செவ்வாய், 15 நவம்பர், 2022

நிருவாக மேலாண்மை

 நிருவாக மேலாண்மை குறித்து இறையன்பு: 

உயர் பதவிகளில் இருப்போர் திறமைசாலிகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். 

"கல்லாரே யாயினும் கற்றாரை சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலை படுவார்" என்கிறது நாலடியார். 

சிறந்த நிர்வாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். 

வரவைத் தாண்டிய செலவு செய்பவன் நல்ல நிர்வாகியாக இருக்க முடியாது . 

ஷேக்ஸ்பியரின் டைமண்ட் பற்றிய நாடகம் நிதிநிலைமை பற்றிய மிகச்சிறந்த வாழ்வியல் விளக்கமாகும். 

அவ்வையாரும் நல்வழிப்பாடலில் வரவைத் தாண்டிய செலவு இருந்தால் மானம் அழிந்து, மதிகெட்டு, எல்லாருக்கும் பொல்லாதவனாய், ஏழ்பிறப்பும் தீயனாய் வாழும் நிலைவரும் என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.


கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...