புதன், 30 மார்ச், 2022

பன்னிரண்டாம் வகுப்பு -இயல்1சிறுதேர்வு

                                      அரசுமேல்நிலைப்பள்ளி,அரசூர்                                   .                                                      பன்னிரண்டாம் வகுப்பு 

சிறுதேர்வு-இயல்1                                  மதிப்பெண்கள்:30     நேரம்:1மணி                        அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                                                                      10×1=10

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப்பேசுகின்ற இலக்கணநூல்--------

அ) யாப்பெருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்

இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்

2)கவிஞர் சிற்பி எழுதிய எந்தக்கவிதைநூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?

அ. ஒளிப்பறவை ஆ. சர்ப்பயாகம் இ. ஒரு கிராமத்து நதி  ஈ. நிலவுப்பூ

3) ‘வியர்வைவெள்ளம்' – இலக்கணக்குறிப்பு தருக.

அ)உவமைத்தொடர் ஆ)உருவகத்தொடர் இ)வினையெச்சம் ஈ)பண்புத்தொகை

4) ‘காவியதர்சம்' என்ற வடமொழி இலக்கணநூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்டநூல்----- 

அ. மாறனலங்காரம் ஆ)தொல்காப்பியம் இ)வீரசோழியம் ஈ) தண்டியலங்காரம்

5) எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி கூறும் நூல்

அ)சூரியோதயம் ஆ)ககர்மயோகி இ)வம்சமணி தீபிகை ஈ)லோகோபகாரி

6) பிழையானதொடரைத் திருத்தி எழுதுக.

காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

7) பேச்சுவழக்கை திருத்தி எழுதுக.

அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும் 

8. பொருத்துக

அ) தமிழ் அழகியல் -  1.பரலி சு நெல்லையப்பர்

ஆ) நிலவுப்பூ.                – 2.தி. சு. நடராசன்

இ) கிடை.               -           3. சிற்பி. பாலசுப்பிரமணியம்

ஈ) உய்யும் வழி           - 4.கி. ராஜநாராயணன்

அ) 2, 3, 4, 1. ஆ ) 4 3 1‌ 2  இ) 2, 3, 1, 4  ஈ) 3, 2 , 4 , 1

9. கலைச்சொல் தருக.1.subscription         2. Fiction 

10. உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைக்க.

                உள்ளங்கை நெல்லிக்கனி போல

எவையேனும் மூன்றனுக்கு விடையளி.                                                                 3×2=6

9. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தைக் ககுறிப்பிடுக

10. கவிஞர் சிற்பி எவற்றை வியந்துபாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

11. விடியல், வனப்பு இருசொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க.

12.வியந்து – பகுபதஉறுப்பிலக்கணம் தருக. 

எவையேனும் மூன்றனுக்கு விடையளி.                                                                        3×3=9

13. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒருபண்பாகும்- விளக்குக.

14 ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக

15. ‘செம்பரிதி மலைமுகட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப்பூக்காடாம் வானமெல்லாம்'-தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

16. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் யாவை?

எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.                                                                                  1×5=5

17. தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர்.சிற்பி.பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.

18. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

வினாத்தாள் தயாரிப்பு: இராம்முருகன்.முதுகலைத்தமிழாசிரியர்,அரசூர்





கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...