வல்லினம் விதிப்படி எல்லாவிடத்திலும் மிகுமா?
புணர்ச்சியில் விதிகளைவிட பொருளே இன்றியமையாதது. இரண்டுசொற்கள் புணரும்போது நிலைமொழி வினையெச்சமானால், அதுவும் வன்றொடர் குற்றியலுகரமானால் வருமொழி முதலில் வல்லினம் இருந்தால் இடையில் வல்லொற்றுமிகுமென்பது விதி.
படித்து+பார் - படித்துப்பார்
நடித்து+கொடு - நடித்துக்கொடு
எடுத்து+காட்டு -எடுத்துக்காட்டு
ஆனால்,இவ்விதியை அப்படியே எல்லாவிடத்திலும் பயன்படுத்த முடியுமா?
கொடுக்கப்பட்ட வினாவிடைகளைப் படித்து, பார்க்காமல் எழுதிவரவும்.
'படித்து' 'பார்க்காமல்' இவ்விரண்டு சொற்களையும் புணர்ச்சிவிதிக்காக 'படித்துப்பார்க்காமல்' என்று புணர்த்தினால் பொருள் மாறிவிடும். வினாவிடைகளைப் படிக்காமலே எழுதிவரவும் என்னும்பொருளைத்தரும்.
இங்கு விதியைக்காட்டிலும் பொருளுணர்ச்சியே கவனத்தில் கொள்ளவேண்டும்.
கொடுக்கப்பட்ட வினாவிடைகளைப் படித்து, பார்க்காமல் எழுதிவரவும்.என்று புணர்த்தாமல் எழுதும்போது வினாவிடைகளை நன்குபடித்து, பின்னர் பார்க்காமல் எழுதிவரவும் என்னும்பொருளைத்தரும்.
புணர்ச்சியென்பது முதலில் பொருளுணர்ச்சியைக்காட்ட வேண்டும்.
எல்லாவிடத்திலும் அப்படியே விதிகளைத்திணிக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக