இயல்1
குறுவினாக்கள்
1. பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
விடை :
❖ எழுத்துமொழி - எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது.
❖ பேச்சுமொழி - முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
அதனால் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்திமிக்கதாக உள்ளது.
=====================================
2. என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமணி அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! - இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
விடை :
வினையாலணையும் பெயர்கள்: தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.
=====================================
3. 'பாயிரம்' பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
விடை :
❖ நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பு
❖ அந்நூல் வழங்கும் கருத்துவளம்.
❖ இவ்விரண்டினையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.
❖ பாயிரம்: பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.
=====================================
4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
விடை :
❖ உயிரெழுத்து = உயிர் + எழுத்து - ர், மெய்யீறு
❖பன்னிரண்டு = பத்து + இரண்டு - த் + உ, உயிரீறு
❖ திருக்குறள் = திரு + குறள் - ர் + உ, உயிரீறு
❖ நாலடியார் = நான்கு + அடியார் - க் + உ, உயிரீறு
=====================================
5. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
விடை :
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை. இதுவே, இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையாகும்.
=====================================
சிறுவினா
1. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
விடை :
❖ என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே.....,
❖ காலம் காலமாகத் தமிழன்னையைப் போற்றியவர்கள்,
❖ சங்கம் அமைத்து தமிழன்னையைப் பாடியவர்கள்,
❖ தமிழ்ப்பயிர் வளர அயராது உழைத்தவர்கள்,
❖ இவ்வாறு தமிழ்மொழி வளர இடைவிடாது உழைத்தவர்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்.
❖ காற்றில் ஏறி ஒலிக்கின்ற கடலையும், நெருப்பாறுகளையும், மலைச்சிகரங்களையும் கடந்து செல் என்னும் ஒரு பாடலையும்,
❖ கபாடபுரங்களைக் கடல் விழுங்கிய பின்னரும் காலத்தால் அழியாத தொன்மையான இலக்கிய வலிமையெலாம் சேர்த்துப் பாடத்தான் வேண்டும் என்று சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.
=====================================
2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?
நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் கூறுவன.
❖ நூலின் இயல்பு
❖ மாணவர் இயல்பு
❖ ஆசிரியர் இயல்பு
❖ கற்கும் முறை.
❖ கற்பிக்கும் முறை
❖ நூலாசிரியர் பெயர்.
❖ நூல் பின்பற்றிய வழி.
❖ நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு,
❖ நூலின் பெயர்.
❖ தொகை, வகை, விரி என்பனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு,
❖ நூலில் குறிப்பிடப்படும் கருத்து.
❖ நூலைக் கேட்போர்.
❖ நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.
ஆகிய செய்திகள் முகவுரையில் இடம்பெறவேண்டும்.
=====================================
3. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவீர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக,
விடை :
❖ தொன்மையான மொழி.
❖ உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி.
❖ இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய மொழி.
❖ பொருள் இலக்கணம் கூறும் மொழி.
❖ ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி’. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது தமிழ்மொழி.
❖ ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதியால் பாராட்டப்பெற்ற தமிழ்மொழி.
❖ 'உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே' என்று பாரதிதாசனால் பாடப்பெற்ற தமிழ்மொழி. இவை யாவும் தமிழ்மொழிமேல் நாங்கள் கொண்டுள்ள பற்றாகும்.
=====================================
4. மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
விடை :
❖ மொழி முதல் எழுத்துகள் மொத்தம் - 22
❖ உயிர் எழுத்துகள் அ முதல் ஒள வரை - 12
எ.கா: அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊஞ்சல், எறும்பு, ஏணி, ஐந்து, ஒட்டகம், ஓடம், ஒளவை.
❖ க ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ் (மெய்யெழுத்துகள்) - 10
எ.கா: கப்பல், ஙனம், சக்கரம், ஞமலி, தண்ணீர், நண்பன், பந்து, மருத்துவம், யவர், வரம்.
❖ மொழி இறுதி எழுத்துகள் மொத்தம் - 24
உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 10, குற்றியலுகரம் -1.
உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
எ.கா: சில(அ), நிலா(ஆ), நரி(இ), தீ(ஈ), மிளகு(உ), பூ(ஊ), சேஎ(எ), எங்கே(ஏ), மழை(ஐ), நொ(ஒ), மலரோ(ஓ), கௌ(ஔ)
மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றும் சொல்லின் இறுதியில் வரும்.
எ.கா: மெல்லின மெய் - உரிஞ், பெண், வெரிந், அறம், மான்.
இடையின மெய் - பொய், பால், தெவ், பாழ், வாள்.
பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும், சொல்லின் இறுதியில் வருவதாகச் சேர்த்துக் கொள்வர்.
எ.கா: எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.
=====================================
நெடு வினா
நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
விடை :
பாயிரம்:
❖ நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பு.
❖ அந்நூல் வழங்கும் கருத்து வளம்.
❖ இவ்விரண்டினையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரம் ஆகும்.
❖ பாயிரமானது பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.
பொதுப்பாயிரம்:
❖ நூலின் இயல்பு
❖ மாணவர் இயல்பு
❖ ஆசிரியர் இயல்பு
❖ கற்கும் முறை.
❖ கற்பிக்கும் முறை.
என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.
சிறப்புப்பாயிரம்:
❖ நூலாசிரியர் பெயர்.
❖ நூல் பின்பற்றிய வழி.
❖ நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு,
❖ நூலின் பெயர்.
❖ தொகை, வகை, விரி என்பனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு,
❖ நூலில் குறிப்பிடப்படும் கருத்து.
❖ நூலைக் கேட்போர்.
❖ நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.
ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.
====================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக