உயிரீறு மெய்யீறு பற்றி தொல்காப்பியர் கூறுவன.
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீரியல. (தொல் 103)
எல்லா சொற்களுக்கும் ஈற்றெழுத்தானது உயிராகவோ மெய்யாகவோ நின்று உயிரீறு மெய்யீறாக நிற்கும்.
சிலை-(ல்+ஐ) உயிரீறு
'அவற்றுள் மெய்யீறெல்லாம் புள்ளியோடு நிலையல்' (தொல் 104)
மெய்யீறு என்பது புள்ளி பெற்று நிற்கும் எழுத்துகள் ஆகும்.
மண், பறவைகள், நிலம் முதலியன.
'குற்றியலுகரமும் அற்றென மொழிப'(தொல்.105)
நிலைமொழியின் இறுதியில் குற்றியலுகர எழுத்துகளான கு சு டு து பு று இவை இடம்பெற்று அரை மாத்திரை அளவே பெறுவதால் அதனை நாம் மெய்யீறாகவே கருத வேண்டும். அல்லது குற்றியலுகர ஈறு எனக்குறிப்பிடலாம். மாறாக, உயிரீறு எனல் பிழையாகும்
உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே (தொல் 106)
நிலைமொழியின் ஈற்றில் உயிர் மெய் எழுத்துக்கள் இடம்பெற்றால் அவற்றை உயிரீறாகக் கொள்ள வேண்டும்.
தொல்காப்பியரின் கருத்துப்படி,
பன்னிரண்டு - பத்து+இரண்டு (து) குற்றியலுகர ஈறு.
நாலடியார் - நான்கு+அடியார் (கு) குற்றியலுகர ஈறு.
இவற்றை உயீரீறு எனல் பிழையென்பதால் ஆசிரியர்கள் நன்கறிந்து மாணவர்களுக்குக் கற்பிக்கவும்
நன்றி 🙏
இராம்.முருகன்
ஆனையூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக