நாள்: அக்டோபர் மூன்றாவது வாரம்
வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: இயல்7 (வையத்தலைமை கொள்)
• இலக்கியத்தில் மேலாண்மை
• அதிசய மலர்
• தொன்மம்
கற்பித்தல் நோக்கங்கள்:
• தலைமைப்பண்பிற்கான கூறுகளைப் பகுத்தாராய்தல். இலக்கியத்தில் சுட்டப்பட்டுள்ள அன்றாட வாழ்க்கைக்கான மேலாண்மைக் கூறுகளை அறிந்து கொள்ளுதல்.
• மீண்டெழும் ஒரு சமூகத்தின் உணர்வுகளை கவிதையாக்கும் திறன் பெறுதல் .
• தொன்மங்களை அறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் நுட்பமறிதல்.
கற்பித்தல் உபகரணங்கள்:
• இறையன்பு நூல்கள்
• மேலாண்மை குறித்த இணையக்கட்டுரைகள்
• ஈழக்கவிதைகள் பற்றிய இணையக்குறிப்புகள்.
• மடிக்கணினி
• கரும்பலகை
ஆயத்தப்படுத்தல்:
உன் கற்றலுக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுவாய்?
அயல்நாட்டுக்கவிஞர்களில் உன்னைக் கவர்ந்தோரின் பெயர்களைக் கூறு.
நீ அறிந்த புராணக்கதைகள், பழங்கதைகளைக் கூறு.
ஆசிரியர் செயல்பாடு
இலக்கியத்தில் மேலாண்மை
மேலாண்மை என்பதன் பொருள் கூறுதல்
நேரமேலாண்மை குறித்தும், திட்டமிடல் குறித்தும் விளக்குதல்.அதற்கான இலக்கியப்பதிவுகளைச்சுட்டல்.
வேளாண் மேலாண்மை குறித்தும் அதன் படிநிலைகள் பற்றியும் விளக்குதல்.
வணிகமேலாண்மை குறித்தும் அதற்கான பட்டினப்பாலை இலக்கியச் சான்றுகள் காட்டியும் விளக்குதல்.
நிருவாக மேலாண்மை குறித்தும் உரிய திருக்குறள் பாடலைச் சுட்டிக்காட்டியும் விளக்குதல்.
மேலான மேலாண்மையில் வரவு செலவு பற்றியும் செயலுறுதி பற்றியும் உரிய இலக்கியச் சான்றுகளுடன் விளக்குதல்.
அதிசயமலர்:
ஈழத்துமக்களின் துயரநிலையை விளக்குதல்.
உள்நாட்டுப்போரின் தாக்கங்களைக் கூறுதல் .
போருக்குப்பின்னான அவர்களின் நம்பிக்கையை விளக்குதல்.
கவிதையின் பொருள் பொதிந்த வரிகளைச்சுட்டிக்காட்டுதல்.
இணையம் மூலம் பிற ஈழக்கவிதைகளை வாசித்துக்காட்டுதல்.
தொன்மம்
தொல்காப்பியர் காட்டும் எட்டுவகை வனப்புகளுள் ஒன்றான தொன்மம் பற்றி விளக்குதல்.
கதையில் தொன்மத்தைப் பயன்படுத்திய நுட்பங்களை கு.அழகிரிசாமி கதைகள் மூலம் விளக்குதல்.
புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனம் ' கதையில் தொன்மம் பற்றிக்கூறுதல் .
இலக்கியத்தில் தொன்மம் பயின்ற அடிகளைச்சுட்டுதல்.
புதுக்கவிதைகளில் தொன்மத்தின் பயன்பாடு பற்றி அப்துல்ரகுமான் கவிதை மூலம் விளக்குதல்.
மாணவர் செயல்பாடு
மேலாண்மை என்பது குறித்து கலந்துரையாடுதல்
நேர மேலாண்மை குறித்தும் ஒரு நாளை திட்டமிடுவது குறித்தும் கலந்துரையாடல
கவிதைகளைப் பொருளோடு படித்தல்.போருக்குப் பிந்தைய நிலைகளைத் தொகுத்துக் கூறுதல்
தொன்மம் அடங்கிய பழமொழிகளை கூறுதல்.
குறிப்பிட்ட கவிதைகளை கொடுத்து அதில் இடம்பெற்ற தொன்மத்தினைக் கண்டறிதல்.
மதிப்பீடு
மேலாண்மை என்னுஞ்சொல்லின் பொருள் கூறுக.
வேளாண்மேலாண்மைக் கூறுகளை விளக்குக.
'இச்செடியிலிருந்து காடு பெருகும்' தொடர் உணர்த்தும் பொருள் யாது?
எட்டுவகை வனப்புகள் யாவை?
கற்றல் விளைவுகள்
பல்வேறு வகையான மேலாண்மையை அறிந்து வாழ்வில் கடைப்பிடித்தல்.
மனிதகுலத்தின் துயரத்தையும், நம்பிக்கையையும் உணர்கின்றனர்.
படைப்பின் நுட்பமான தொன்மத்தைப் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்க அறிகின்றனர்.
தொடர்பணி:
உனது ஒருநாளை நேரமேலாண்மைப்படி திட்டமிடு.
ஈழத்துக்கவிஞர்களையும் அவர்தம் படைப்புகள் குறித்தும் வகுப்பில் கலந்துரையாடுக.
தொன்மம் இடம்பெறும் வகையில் புதுக்கவிதை எழுதி வரவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி 🙏
இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.
8012906557.
இலக்கணங்கற்க,
'தமிழ்நதி' வலையொளி பாருங்கள்.
https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w
முகநூல் பக்கத்தில் இணைய, (Facebook)
https://www.facebook.com/groups/419403600069598/?ref=share
புலனத்தில் இணைய (WhatsApp)
https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக