ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை
  கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பலும், அவர்களின் எளிமையான உணவும், இயல்பான வரவேற்பும், பசித்த வேளையில் வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற நேயத்தை பற்றியும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
அன்னமய்யாவும் விருந்தாளியும்
சுப்பையாவின் புஞ்சையில் அருகுஎடுத்துக் கொண்டிருந்தபோது, அன்னமய்யா யாரோ ஒரு சந்நியாசியை கூட்டிக்கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தார்.
விருந்தாளியின் நிலை
அழுக்கு உடையும், தாடியுமாக நடக்க முடியாமல் தள்ளாடி வந்தவர் அப்படியே ஒரு புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்தார் பசியால் வாடியஉடலும், சோர்வடைந்தகண்களும், களைப்புடனும் காணப்பட்டார்.
அன்னமய்யாவின் உபசரிப்பு
அன்னமய்யா அருகில் சென்று பார்த்ததும், சோர்வாக காணப்பட்ட மனிதர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். உடனே, அன்னமையா அருகு எடுத்துக்கொண்டிருக்கும் கொத்தாளிகள் கொண்டுவந்த மண் கலயத்தில் இருந்து நீச்ச தண்ணியை சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தார்.
சம்சாரி மக்களின் எளிய விருந்தோம்பல்
விருந்தாளி களைப்பாறியதும், அவரை அழைத்துக்கொண்டு சுப்பையா புஞ்சைக்கு வந்தார் அன்னமய்யா.அங்கிருந்த சம்சாரிகள் இருவரையும் வரவேற்று தங்களுடன் சாப்பிடும்படி கூறினார் அவர்கள் சாப்பிடுவதற்காக கம்மஞ்சோற்றையும்,காணத்துவையலையும் தந்தார்கள்.
இடது கையில் கம்மஞ்சோற்று உருண்டைகளை வாங்கி, வலது கையால் துவையலைத்தொட்டுக் கொண்டு இரண்டு உருண்டைகள் சாப்பிட்டனர்.
விருந்தாளியின் நன்றியுணர்வு விருந்தாளி தன்னை 'மணி' என்று அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடையபசியையும், களைப்பையும் நீக்கிய எளிய மக்களின் உணவையும் உபசரிப்பையும் கண்டு மனம் மகிழ்ந்தார் எளிய மனிதர்களிடம் உள்ள பாசமும், பகிர்ந்து உண்ணும் நேயமும் அவரை வியக்க வைத்தது.
முடிவுரை
"பசித்த வயிற்றுக்கு சோறிடல்" வேண்டும் என்ற பண்பாடு ஏழை எளிய மனிதர்களிடம் காணப்படுவது நமது பண்பாட்டின் சிறப்பம்சமே.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...