குறு வினாக்கள்
எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
1.நகை
2.அழுகை
3.இளிவரல்
4.மருட்கை
5.அச்சம்
6.பெருமிதம்
7.வெகுளி
8.உவகை
ஒருமுக எழினி ஒருமுக எழினி குறிப்பு எழுதுக
மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்வது ஒருமுக எழினி.
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் வந்து பொருந்துவது பொருமுக எழினி.
'மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்' கவிதைக்கு பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
'எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்'
சிறுவினா
நாட்டிய அரங்கின் அமைப்பு:
• சிற்பநூலிலுள்ளபடி நன்னிலத்தைத் தேர்வு செய்தனர்.
• இருபத்துநான்கு விரலளவு கொண்ட கோலை உருவாக்கினர்.
• எழுகோல் அகலம் ,எண்கோல் நீளம் ஒருகோல் உயரத்தில் அரங்கமைத்தனர்.
•உத்தரப்பலகை இடைநிலம் அறுகோல் அளவில் இருந்தது.
• அரங்கிற்கேற்ப இருவாயில்களை அமைத்தனர்.
• தூணின் நிழல் மேடையில் விழாதவாறு அழகிய விளக்குகளையும் அமைத்தனர்.
• மேல்நிலையில் ஐம்பூதங்களையும் எழுதி ஓவியவிதானத்தையும் முத்துமாலைகளையும் அமைத்தனர்.
• ஒருமுக எழினி,பொருமுக எழினி,கரந்துவரல் எழினியைப் பொருத்தினர்.
மகா நடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
• பாலசந்திரன் சுள்ளிக்காடு மலையாளத்துக்கவிஞர்.
• நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் இரவு விருந்துக்கு ஜான்பால், ராஜீவ்நாத், பாலசந்திரன் மூவரும் சென்றனர்.
• வீடு அரண்மனை போல் இருந்தது.
• வீரபாண்டிய கட்டபொம்மன் , சத்ரபதி சிவாஜி, இராஜராஜ சோழன் வேடங்களில் கம்பீரமாக நிற்கும் சிவாஜி கணேசனின் ஓவியங்கள் வீட்டை அலங்கரித்தன.
• மூவரையும் நோக்கி, சிவாஜி கணேசன் இராஜநடை நடந்துவந்து, தன் இருக்கையில் அமர்ந்தார்.
• இராஜீவநாத் கதையைக் கூறும்போது அதற்கேற்றபடி சிவாஜி கணேசனின் உடலில் தோன்றும் தாள, லய, அபிநயங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பாலசந்திரன்.
• சிவாஜி நடித்த ருத்ரன், கர்ணன், காளிதாசன்,பாரதி போன்ற கதாபாத்திரங்கள் பாலச்சந்திரனின் மனத்தில் தோன்றி மறைந்தனர்.
• சிவாஜிகணேசன் திரைத்துறையில் தான் பெற்ற அனுபவங்களையும் விருதுகளையும் புகைப்படங்களையும் இவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
• நாடக அனுபவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசுமாறு ராஜீவநாத் கேட்க, அந்த வசனத்தை கொஞ்சமும் மறக்காமல் ஏற்ற இறக்கத்துடன் ஒரே மூச்சில் விஸ்வரூபம் எடுத்து நடித்துக் காட்டினார். மூவரும் வியந்து போயினர்.
• சிவாஜிகணேசன் பாலச்சந்திரனிடம், இராவணன் வசனத்தை பேசுமாறு கூறினார்.
• பாலச்சந்திரனும் தயங்கியவாறே இராவணன் வசனத்தை பேசி முடிக்கவும் சிவாஜிகணேசன் பாராட்டினார்.
• தன்னால் மலையாள சினிமாவில் நடிக்க இயலாமல் போனதற்காக வருந்தினார்.
•சினிமாவை விட நாடகத்தையே தான் மிகவும் விரும்புவதாகக் கூறினார்.
•அனைவரும் விருந்துண்டனர்.
சிவாஜியிடம் விடை பெற்று கிளம்பும்போது வாசல் வரை வந்து மூவரையும் வழியனுப்பி வைத்தார்.
உங்கள் ஊர் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்து கட்டுரையாக்குக.
எங்கள் ஊரில் வாழும் நாடகக் கலைஞர் கந்தசாமி. இவர் பல்வேறு நாடகங்களில் தெருக்கூத்துகளில் வேடமேற்று நடித்துள்ளார்.
வள்ளி திருமணம், அரிச்சந்திரன் போன்ற நாடகங்களில் முதன்மை வேடமேற்று உச்சகுரலில் பாடி, நடித்ததை இவர் பெருமையாகக் கூறினார்.
திருவிழாக்காலங்ளில் நாள்தோறும் ஒவ்வொரு ஊராகச் சென்று நாடகம் நடித்ததையும் தற்போது திரைப்பட மோகத்தில் நாடகம் நலிந்து வருவதையும் கூறி வருத்தப்பட்டார்.
ஒருமுறை, இவருடைய நாடகத்தைப் பார்த்த கலைவாணர் இவருக்கு ஆயிரம்ரூபாய் பரிசளித்த நிகழ்வை பெருமையுடன் கூறினார்.
கிராமங்களில் மக்கள் விடிய விடிய நாடகத்தை இரசித்துப் பார்த்த காலங்களை நினைவுகூர்ந்தார்.
தற்போது நாடகக்கலையானது அழிந்து நாடகக் கலைஞர்கள் வறுமையில் வாடுவதையும் அரசு நாடகக் கலைஞர்களுக்கு உதவ முன்வரவேண்டுமென்று கண்கலங்கப்பேசினார்.
நாடகக்கலை அழிந்து வந்தாலும் கலைஞனான தன்னால் கலையை விட்டுவிட்டு வேறுபணிக்கு செல்ல இயலாத நிலையை எண்ணி வருந்தினார்.
நாடகத்திற்காகவே வாழ வேண்டும் ; நாடக மேடையிலேயே தன் உயிர் பிரிய வேண்டும் என்ற தனது கடைசி விருப்பத்தையும் தெரிவித்தார்.
ஒரு மகத்தான கலைஞனைச் சந்தித்த மனமகிழ்ச்சியுடனும் , நாடகக் கலையின் அழிவை எண்ணி வருந்தியபடியும் அந்த இடத்தை விட்டுக்கிளம்பினேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக