ஒவ்வொரு மனிதனுடைய இளமைப் பருவத்தில் நெஞ்சுக்கூட்டுக்குள் ஆயிரம்வண்ணத்துப் பூச்சிகளையும் கனவுகள் தோறும் தேவதைகளை வலம் வரச் செய்யும் உணர்வும் தான் காதல் காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் பெரிய வரம் இவ்வரம் வாய்க்கப் பெற்றோர் மிகச் சிலரே இந்த காதலர்களின் இலக்கணமாக குறுந்தொகை அற்புதமான ஒரு பாடலைத் தருகிறது காதல் வயப்பட்ட ஒருவன் அல்லது ஒருத்திக்கு காலைபகல் மாலை யாமம் விடியல் என்று பொழுதுகள் தெரியவரின் அந்தக் காதல் உண்மையானதன்று காதல் வயப்பட்ட மனதிற்கு இது இரவா பகலா என்று வேறுபாடின்றி தான் விரும்பியவரையே மனம் தேடும்
குறுந்தொகை பாடல்32
"காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலுமென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் மாவென மடலோடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவு தலை வரினே!
##அள்ளூர் நன்முல்லையார்
விளக்கம்
காதல் வயப்பட்ட தலைவன் தன் ஆற்றாமையை தோழியிடம் கூறுகிறான் காலை பகல் மாலை ஊரேஉறங்கும் யாமம் விடியல் என பொழுதுகளுக்கு இடைப்பட்ட காலம் தெரியுமானால் அவர் கொண்ட காதல் பொய்யானது என் தலைவியிடம் நான் கொண்ட காதலை மடல் ஏறி நான் மெய்ப்பிக்கலாம் என்றால் அதுவும் அவளுக்கு பழியைத் தரும்அப்படி வெளிக்காட்டாமல் வாழ்தலும் கொடுமை அதைவிட சாதல் உயர்ந்தது இந்த பிரிவை என்னால் பொறுக்க இயலவில்லை
###
இராம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக