திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஒன்பதாம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினா விடைகள்

 1) திராவிட மொழிகளுக்கும் மூத்த மொழியாக விளங்குவது தமிழ் மொழி ஆகும்

2)திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்

3)தமிழ் என்னும் சொல்லில் இருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

4) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் கால்டுவெல்

5)  தெலுங்கு நடுத்திராவிட மொழி ஆகும்

6) 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்

7) உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

8) இலங்கை மற்றும் சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக இருப்பது தமிழ்.

9)தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்வகை கண்ணி ஆகும்.

10) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒன்று

11) சந்து இலக்கியம் என்று பெயர்பெற்றது தூது இலக்கியம் ஆகும்.

12) தமிழ்விடு தூது 268 கண்ணிகள் கொண்டது

13)தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பதை ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது.

14) வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும்

15) பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்

16)செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டுவினை ஆகும்.

17) சிந்தாமணி என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்

18) மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு ஊருணி என்று பெயர்.

19) அடியவர் பெருமையைக் கூறும் திருத்தொண்டத் தொகையை எழுதியவர் சுந்தரர் ஆவார்.

20)திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

21)அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணமே பெரிய புராணம் ஆகும்.

22) பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்.

23) சேக்கிழார் சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்.

24) புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.

25) ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு காளைச் சண்டை ஆகும்.

26) தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மை உடையது

27)இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

28) மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

29) மணிமேகலைக் காப்பியத்திற்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.

30) வேதிகை என்பதன் பொருள் திண்ணை ஆகும்

31) வசி என்பதன் பொருள் மழை ஆகும்

32) கலாம் என்பதன் பொருள் போர் ஆகும்.

33) மணிமேகலைக் காப்பியம் பௌத்த சமயச் சார்பு உடையது

34) 'பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்' என்று கூறும் நூல் மணிமேகலை.

35) ரோமானியர்களின் பழங்காசுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் கோயம்புத்தூர்.

36) முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர்

37) நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்

38) இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்

39) ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும்

40) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

41) உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

42) உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

43)திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்

44) திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகளில் பரிமேலழகர் உரையே சிறந்தது ஆகும்

45) கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்

46)தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.

47)இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் விக்ரம் சாராபாய் ஆவார்

48) இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் அப்துல் கலாம் ஆவார்

49)செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலி சித்தாரா

50) இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்

51) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

52) பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது

53) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

54) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

55) அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது

56)சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

57)தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

58)அடையாற்றில் அவ்வை இல்லம் அமைத்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

59)தமிழக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மருத்துவர் முத்துலட்சுமி ஆவார்

60) இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே ஆவார்

61)தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் மறைமலை அடிகளின் மகளாவார்

62) பாரதிதாசனின் இயற்பெயர் கனக. சுப்புரத்தினம் ஆகும்

63) வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறியவர் பேரறிஞர் அண்ணா துரை

64) தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா

65)ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதிமகால் நூலகம் ஆகும்.

66) உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் சென்னை கன்னிமாரா நூலகம் ஆகும்

67)இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரியது திருவனந்தபுரம் நடுவண் நூலகம் ஆகும்

68)இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகமே ஆகும்

69)உலகின் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் ஆகும்

70) இராவண காவியத்தை எழுதியவர் புலவர் குழந்தை ஆவார்

71) இராவண காவியம் 3100 பாடல்களைக் கொண்டது

72) தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் புலவர் குழந்தை ஆவார்

73)ராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்ட காவியம் ராவண காவியம் ஆகும்

74) ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்

75) பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்

76) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர் ஆண்டாள்

77)ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகும்

78) நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது

79) புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது ஆகும்

80)நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகத் தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் நேதாஜி

81) இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு ஜப்பானுக்குப் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 'டோக்கியோ கேடட்ஸ்' எனப்பட்டனர்.

82) முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் மோகன் சிங் என்பவரின் தலைமையில் ஜப்பானியரால் உருவாக்கப்பட்டது.

83)தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.

84)இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் தில்லான்.

85) டோக்கியோ கேடட்ஸ் பயிற்சி பெற ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இடம் இம்பீரியல் மிலிட்டரி அகடமி.

86) இந்திய தேசிய ராணுவம்(18-03-1944) ஆங்கிலேயரை வென்று மணிப்பூர்ப் பகுதியில் மூவண்ணக் கொடியை ஏற்றிய இடம் மொய்ராங்

87) சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ஆகும்

88) மணநூல் என்று அழைக்கப்படும் நூல் சீவக சிந்தாமணி ஆகும்

89) சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர் ஆவார்.

90) திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்

91)நாட்டு விடுதலையை விட பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர் பெரியார்

92) ஈ வே ரா வுக்குப் 'பெரியார் 'எனும் பட்டம் வழங்கப்பட்ட இடம் ( 1938 நவம்பர் 13 இல்) சென்னையில் நடந்த பெண்கள் மாநாடு.

93) தந்தை 

பெரியாரைத் தெற்குஆசியாவின் சாக்கரடீஸ் 

எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்த அமைப்பு யுனெஸ்கோ மன்றம்(27-06-1970)

94) தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரைப் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

95) யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில் நெடில் ஒற்று என மூவகைப்படும்

96) ஈரசைச்சீர் களுக்கு இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்னும் வேறு பெயர்களும் உண்டு

97) யாப்பின் உறுப்புகள் எழுத்து, அசை ,சீர், தளை, அடி ,தொடை எனும் ஆறு ஆகும்

98) வேரில் பழுத்த பலா என்னும் புதினத்தின் ஆசிரியர் சு சமுத்திரம் ஆவார்

99) தளை ஏழு வகைப்படும்

💯) அடி ஐந்து வகைப்படும்

101) தொடை எட்டு வகைப்படும்.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...