பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
ம. ரெட்டியபட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 18.02.2021 அன்று இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்தினைப்பாட விழா இனிதே துவங்கியது.
பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சு.ஜெயராஜ் அவர்கள் சிறப்பான வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு. சண்முகநாதன் தாய் மொழியின் பெருமையையும், தாய் மொழியில் கற்பதால் ஏற்படும் நன்மையையும் விளக்கினார். தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். மாணவர்கள் இலக்கியங்களைக் கற்று அதன் இன்பத்தை நுகர வேண்டும் என வேண்டினார். ஒழுக்கமும், விடாமுயற்சியும், நாட்டுப்பற்றும் மாணவப் பருவத்தில் இருக்க வேண்டிய அருங்குணங்கள் என்று எடுத்துரைத்தார். இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இலக்கிய மன்றச் செயலர் அமுதன் நன்றியுரை கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் இசைக்க, விழா இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக