வெள்ளி, 26 ஜூலை, 2024

புளி' என்னுஞ்சொல்லின் புணர்ச்சி

 'புளி' என்னுஞ்சொல்லின் புணர்ச்சி 

=================================

புளியம்பழம்,புளியங்கொம்பு இச்சொற்களைப்போல புளியங்குழம்பு,புளியஞ்சோறு என எழுதலாமா?


1) புளி- மரப்பெயர்ச்சொல்லாகவிருந்தால் புணர்ச்சியின் போது 'அம்' சாரியை பெற்றுப்புணரும்.


புளி+அம்+பழம்- புளியம்பழம் 

====={=============================

2. வருமொழி முதலில் வல்லின எழுத்துகளான க, ச , த எழுத்துகள் வரின் 'அம்' சாரியையின் இறுதி மகரம் (ங, ஞ, ந ) திரியும்.


புளி+அம்+காய் 

புளி+அங்+காய் ( இறுதி மகரம் ஙகரமாக திரிந்தது)

புளியங்காய்

===================================

3. வருமொழி முதலில் மெல்லினம் வரின் 'அம்' சாரியையின் இறுதிமகரம் கெடும் 


புளி+மரம் 

புளி+அம்+மரம் 

புளி+அ+மரம் ( மகரம் நீங்கியது)

புளியமரம் 

===================================

4. புளி- சுவைப்பெயர்ச்சொல்லாயின் சாரியை பெறாது இடையில் மெல்லெழுத்து மிகும்.


புளி+கூழ்- புளிங்கூழ் 


இவற்றில் வல்லெழுத்து மிகுத்து எழுதினாலும் குற்றமில்லை .


புளி+குழம்பு - புளிக்குழம்பு 


புளி+கூட்டு-புளிக்கூட்டு.


புளி+சோறு-புளிச்சோறு.


புளி என்னுஞ்சொல் மரப்பெயராகும்போது புணரும் முறையும் சுவைப்பெயராகும்போது புணரும் முறையும் மாறுபாடுள்ளதைக்காணலாம்.


இரா.முருகன்

26.07.24

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...