நாள் 29.07.24-2.8.24
வகுப்பு -பதினோராம் வகுப்பு
பாடம் -தமிழ்
தலைப்பு - இயல்3
குறுந்தொகை, புறநானூறு,. வாடிவாசல்.
கற்றல் நோக்கங்கள்
1)இலக்கியங்கள் வழி தமிழர் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து தம் வாழ்வில் கடைபிடித்தல்
2)சங்க இலக்கியப்பாடல்களின் சிறப்பையறிதல்.
3)தமிழரின் தொன்மைப்பண்பாடான ஏறு தழுவுதல் பற்றியறிதல்
கற்றல் விளைவுகள்
1)அன்பும் அறனும் இயைந்த திருமண வாழ்வைப்பற்றி அறிதல்
2)அகத்திணை இலக்கியங்கள் பற்றி அறிதல்
3)தமிழரின் வாழ்வியல் கருவூலமாக புறநானூறு விளங்குகிறதென அறிதல்.
4)சங்க இலக்கியங்கள் காட்டும் 'ஏறு தழுவுதல்' நிகழ்வை வாடிவாசல் கதையின் மூலமாக அறிதல்
துணைக் கருவிகள்
விளக்கப்படம், மடிக்கணினி, கரும்பலகை
ஆர்வமூட்டல்
சுவையான குறுந்தொகைச்செய்திகள், பண்டைய தமிழரின் பண்பாடு முதலியவற்றைக்கூறி ஆர்வமூட்டுதல்.
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
பாட அறிமுகம்
சங்க இலக்கியத்தில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அவையாவன அகத்திணை, புறத்திணை. இதில் குறுந்தொகை அகத்திணையைச் சார்ந்தது. புறநானூறு புறத்திணையைச் சார்ந்தது இவ்விரண்டும் தொகை நூல் வகையை சார்ந்தது என்று பாடத்தினை அறிமுகம் செய்தல்.
ஏறுதழுவுதல் நிகழ்வு குறித்த காணொளியைக்காட்டுதல்.
பாட வளர்ச்சி
✓திணை, துறை விளக்கம் தருதல் ✓பாடலைப்பொருளோடு வாசித்தல் ✓அருஞ்சொற்களுக்குப்பொருள் கூறுதல் பாடலுக்குத்தெளிவுரை, விளக்கவுரை, பதவுரை கூறுதல். ✓இலக்கணக்குறிப்பு பகுபத உறுப்பிலக்கணம் கூறி விளக்குதல் ✓பாடலின் பொருளைத்தொகுத்துக் கூறுதல் ✓தேவையான இடங்களில் காணொளிகளையும் துணைக் கருவிகளையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்குதல்
துணைக்கருவி பயன்பாடு
பண்டையகால திருமண நிகழ்வை விளக்க படங்களின் மூலமாக விளக்குதல்.
தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் உயர்ந்த குறிக்கோளைக் கொண்ட மனிதர்களின் படங்களைக் காட்டுதல்
ஏறுதழுவுதல் நிகழ்வை காணொளியாக மடிக்கணினி மூலம் காட்டுதல்
மாணவர் செயல்பாடு
✓பாடலைப் பதம் பிரித்து வாசித்தல் ✓பாடலின் பொருளைத் தொகுத்துக் கூறுதல் ✓திணை,துறை விளக்கம் கூறுதல் ✓குறுந்தொகை, புறநானூறு நூற்குறிப்பை அறிந்து கொண்டு கூறுதல்
✓தமிழரின் பண்டைய பண்பாடுகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்
வலுவூட்டல்
பாட கருத்துக்களை மீண்டும் எடுத்துக் கூறுதல்
பொருத்தமான துணைக்கருவிகளை பயன்படுத்தி கருத்துகளை மாணவர்கள் மனதில் இருத்தச்செய்தல்
பாடலை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுதல்
எளிய வினாக்கள் கேட்டு மாணவர்களின் அறிதல் திறனை சோதித்தல்
மதிப்பீடு
1)அகத்திணை,புறத்திணை விளக்கு 2)குறுந்தொகை நூற்குறிப்பு தருக 3)தமக்கென முயலா நோன்றாள் -தொடரைவிளக்குக
4.வாடிவாசல் கதையை சுவை குன்றாமல் தொகுத்துக்கூறுக
தொடர்பணி
திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமே விவாதிக்க
பிறர்க்கென முயலுநர் தொடருக்கு பொருத்தமாக வாழும் மனிதர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுக
இரா.முருகன்
தமிழாசிரியர் அரசுமேனிலைப்பள்ளி,ஆனையூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக