வெள்ளி, 18 நவம்பர், 2022

பாடக் குறிப்பு இயல்8

 நாள்: (21.11.22 - 25.11.22)

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 8 

            • நமது அடையாளங்களை மீட்டவர் 

           • முகம் 

           • இரட்சணிய யாத்திரிகம் 

கற்பித்தல் நோக்கங்கள்

தமிழாய்வின் முன்னோடியாக திகழ்ந்த ஆளுமைகளின் பன்முகத்தன்மையை அறிந்து ஆய்வு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல். 

கொடையின் இன்றியமையாமையை அறிந்து கொடை வழங்கும் பண்பினை வளர்த்துக் கொள்ளுதல். 

காப்பிய நாயகர்களின் வழி வெளிப்படுத்தப்படும் பண்பு நலன்களை போற்றிப் பின்பற்ற முயலுதல். 

கற்பித்தல் உபகரணங்கள் 

இணையம், மடிக்கணினி, கரும்பலகை, படங்கள். 

ஆர்வமூட்டல் 

தமிழ் மொழிக்கு பாடுபட்ட தமிழறிஞர்களின் பெயர்களைக் கூறுக. 

உனக்கான தனித்தன்மை என்று நீ எதை கருதுகிறாய்? 

இயேசுநாதர் பற்றிய செய்திகளை கூறுக.

கற்றல் கற்பித்தல் செயல்பாடு.

ஆசிரியர் செயல்பாடு 

மயிலை சீனி வேங்கடசாமி பற்றிய செய்திகளை கூறுதல் தமிழறிஞர்களோடு இவருக்குள்ள தொடர்பை விளக்குதல். தொடக்க கால ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள், வரலாற்று ஆய்வுகள், கலையியல் ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், ஆராய்ச்சி புலமை பற்றி விரிவாக விளக்குதல். 

காலத்தால் மறைந்த தமிழரின் அடையாளங்களை மீட்ட விதம் பற்றி நயமுடன் எடுத்துரைத்தல். 

இணையம் வாயிலாக இவரின் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைக் காட்டுதல். 

வாசிப்பு பயிற்சி தருதல். ஒவ்வொருவரின் தனித்தன்மையும் சமூகத்தின் இறுக்கமான சூழலில் சிதையும் நிலையை விளக்குதல். தனித்தன்மையான முகத்தை மீட்கும் வேட்கையை உணர்த்தும் கவிதையை பொருளோடு வாசித்தல். 

 இரட்சணியயாத்திரிகம் நூல் அமைப்பை கூறுதல். எச் ஏ கிருட்டிணனார் பற்றிக் கூறுதல். 

இயேசுவின் இறுதிக் கால நிகழ்ச்சிகளைத் தொகுத்து கூறுதல் பாடலை இராகத்தோடு பாடிக் காட்டுதல் அருஞ்சொற்பொருள், இலக்கணக்குறிப்பு ,உறுப்பிலக்கணம், போன்றவற்றை விளக்குதல். 

மாணவர் செயல்பாடு 

மயிலை சீனி வேங்கடசாமி குறித்த செய்திகளை அறிந்து தொகுத்தல்.

 அறிஞர்களின் பெயர்களைப்பட்டியலிடல் உரைநடையை வாசித்து பொருள் கூறுதல் .

குறியீட்டு வடிவிலான கவிதைகளை கூறுதல். தங்களின் தனித்தன்மைகள் பற்றி கூறுதல் 

இயேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை கூறுதல் பாடலை இராகத்தோடு இணைந்து பாடுதல். இலக்கணக்குறிப்பு உறுப்பிலக்கணம் கூறுதல். 

மதிப்பீடு 

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பன்மொழிப் புலமையை விளக்குக. 

தொலைந்த முகம் - குறிப்பிடுவது எதை?

இறைமகனார் நிலை கண்டு மக்கள் புலம்பியதை விவரிக்க. 

கற்றல் விளைவுகள். 

தமிழ் அறிஞர்களின் உழைப்பையும் தமிழுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த நிலையையும் அறிந்து இன, மொழி உணர்வு பெறுதல். 

தனித்தன்மையோடு வாழக் கற்றல்.

பொறுமை அனைவரிடமும் அன்பு செலுத்துதல் இரக்கம் போன்ற உணர்வுகளைப் பெறுதல். 

தொடர்பணி.

தமிழறிஞர்களின் பணிகள் குறித்து வகுப்பறையில் படத்தொகுப்பு உருவாக்குக. 

உங்களின் நிறை, குறைகளைப் பட்டியலிடுக. 

பொறுத்தாரை இவ்வுலகம் பொன் போல் போற்றும் என்னும் தலைப்பில் கலந்துரையாடுக.

நன்றி

இராம்முருகன்,

அரசூர்.




கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...