பகுதி -அ 10×2=20
1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
2. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
3. ஒருமுக எழினி, பொருமுக எழினி-குறிப்பு எழுதுக.
4.அஞ்சத்தக்கன, அஞ்சத்தாகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
5. வறுமையும் சிறுமையும் தருவது எது?
6. பகைவராலும் அழிக்கமுடியாத அரண் எது?
7. பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக.
8. கான்-காண் பொருள் வேறுபாடு அறிந்து தொடரமைக்க.
9. பெயர்ச்சொற்களை தொடருக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க.
1. உங்களுக்கு --------(யார்) நன்மை என நினைக்கிறீர்கள்?
2. நம்முடைய ----------(தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
10. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடரமைக்க.
குதிரை, வேகம்,ஓடு,தாவு
பிரிவு-ஆ. 4×4=16
11. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
12. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
13. சொற்பொருள் பின்வரு நிலையணி- எடுத்துக்காட்டுடன் விளக்குக.
14. அகலாது அணுகாது தீக்காய்வர் போல்க
இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - இக்கறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
பிரிவு - இ. 4+2=6
15.குழல்வழி... எனத் தொடங்கும் சிலப்பதிகாரப்பாடலை அடிபிறழாமல் எழுதுக.
16. எப்பொருள்... எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
1×8=8
16. திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக