திங்கள், 14 நவம்பர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு அலகுத்தேர்வு(இயல்-6)

                     அலகுத்தேர்வு 

                             இயல்6.  மதிப்பெண்கள்:35

 ஒரு மதிப்பெண் வினாக்கள் 1×5=5

1. 'ஏழ்ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னருக்கு காட்டல்' தொடரில் வெளிப்படும் செய்திகள் 

1.மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்

 2ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள். 

அ) 1சரி 2தவறு        ஆ) 1தவறு 2சரி              இ) 1தவறு 2தவறு    ஈ)1சரி 2சரி 

2. பொருத்துக. 

அ)உருவங்களைப்படம்பிடிக்கும்கருவி-                                                     1)ஜார்ஜ் மிலி 

ஆ)திரையிடும் கருவி-  2)சாப்ளின் 

இ)திரையில் கதை சொல்லும் முறை -                                   3)லூமியர் சகோதரர்கள் 

ஈ)மாடர்ன் டைம்ஸ்-    4)எடிசன் 

அ)3,4,1,2 ஆ)4,3,1,2 இ) 2,3,4,1 ஈ) 4,3,2,1 

3. நாடகம் என்பது----------- 

அ) ஒற்றைக்கோணக்கலை ஆ)இருபரிமாணக்கலை இ)முப்பரிமாணக் கலை                     ஈ)அழகுக் கலை 

4.  ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் 

அ)சிவஞான முனிவர் ஆ) மயிலை நாதர் இ)ஆறுமுக நாவலர் ஈ)இளம்பூரணர் 

5) பொருத்துக. 

அ)காதை - 1)கந்தபுராணம்.              ஆ)சருக்கம் -2)சீவக சிந்தாமணி இ)இலம்பகம் -3)சூளாமணி                ஈ)படலம் 4)சிலப்பதிகாரம்

 அ)4,3, 2,1 ஆ)3,4 ,1,2 3இ)4,2,1,3ஈ)4,3, 1,2 


எவையேனும் ஐந்து மட்டும் 5×2=10

6)ஒருமுக எழினி,பொருமுக எழினி -குறிப்பு எழுதுக.                                                

7) 'மூச்சு நின்று விட்டால்                                         பேச்சும்                                                                  அடங்கும்' கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

8) கலைப்படங்கள் பற்றி எழுதுக. 

9) காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்கள் யாவை? 

10) பாவிகம் விளக்குக. 

11)  ஆடலும்பாடலும், தொல்நெறி இலக்கண குறிப்பு தருக. 

12) பகுபதஉறுப்பிலக்கணம் தருக.                       நகை,வெகுளி 

எவையேனும் மூன்று மட்டும் 3×4=12

13) நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக. 

14) திரைப்படத்தில் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

15) கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்பு படுத்திச் சொற்சிமிழில்  அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையை கொண்டு நிறுவுக. 

16) விளக்குக:                                                            சேய்மை காட்சித் துணிப்பு                               நடுக்காட்சி துணிப்பு                                           அண்மை காட்சித் துணிவு                               மீ அண்மை காட்சித் துணிப்பு  

17) அடி பிறழாமல் எழுதுக. 1×3=3

குழல் வழி நின்றது...,. சிலப்பதிகாரம் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

எவையேனும் ஒன்று மட்டும்  1×5=5

18) மகா நடிகரைக் கண்ட பாலசந்தரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.    

19) உங்கள் ஊர் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக. 





கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...