சனி, 30 ஜனவரி, 2021

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக

அரசுப் பொருட்காட்சிககு சென்று வந்த நிகழ்வு
முன்னுரை
எங்கள் ஊர் மதுரை மாநகரம் ஆகும்.
மதுரை சித்திரைத்திருவிழாவின் போது அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெறும்.
பொருட்காட்சி அமைவிடம்
சித்திரைப் பொருட்காட்சி மதுரையில் தமுக்கம் மைதானத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நாள் குடும்பத்துடன் பொருட்காட்சிக்கு சென்று  கண்டுகளித்து வந்தோம்.
பல்துறை அரங்குகள்
அரசு சார்பாக நடத்தப்படுகின்ற பொருட்காட்சியாக இருப்பதால் காவல்துறை, சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, விளம்பரத்துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை சார்பாக தனித்தனி அரங்குகள் எங்கள் கண்களை கவர்ந்தன. வண்ண விளக்குகளுடன் ஏராளமாக புகைப்படங்களும் செய்முறை காட்சிகளும் அந்த அரங்கில் பார்ப்பவர்கள் மனத்துக்கு விருந்தாக அமைந்தன.
விளையாட்டு அரங்குகள்
சிறுவர்கள் பெரியவர்கள் பொழுதுபோக்க ஏராளமான விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இராட்டினங்கள், ஊஞ்சல், மின்சார தொடர்வண்டிகள், இராட்சத ராட்டினங்கள் போன்றவற்றில் நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.
உணவு அரங்குகள்
பொருட்காட்சிக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் அங்கே தென்னிந்திய உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள், பலகாரங்கள், குளிர்பானங்கள் என்று நிறைய உணவு அரங்குகள் இருந்தன.
 நாங்கள் வயிறார உண்டு மகிழ்ந்தோம்.
விளையாட்டுப் பொருட்கள் பொருட்காட்சியில் குழந்தைகள் விளையாடி மகிழ, எண்ணற்ற விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நடைபெற்றது. மேலும் பலவகையான வீட்டு உபயோகப் பொருட்கள்
 விற்பனையும் நடந்தது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம்
முடிவுரை
குடும்பத்துடன் சென்று பொருட்காட்சியை கண்டுகளித்து, மனம் மகிழ விளையாடி, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு
மகிழ்ச்சியாக நாளை கழித்தது என்னால் என்றும் மறக்க இயலாது.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...