எவையேனும் ஐந்தனுக்கு மட்டும் விடையளி. 5×2=10
1. இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையைக் குறிப்பிடுக.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை என இரசூல் கம்சதேவ் இனம் மொழி குறித்த தம் பார்வையாக குறிப்பிடுகிறார்.
2. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்திமிக்கது ஏன்?
எழுத்து மொழி பேச்சு மொழிக்கு திரும்பும்போது வெளிப்பாட்டு சக்தி அதிகம் கொண்டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டை தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சி வெளிப்பாடு சக்தி மிக்கதாக உள்ளது.
3. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துக்கள் அமைந்துள்ளன?
உயிரெழுத்து, பன்னிரண்டு -குற்றியலுகர ஈறு
திருக்குறள் நாலடியார் -மெய்யீறு.
4.குரங்குக்குட்டி -புணர்ச்சிவிதி கூறுக.
சில மென்றொடர் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி குரங்கு+ குட்டி =குரங்கு குட்டி ஆனது.
5. ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின தொடரின் பொருள் யாது ?
மனிதனை அண்டி வாழ்ந்த குருவிகள், மரங்களின் கிளைகளில் அமர்ந்து பாடி, ஒலியெழுப்பிய காலம் ஒன்றுண்டு. மரங்கள் வெட்டப்பட்டன; வான் மழை பொய்ததது. அதனால், இன்று மரங்கள் இல்லை; அண்டி வாழும் குருவிகள் இல்லை. அவை தம் இருப்பிடம் இழந்து வாழ வழியின்றி ஏதிலியாய் எங்கோ மறைந்து போயின என கூறப்பட்டுள்ளது.
இரண்டனுக்கு விடையளி. 2×5=10
1.சு வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றை குறிப்பிடுகிறார்?
இறைவனுக்கும் நாட்டுக்கும் வணக்கம் செலுத்துவது மொழியை வாழ்த்துவதும் மரபாகும். ஏடு தொடக்கி வைத்த தமிழன்னை விரலால் மண்ணின் தீட்டி எழுத கற்பித்து அம்மக்கள் நான்கு திசைகளையும் சுவராக கொண்டு எழுத கற்பித்ததை சுட்டுகிறார். இச்செய்திகளை மனதில் பதியவைக்கும் விதமாக புதுக்கவிதையில் தமிழனின் பெருமைகளைப் பாடிய பல்லாண்டு வாழ்த்தும் தமிழ்த்தாய்க்கு பொருந்துவதாக உள்ளது.
2. 'என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவீர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.
எனக்கு உயிர் தந்தவள் தாய் தான் ஊட்டிய பாலோடு உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். அந்த தமிழ் என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளை புரிந்து கொண்டேன் தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாரதிதாசன் கூறியதையும் தெளிந்தேன். 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ் பொருளையும் அறிந்தேன். அதனால் என் தாய்த்தமிழை உயிரினும் மேலாக மதிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக