சனி, 5 ஆகஸ்ட், 2023

பதினோராம் வகுப்பு முக்கிய வினாக்கள்

 குறுவினாக்கள்

1. இனம் மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக.

2. புதுக்கவிதை விளக்குக.

3. எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்? 

4. நேரடி மொழி விளக்குக.

5. பாயிரத்தைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை? 

6. பாயிரத்தின் இரு வகைகள் யாவை?

7. சிறப்பு பாயிரத்தில் இடம்பெறும் செய்திகள் யாவை ?

8. பொதுப்பாயிரத்தில் இடம்பெறும் செய்திகள் யாவை?

9. பாயிரத்தின் சிறப்புகள் யாவை? 

10. அணிந்துரை புணர்ச்சி விதி கூறுக.

11. நன்னூல் நூற்குறிப்பு தருக.

12. மொழி முதல் எழுத்துக்கள் யாவை?

13. மொழி இறுதி எழுத்துக்கள் யாவை?

14. உயிரீறு மெய்யீறு விளக்குக.

15. உயிர்முதல் மெய்ம்முதல் விளக்குக.

16. குற்றியலுகர ஈறு விளக்குக.

17. குரங்குக்குட்டி புணர்ச்சியை விளக்குக.

18. உயிரெழுத்து பன்னிரண்டு திருக்குறள் நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துக்கள் அமைந்துள்ளன?

19. தொழுஉரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? 

20. மதிப்புக்கூட்டுப் பொருள் விளக்குக.

21. பனை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் யாவை?

22. ஏதிலிக்குருவிகள் எங்கோ போயின இத்தொடரின் பொருள் யாது? 

23. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?

24.பள்ளு இலக்கிய வகை குறித்து எழுதுக.

25. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் யாவை? 

26. உடம்படுமெய் புணர்ச்சி விளக்குக.

27. குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

28. ய் வ் ஞ் ட் ற் ந் -வேற்றுநிலை உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

29. கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

30. காவடிச்சிந்து என்பது யாது?

31. குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?

32. தமிழர்கள் புகழ் பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?

33. பகுபத உறுப்புகள் எத்தனை அவை யாவை?

34. விகுதிகள் எவற்றை உணர்த்தும்?

35. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

36. பொதுவியல் திணை விளக்குக.

37. பொருண்மொழிக்காஞ்சித்துறை விளக்குக.

38. திருப்புகழ் புணர்ச்சி விதி தருக.

39. கலை களை கழை மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

40. தமிழ்நாட்டின் மாநில மரம் சிறு குறிப்பு வரைக.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...