புதன், 22 நவம்பர், 2023

பதினோராம் வகுப்பு தமிழ் -முக்கிய வினாக்கள்

                                     பதினோராம் வகுப்பு முக்கிய வினாக்கள்

குறுவினாக்கள்

1. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?

2. பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது

3. உயிரெழுத்து ,பன்னிரண்டு, திருக்குறள் , நாலடியார்- இச்சொற்களில் எவ்வகை ஈற்று எழுத்துக்கள் அமைந்துள்ளன?

4. இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

5. உயிரீறு மெய்யீறு விளக்குக

6. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை அவை யாவை?

7. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக.

8. தமிழ்நாட்டின் மாநில மரம் சிறு குறிப்பு வரைக

9. ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின- தொடரின் பொருள் யாது?

10. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?

11. ய் வ் ஞ் ட் ற் ந் மெய்களுக்கான வேற்றுநிலை உடல்நிலை மெய் மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

12. மதிப்புக்கூட்டு பொருள் விளக்குக.

13. தொழு உரம் விளக்குக.

14. குற்றியலுகரப்புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

15. விதி வேறுபாடு அறிந்து விளக்குக

தன்னொற்றிரட்டல்-தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் இனமிகல்- வன்மைக்கு இனமா திரிபவும் ஆகும்.

16. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

17. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

18. கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

19. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?

20. பொதுவியல் திணை விளக்குக

21. தீயினார் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?

22. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

23. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

24. சங்ககாலத்தில் தமிழ் மொழியின் நிலை பற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?

25. உவமை, உருவகம் வேறுபடுத்துக

26. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?

27. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

28. ஆனந்தரங்கனின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

29. ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

30. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

31. மருத்துவத்தின் பிரிவுகளாக குறள் கூறுவன யாவை?

32. படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை

33. கலைச்சொல்லாக்கம் பொருள் தருக.

34. கலைச் சொல்லாக்கப்பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?

35. இந்தியக் கட்டடக்கலையின் மூன்று வகைகள் யாவை

36. அயர்ந்து எழுந்த- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

37. ஆக்கப் பெயர் விகுதிகள் யாவை?

38. நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

39. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?

40. செந்துறைப் பாடாண் பாட்டு விளக்கம் தருக

41. ஒழுக்கமும் பொறையும் உனைப் போல் யார்க்குள- இவ்வடி எதனை குறிப்பிடுகிறது?

42. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றை கூறுகிறார்?

சிறுவினாக்கள்

43. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றை குறிப்பிடுகிறார்?

44. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?

45. மொழி முதல் இறுதி எழுத்துகள் யாவை ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக?

46. வேதி கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்கு சாத்தியமா நம் கருத்தை எழுதுக

47. சலச வாதியில் செங்கயல் பாயும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக

48. மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

49. தமிழ் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக

50. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக

51. சொற்பொருள் பின்வருநிலையணி விளக்குக

52. புகழுக்குரிய பண்புகளாக நீவீர் கருதுவன யாவை புகழின் பெருமையை பொதுமறை வழி நின்று கூறுக

53. சமணப் பள்ளிகளும் பெண் கல்வியும் குறிப்பு வரைக

54. உள்ளுறை உவமை இறைச்சி எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

55. கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது யாது?

56. மருவில்லாத அரசென இருந்த மாநகர் உவமையை பொருளுடன் விளக்குக

57. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை கூறுக

58. உருவாக அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

59. மருந்து மருத்துவர் மருத்துவம் ஆகியன பற்றி திருக்குறள் கூறுவன யாவை?

60. ஃபிரஸ்கோ ஓவியங்கள் கற்றளி கோவில்கள் குறித்து நீர் அறிவன யாவை?

61. கலைச்சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

62. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாக குற்றால குறவஞ்சி ஒருவன யாவை?

63. உணவும் உறக்கமும் அணில் கனவாம் உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.

64. பாடாண் திணை விளக்குக.

65. ஜீவாவின் பேச்சு நடை குறித்து சுந்தரராமசாமி கூறுவன யாவை?

66. உயர் தமிழை உயிர் என்று போற்றுமின்கள் இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.

67. சேர நாடு செல்வ வளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய காரணங்களை குறிப்பிடுக.

68. வாய்க்காலின் சிறப்புகளாக குறிப்பிடப்படுவன யாவை?

69. தாமஸிகம் என்றால் என்ன?


மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...