வெள்ளி, 24 ஜூன், 2022

பன்னிரண்டாம் வகுப்பு வினா விடைகள்

                     இளந்தமிழே 

குறுவினா 

1)கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

            அ) அந்திநேரத்தில் மேற்கு வானில் கதிரவன் மறையும் எழில் காட்சி. 

            ஆ) வியர்வை சிந்தி கடுமையாய் உழைத்துச் சிவந்த கைகளை உடைய தொழிலாளியின் நிலை .
இவற்றை பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் கவிஞர் சிற்பி.

சிறுவினா

2) 'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்'/ தொடர் வெளிப்படுத்தும் காட்சி விளக்குக
          கதிரவன் மாலையில் மேற்குத் திசையில், செந்நிறஒளி பரப்பி வானத்தைச் செம்மை ஆக்குகிறான். அக்காட்சி சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்த பூக்காடு போல இருப்பதாய் சிற்பி கூறுகிறார்.

நெடுவினா

1.  தமிழின் சீரிளமைத் திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.

பொன்னிற பூக்காடே!: மேற்கில் மழையில் மறையும் கதிரவன் செந்நிற மொழியால் வானத்தைச் செந்நிறம் ஆக்குகிறது. அது செந்நிற பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.

 வருந்தி உழைக்கும் பாட்டாளி!:      
             வருந்திஉழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறி உள்ளது. தோள்களில் முத்து முத்தாய் வியர்வை தோன்றுகின்றது.

 கவி பாட நீயே துணை! 
          அந்திவானத்தின் செந்நிறக்காட்சி உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக்கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை 

சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி!:
       உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ். பலநூல்கள் உருவாகக் காரணமாக இருந்தது. சிறப்புமிக்கதமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலு வீற்றிருந்து. 

அந்த நாளும் வந்திடாதோ?:
        மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும். அவர்களுக்கு ஆதரவளித்த பாரிபோன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர் அத்தகைய சிறப்புகள் மீண்டும்வர தமிழ்க் குயிலே கூவிடு.

சிங்கமே தடைகளை தகர்த்திடு: சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அது போல் பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றை தகர்த்திடு.
-------------------------------------------------------------------

    தமிழ்மொழியின் நடைஅழகியல்
 
குறுவினா 

1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.
             நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுவன:
       நடைபெற்றியலும்

       நடைநவின்றொழுகும்

        ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி.

2. 'படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை
கடாஅ யானை கலிமாண் பேக'
இச்சங்க கவிதையின் அடிகளிலுள்ள ஓசை நயம் மிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

 ஓசைநயமிக்க சொற்கள்
           படாஅம்,கெடாஅ,கடாஅ

இவற்றிற்கான இலக்கணக்குறிப்பு
            இசைநிறை அளபெடை .

சிறுவினா 

1. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒருபண்பாகும் விளக்குக.
சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம்
 தொன்மையான மொழிகள் சைகை மற்றும் இசையிலிருந்து தான் தொடங்குகின்றன. மொழிசார்ந்த கவிதை இசையோடு பிறக்கிறது ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்கின்றன. இதுவே பாடலின் 'ஒலி பின்னல்' ஆகும். எழுத்துக்கள் எழுப்பும் ஒலிக்கோலம் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக இவற்றில் அமைந்துள்ள படாஅம்,கெடாஅ,கடாஅ எனும் சொற்கள் வன்மை உணர்வை வெளிப்படுத்தி ஒலிக்கோலம் செய்கின்றன.
சொல் மீண்டும் வந்து எழுப்பும் ஒலி கோலம்
" புணரின் புணராது பொருளே பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே" இதில் புணர் என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒலிக்கோலம் செய்கிறது.

 மீண்டும் மீண்டும் வந்து எழுப்பும் ஒலிக்கோலம்
 நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை இதில் 'தந்தை' என்னும் சொல் நான்கு சீர்களிலும் சந்தநயத்துடன் வந்து ஒலிக்கோலம் செய்கிறது

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...