம் என்பதை உணர்ந்து தாங்கள் பதவியேற்றவுடன் சுற்றுப்புறச் சூழலைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினீர்கள். தங்களின் சமூக உணர்வு கண்டு பேருவகை கொள்கிறோம்.

இயற்கைக்காவலரே!

எங்கள் பள்ளி ஆய்வின்போது மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை எங்கள் எல்லோருக்கும் எடுத்துரைத்தீர்கள்.

"மரங்கள் காற்றை சலவை செய்யும் இயந்திரங்கள்"

என்ற கவிதை வரிகளைக் கூறி எங்களை மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினீர்கள். இன்று எங்கள் பள்ளிமுழுவதும் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

புதுமைகளின் புதல்வரே!

சுற்றுப்புறமே சுகாதாரத்தின் அடிப்படை என்று சொல்வதோடு நில்லாமல் பேணிக்காக்கும் பள்ளிக்குச் சிறப்புப்பரிசு அறிவித்து மாணவர்களிடம் ஆர்வத்தைத்தூண்டிய புதுமைநாயகரே !

தங்களை எங்கள் பள்ளியின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

                                         இப்படிக்கு,     ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்,

                அரசு மேல்நிலைப்பள்ளி.

18.02.2021,

ம. ரெட்டியபட்டி.









வியாழன், 11 பிப்ரவரி, 2021

உலகத் தாய்மொழி நாள் - நிகழ்ச்சி நிரல்

    உலகத் தாய்மொழி நாள்

             நிகழ்ச்சி நிரல் 

தலைமை: திரு மு. தமிழன்பன், 

                       (பள்ளிச் செயலர்) ,

முன்னிலை: பொன். பழனிவேல், மாவட்டக்கல்வி அலுவலர் .

வரவேற்புரை:திரு சு. வடிவேல், தலைமையாசிரியர்.

தமிழ்த்தாய் வாழ்த்து: திருமதி பூங்கொடி, தமிழாசிரியை .

விழாப்பேருரை:திரு பாரதிக்கண்ணன், தமிழறிஞர்.

வாழ்த்துரை: பேராசிரியர் பூவரசனார் , தியாகராயர் கலைக்கல்லூரி.

நன்றியுரை: திரு பொன்னன், தமிழாசிரியர் 

நாட்டுப்பண்: மாணவியர்.







புதன், 10 பிப்ரவரி, 2021

நண்பனுக்குக் கடிதம்

 உனக்குப் பிறந்தநாள் பரிசாக உன் நண்பன் வழங்கிய "கால் முளைத்த கதைகள்" என்ற நூலைக் குறித்த கருத்துக்களை உனது நண்பனுக்குக் கடிதமாக எழுதுக.

                                                மதுரை

                                           10.02.2021.

அன்புள்ள நண்பன் முகிலனுக்கு

இங்குஅனைவரும் நலம். அதுபோல், அங்கு நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?

நீ எனக்கு பிறந்தநாள் பரிசாக கால் முளைத்த கதைகள் என்ற புத்தகத்தை அனுப்பி இருந்தாய்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள் புத்தகத்தை ஆவலோடு படித்தேன் அத்தனை கதைகளும் அருமை. பூமியில் மனிதர்கள் தோன்றிய கதையும், காகம் ஏன் கருப்பாக இருக்கிறது?என்ற கதையும் உலகெங்கும் உள்ள பழங்குடி மக்களின் நாட்டுப்புறக் கதைகள் என்பதை அறிந்தவுடன் வியப்படைந்தேன்.

இந்த அருமையான புத்தகத்தை நீ எனக்கு பரிசாக அளித்ததற்கு மிகவும் நன்றி.

                                  உன் அன்புள்ள,

                                      இரா.அழகன்.

உறைமேல்முகவரி,

கே. முகிலன்,

அண்ணாநகர்,

மதுரை-18.






                   

                  

புதன், 3 பிப்ரவரி, 2021

இயல்:2சிறுவினா

 சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக் காற்று :  வணக்கம் செயற்கை காற்றே!

மின்விசிறிக்காற்று : வணக்கம் .

சோலைக் காற்று : நான் இல்லாவிட்டால் நீ இல்லை தானே?

மின்விசிறிக்காற்று : நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சாரம் இல்லாவிட்டால் நான் இல்லை

சோலைக் காற்று : நீ ஏன் வெப்பத்தையே கொடுக்கிறாய்

மின்விசிறிக்காற்று : அது என்னால் இல்லை. நான் மனிதனால் படைக்கப்பட்டவன் என் நிகழ்வுகள் அனைத்திற்கும் மனிதனே காரணம்

சோலைக் காற்று : நீ மனிதர்களுக்கு உடல் கேடுகளை உண்டாக்குகிறாய் 

மின்விசிறி காற்று : உன்னைப்போல் இயற்கையாக நானில்லையே!






மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்தாய் வாழ்த்தை யும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒப்பிடுதல்


திங்கள், 1 பிப்ரவரி, 2021

நாளிதழில் கட்டுரையை வெளியிட வேண்டி கடிதம்

நாளிதழின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி கடிதம் எழுதுக
அனுப்புனர்,
               இரா.அமுதன்,
               தெற்குத் தெரு,
               ம.ரெட்டியபட்டி(அஞ்சல்),
               அருப்புக்கோட்டை வட்டம்,
               விருதுநகர் மாவட்டம்.
பெறுநர்,
               பதிப்பாசிரியர்,
              தினத்தந்தி நாளிதழ்
              மதுரை.
ஐயா,
       பொருள்: நாளிதழில் கட்டுரையை வெளியிட வேண்டுதல்-சார்பு
வணக்கம், தங்கள் நாளிதழில் பொங்கல் மலர் வெளியிடவிருப்பதை
அறிந்தேன். அந்தப் பதிப்பிற்கு உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும் விதமாக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்'என்ற கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளேன்.எனது கட்டுரை சிறப்பாக இருந்தால் தங்கள் நாளிதழில் வெளியிட்டு உதவும் படி
பணிவன்புடன் வேண்டுகிறேன்.
                       நன்றி
                                        தங்கள்                                                           உண்மையுள்ள,
                                         இரா.அமுதன்
உறைமேல் முகவரி,
பதிப்பாசிரியர்,
தினத்தந்தி நாளிதழ்,
மதுரை.



   

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...