--------------_---------------------------------------------
6.07.2021. ம.ரெட்டியபட்டி .
அன்புள்ள நண்பனுக்கு,
நலம். நலமறிய ஆவல்
உன் குடும்பத்தாரின் நலத்தையும் அறிய விழைகிறேன்.
மாநிலஅளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றிருப்பதாக அறிந்து அகமிக மகிழ்ந்தேன்.
இன்றைய நிலையில் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை சுற்றுச்சூழல் மாசுபாடு.
சுற்றுச்சூழலை பேணிக்காப்பதில் மரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தக் கருத்தை உணர்த்தும் வகையிலான உன்னுடைய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இதுபோன்று மேன்மேலும் பல்வேறு பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
இனியன்
உறைமேல் முகவரி,
வளவன்,
கபிலர் தெரு,
உடன்குடி,
திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக