பத்தாம் வகுப்பு
மாதிரி திருப்புதல் தேர்வு
அ.சரியான விடையைத் தேர்வு செய்யவும். 1×7=7
1. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது-தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ.பாடிய;கேட்டவர் ஆ. பாடல்; பாடிய
இ. கேட்டவர்; பாடிய ஈ. பாடல்; கேட்டவர்
2.எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்
எந்+தமிழ்+ நா ஆ.எந்த+ தமிழ்+ நா இ. எம்+ தமிழ்+ நா ஈ.எந்தம்+ தமிழ்+நா
3. உனக்கு பாட்டுகள்பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயஙகள் யாவை?
அ.உருவகம் எதுகை ஆ.மோனை எதுகை இ.முரண் இயைபு ஈ.உவமை எதுகை.
4. பெரிய மீசை சிரித்தார் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ.பண்புத்தொகை ஆ.உவமைத் தொகை இ.அன்மொழித் தொகை ஈ.உம்மைத் தொகை.
5. அறிஞருக்கு நூல் ,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது
அ.வேற்றுமை உருபு ஆ.எழுவாய் இ.உவம உருபு ஈ.உரிச்சொல்
6. அரிய கவிதைகளின் தொகுப்பு இது இத்தொடரில் இடம்பெற்ற தொடர் வகையை சுட்டுக.
அ.வினைமுற்றுத்தொடர் ஆ.பெயரெச்சத் தொடர் இ.வினையெச்சத் தொடர் ஈ.வேற்றுமைத் தொடர்
7. அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார். வண்ணமிட்ட தொகைச்சொற்களை வகைப்படுத்து.
அ.இருபெயரொட்டுப் பண்புத்தொகை, வினைத்தொகை ஆ.உம்மைத்தொகை ,எண்ணும்மை இ.உவமைத்தொகை, வேற்றுமைத்தொகை ஈ.பண்புத்தொகை, அன்மொழித்தகை
ஆ. எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளி. 5×2=10
8. வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
9. 'உடுப்பதூம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்' இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
10. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
11. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாய் உடன் தொடரும் பயனிலைகள் யாவை?
12. பொறித்த- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
13. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
பொதுஅறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
இ. எவையேனும் மூன்று 3×3=9 வினாக்களுக்குமட்டும் விடையளி.
14. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள் வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.- இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
15. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'.இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
16. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
17. தொழிற்பெயருக்கும் வினையாலணையும்பெயருக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
3×4=12
ஈ. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி.
18. அன்னை மொழியே... எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
19. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
இக்குறட்பாவினைச் சீர் பிரித்து அலகிட்டுவாய்பாடு எழுதுக.
20. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை சுட்டிக்காட்டி விளக்குக.
21. 'எப்பொருள்' எனத் தொடங்கும் குறளையும் 'விடல்' என முடியும் குறளைம் அடிபிறழாமல் எழுதுக.
உ. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி. 2×6=12
22. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றைத் தயாரிக்க.
23 அன்னமய்யா பெயருக்கும் குணநலனுக்கும் இடையே உள்ள பொருத்தப்பாட்டினை கி.இராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் கதை வழியாக நிறுவுக.
24. சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக